நிதீஷ்குமார் பங்கேற்ற கூட்டத்தில் கேம் விளையாடிய போலீஸ் அதிகாரிகள்

Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (15)
Advertisement
பீகார், நிதீஷ்குமார்  கூட்டம், கேம், விளையாட்டு, போலீஸ், அதிகாரிகள்

பாட்னா: போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் செல்போனில் கேம் விளையாடிகொண்டிருந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் முதல்வர் தவிர, டிஜிபி., தாகூர்,மாநில தலைமைசெயலாளர் அஞ்சானி குமார் சிங், உள்துறை செயலர் அமிர் சுபாணி, முதலமைச்சரின் செயலாளர் சஞ்சல் குமார் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவர் அவரது மொபைல் போனில் விளையாடினார். மற்றொரு அதிகாரி பார்த்ததும் அதை நிறுத்திக்கொண்டார். மற்ற போலீஸ் அதிகாரிகள், சமீபத்தில் பிரதமர் மோடி, அரசு பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரை சந்தித்த புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
30-ஜூன்-201708:48:40 IST Report Abuse
Srinivasan Kannaiya நாள் தோறும் மன உளைச்சலில் இருக்கும் அந்த காவலர் ..பாவம் மனம் இலகுவாக கேம் விளையாடி இருப்பார்...
Rate this:
Share this comment
Cancel
மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா
30-ஜூன்-201707:17:31 IST Report Abuse
மு. செந்தமிழன் ஒரு சராசரி மனிதனின் இயல்பு. ஆசிரியர் பாடம் நடத்தும்போது நாம் வேறு எங்காவது கவனிப்பது இல்லையா? அதுபோல்தான் இதுவும். காவல்துறையில் இருப்பதால் அவர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல. ரோபோடிக் போல் செயல் பட.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
30-ஜூன்-201706:03:19 IST Report Abuse
Giridharan S இவராவது பரவாயில்லை செல் போனில் கேம் தான் விளையாடறாரு நம்ம ஆளுங்க தூங்கிட்டு இருந்தாங்க அதற்கு பல காரணங்களை சொல்லி சமாளிச்சாங்க. எத்தனை நேரம்தான் மொட்டு மொட்டுனு உட்கார்ந்துட்டு இருப்பாரு. அவரும் மனிதன்தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X