நிதீஷ்குமார் பங்கேற்ற கூட்டத்தில் கேம் விளையாடிய போலீஸ் அதிகாரிகள்| Dinamalar

நிதீஷ்குமார் பங்கேற்ற கூட்டத்தில் கேம் விளையாடிய போலீஸ் அதிகாரிகள்

Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (15)
Share
பீகார், நிதீஷ்குமார்  கூட்டம், கேம், விளையாட்டு, போலீஸ், அதிகாரிகள்

பாட்னா: போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் செல்போனில் கேம் விளையாடிகொண்டிருந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தில் முதல்வர் தவிர, டிஜிபி., தாகூர்,மாநில தலைமைசெயலாளர் அஞ்சானி குமார் சிங், உள்துறை செயலர் அமிர் சுபாணி, முதலமைச்சரின் செயலாளர் சஞ்சல் குமார் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவர் அவரது மொபைல் போனில் விளையாடினார். மற்றொரு அதிகாரி பார்த்ததும் அதை நிறுத்திக்கொண்டார். மற்ற போலீஸ் அதிகாரிகள், சமீபத்தில் பிரதமர் மோடி, அரசு பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோரை சந்தித்த புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X