பதிவு செய்த நாள் :
 ஜி.எஸ்.டி.,GST, புதுடில்லி,New Delhi, சரக்கு மற்றும் சேவை வரி , Goods and Service Tax, பா.ஜ அரசு,BJP Government, காங்கிரஸ், Congress,திரிணமுல் காங்கிரஸ், Trinamool Congress, தி.மு.க., DMK, பொருளாதார வளர்ச்சி,Economic Growth, காங்கிரஸ் அரசு, Congress Government,பிரதமர் ராஜிவ்,Prime Minister Rajiv, நிதியமைச்சர், Finance Minister, வி.பி.சிங், VP Singh, மத்திய அரசு, Central government

புதுடில்லி: கடந்த, 30 ஆண்டுகள் காத்திருப்புக் குப் பின், புதிய ஒற்றை வரி முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, இன்று நள்ளிரவு முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

 ஜி.எஸ்.டி.,GST, புதுடில்லி,New Delhi, சரக்கு மற்றும் சேவை வரி , Goods and Service Tax, பா.ஜ அரசு,BJP Government, காங்கிரஸ், Congress,திரிணமுல் காங்கிரஸ், Trinamool Congress, தி.மு.க., DMK, பொருளாதார வளர்ச்சி,Economic Growth, காங்கிரஸ் அரசு, Congress Government,பிரதமர் ராஜிவ்,Prime Minister Rajiv, நிதியமைச்சர், Finance Minister, வி.பி.சிங், VP Singh, மத்திய அரசு, Central government


இதை அறிமுகம் செய்வதற்கு, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., ஆகியகட்சி கள், இதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.'இந்த புதிய வரியை அறிமுகப்படுத்திய காங்., கட்சியே, விழாவை புறக்கணிப்பதா...' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக, அன்னிய முதலீட்டை ஈர்க்கும் புதிய முயற்சியை, 1990களில், அப்போதைய காங்கிரஸ் அரசு மேற்கொண்டது. அதற்கு முன்னதாகவே, 1986 - 87ல், பிரதமர் ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய நிதியமைச்சர், வி.பி.சிங், 'மாட்வாட்' என்ற வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்தார்.
இதுவே, நாட்டின் வரி விதிப்பு முறை சீர்திருத் தங்களின் முதல் முயற்சி. அதைத் தொடர்ந்தே,

'வாட்' வரி விதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. அந்த வரிசையில், 30 ஆண்டுகளுக் குப் பின், மிகப் பெரிய வரி சீர்திருத்த நடவடிக்கையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, தற்போது கொண்டு வரப்பட்டு உள்ளது.

மைய மண்டபம்:

பலமுனை வரிகளுக்கு மாற்றாக, நாடு முழு தும், ஒரே வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதை அறிமுகம் செய்யும் வகையில், மிகப் பெரிய விழாவுக்கு, மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.இன்று இரவு, 12:00 மணிக்கு, பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி,துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, பிரதமர், நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விழாவை புறக்கணிப்பதாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் தெரிவித்தார். அதேபோல், தி.மு.க.,வும் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரான, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சிறப்பு விருந்தின ராக அழைத்துள்ளதால், விழாவில் பங்கேற்பது தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே இரு வேறு கருத்துகள் நிலவி வந்தன. இந்நிலையில், மன்மோகன் சிங்கை, காங்கிரஸ் தலைவர் சோனியா,சந்தித்து ஆலோசனை

Advertisement

நடத்தினார். கட்சியின் மூத்த தலைவர்களும் இதில் பங்கேற்றனர். அதன் பின், கட்சியின் செய்தித் தொடர்பாளர் சத்யவிரத சதுர்வேதி கூறியதாவது: மிகவும் அவசர கதியில் அமல்படுத்துவதாலும், பொது மக்களின் பல்வேறு அச்சங்களுக்கு சரியான பதில் அளிக்காததாலும், ஜி.எஸ்.டி., அறிமுக விழாவில் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சி:

காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, 'ஜி.எஸ்.டி., விழாவில் பங்கேற்கப் போவதில்லை' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிநேற்று அறிவித்துள்ளது.இது குறித்து, கட்சியின் பொதுச் செயலர் சுதாகர் ரெட்டி கூறியதாவது: கட்சியின், எம்.பி.,க் களுடன் நடத்தப்பட்ட ஆலோச னைக்கு பின், அறிமுக விழாவில் பங்கேற்ப தில்லை என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பினருக்கும் போது மான அவகாசம் தராமல், அவசர அவசரமாக, இந்த வரி விதிப்பு முறை அமலுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும், விழாவில் பங்கேற்கப் போவதில்லை என, முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதற்கிடையில், 'தங்கள் ஆட்சியின்போது, ஜி.எஸ்.டி.,யை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட கட்சிகளே, தற்போது, அதன் அறிமுக விழாவை புறக் கணிப்பது நியாயமா?' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புறக்கணிக்காதீங்க

நாட்டின் மிகப் பெரிய, வரலாற்று சிறப்புமிக்க வரி சீர்திருத்தமான, ஜி.எஸ்.டி., தொடர்பாக,
அனைத்துக் கட்சிகளுடனும் விவாதித்தே, முடிவு எடுக்கப்பட்டது. அதனால், இதில் தங்களுக்கு பொறுப்பில்லை என, எதிர்க்கட்சி யினர் விலகி செல்ல முடியாது. விழாவை புறக்கணிக்கும் முடிவை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திரும்பப் பெறும் என, நம்புகிறேன்.
-அருண் ஜெட்லி,
மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,


Advertisement

வாசகர் கருத்து (43)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
30-ஜூன்-201721:43:55 IST Report Abuse

m.viswanathanநம்பினால் கெடுக்கப்படுவோம்

Rate this:
sridhar -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201719:16:15 IST Report Abuse

sridharwhere is your supporter. They may AWAKE midnight.

Rate this:
Rajinikanth - Chennai,இந்தியா
30-ஜூன்-201715:13:29 IST Report Abuse

Rajinikanthஅட இதை பார்றா ...காங்கிரஸ் புறக்கணிக்கிறது ..திமுகவும் புறக்கணிக்கிறது ..இதுதான் ஊழல் பாசம்கிறது ... இப்படி ஒண்ணுமண்ணா கலந்துகட்டி இணைஞ்சு கிடக்கிறதுதானே பழம்பெருச்சாளி.. சாரி ...பழம்பெரும் கட்சிகளுக்கு அழகு

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X