அமைச்சருக்கே ஜி.எஸ்.டி குறித்த புரிதல் இல்லை

Added : ஜூன் 29, 2017 | கருத்துகள் (2)
Advertisement
GST,Goods and Services Tax,ஜி.எஸ்.டி.

லக்னோ: ஜி.எஸ்.டி., நாளை(ஜூன்-30) நள்ளிரவு அமலாகவுள்ள நிலையில் உ.பி., அமைச்சர் ஒருவருக்கு ஜி.எஸ்.டி., குறித்த சரியான புரிதல் இல்லாதது. அம்பலமாகியுள்ளது.
உ.பி., யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. ஜி.எஸ்.டி., அமலாகவுள்ள நிலையில் கடந்த 14ம் தேதி அம்மாநில முதல்வர் தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களிடமும் மூத்த அதிகாரிகளிடம் ஜி.எஸ்.டி., கொள்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து அம்மாநில சமூகநலத்துறை மற்றும் பிற்படுத்தப்போடார் நலத்துறை அமைச்சர் ராமாபதி சாஸ்திரி உள்ளூர் வர்த்தகர்களுடனான ஜி.எஸ்.டி., விளக்க சந்திப்பில் பேசியபோது ஜி.எஸ்.டி. யில் முழு விரிவாக்கம் தெரியாமல் திணறினார். இது கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்கள சந்திப்பில் இது குறித்து கேள்வி எழுப்பட்டபோது ‛‛ ஜி.எஸ்.டி.,யின் விரிவாக்கம் எனக்கு தெரியும். ஜி.எஸ்.டி., குறித்த பல ஆவணங்கள் மூலம் அது குறித்து முழு விபரங்களை அறிந்து வருகிறேன்.'' இவ்வாறு கூறினார்.

ஜி.எஸ்.டி., அமலாவதற்கு நாளை ஒரு நாள் தான் அவகாசம் உள்ள நிலையில் அமைச்சருக்கே ஜி.எஸ்.டி.,குறித்த சரியான புரிதல் இல்லாமல் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஜூன்-201710:47:08 IST Report Abuse
எப்போதும் வென்றான் போட்ட அருண் ஜெட்லீக்கே புரியவில்லையாம்....
Rate this:
Share this comment
Cancel
Joseph Rajan - Pondicherry,இந்தியா
29-ஜூன்-201723:34:44 IST Report Abuse
Joseph Rajan முதல்ல மோடி க்கு புரிந்ததா ன்னு செக் பண்ணுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X