பொது செய்தி

இந்தியா

அரசு பள்ளிக்கு நிலம் தானம் : டிரைவருக்கு விருது

Updated : ஜூன் 30, 2017 | Added : ஜூன் 30, 2017 | கருத்துகள் (12)
Advertisement
அரசு பள்ளி,Government School, நிலம்,Land, தானம்,Donation,  டிரைவர், Driver, விருது,Award, ஜெய்ப்பூர், Jaipur,ராஜஸ்தான் , Rajasthan,முதல்வர் வசுந்தரா ராஜே ,Chief Minister Vasundhara Raje, பா.ஜ.,BJP, மேஜர் அலி, Major Ali, விளையாட்டு மைதானம்,Sports Ground,  கல்வி துறை,Education Department, பாமாஷா,Bhamaasha,

ஜெய்ப்பூர்: அரசு பள்ளிக்கு, இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய, வாடகை வேன் டிரைவரை பாராட்டி, ராஜஸ்தான் மாநில அரசு விருது வழங்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஷேகாவடி மாவட்டத்தை சேர்ந்தவர், மேஜர் அலி, 30. பள்ளி இறுதி வகுப்பு வரை படித்த இவர், பொருளாதார நிலை காரணமாக, படிப்பை தொடர முடியாமல், வாடகை வேன் ஓட்டி வருகிறார். மாதம், 7,000 ரூபாய் சம்பாதித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் படித்த அரசு பள்ளியில், விளையாட்டு மைதானம் இல்லை. அந்த குறையை போக்க, தன் குடும்ப சொத்தான இரண்டு ஏக்கர் நிலத்தை, உடன் பிறந்த ஐந்து சகோதரர்களின் அனுமதி பெற்று, அரசுக்கு தானமாக வழங்கினார். இதன் மதிப்பு, 30 லட்சம் ரூபாய். தற்போது, இந்த நிலம், விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசால், கல்வி துறைக்கு சேவையாற்றுவோருக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும், 'பாமாஷா' விருதுக்கு, மேஜர் அலி தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் நடந்த விழாவில், முதல்வர் வசுந்தரா ராஜே, மேஜர் அலிக்கு, இந்த விருதை வழங்கி பாராட்டினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
arumugam subbiah - Tirunelveli,இந்தியா
30-ஜூன்-201712:40:15 IST Report Abuse
arumugam subbiah "தெண்ணீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங்கடல் உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச் சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும் உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்" பெருங்கடலில் தண்ணீர் நிறைத்திருந்தும் தாகத்திற்கு பயன்படாது. விலங்கினங்கள் சென்று கலங்கிய நீரே ஆனாலும் தாகமெடுப்பவர் சிறுகுட்டையே ஆயினும் அதனையே நாடுவர். "செயற்கரிய செயல் செய்த ஐயா மேஜர் அலி அவர்களுக்கும், அவரின் பரந்த மனப்பான்மையை ஏற்று கொண்ட ஐந்து சகோதரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். " ஈ என இரத்தல் இழிந்தன்று அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று" 7000 மாத ஊதியமாக பெறும் ஒருவர் முப்பது இலட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை அரசாங்கத்திற்கு தரும்போது அவரின் குடும்ப ஏழ்மை கண்டு அதை வாங்காமலிருந்தால் அது அரசாங்கத்திற்கு பெருமையாக இருந்திருக்கும். இப்போதும் பிரதி பலன் எதிர்பாராது பெய்யும் மழை போல அவர் செய்த உதவிக்கு கைம்மாறாக அவர் மற்றும் அவரது சகோதரி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசாங்கமானது இலவச கல்விக்கும், அரசு வேலைக்கும் உத்திரவாதம் அளிக்குமானால் அதுதான் அவர்களுக்கு செய்யும் உண்மையான கைமாறாகும். கவனத்தில் கொள்ளுமா? அல்லது இந்திய சுந்தந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் விட்டு தன் சொத்தை எல்லாம் இழந்த வ.உ.சி. குடும்பத்தை கைவிட்டது போல் இவர்களையும் கைவிடுமா?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-ஜூன்-201722:04:45 IST Report Abuse
தமிழ்வேல் // 7000 மாத ஊதியமாக பெறும் ஒருவர் முப்பது இலட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை அரசாங்கத்திற்கு தரும்போது அவரின் குடும்ப ஏழ்மை கண்டு அதை வாங்காமலிருந்தால் அது அரசாங்கத்திற்கு பெருமையாக இருந்திருக்கும் // இழப்பீடாக அரசாங்கம் ஆளுக்கு 2 லட்சமாக 12 லட்சமாவது தந்திருக்கலாம்....
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
30-ஜூன்-201722:44:01 IST Report Abuse
ManianWhy don't we all send Re 1/- to him as a compensation so that he can get his money back to live. Let us stop asking Govt. to help. If you start a charity with a retired Judge(honest one), I will send him Rs 100/-. We need to show appreciation to encourage philanthropy (Charity). which only poor give and share. They know the pain of poverty. Major Ali will reach heaven according to the 1429 Muslim manu in Irorq now, which is one of the seven acts quuron advocates because he is a giver...
Rate this:
Share this comment
Cancel
Rajesh J - chennai,இந்தியா
30-ஜூன்-201711:37:13 IST Report Abuse
Rajesh J தானம் வாங்கிக்கிட்டிங்க சரி...அவருக்கு வேற நிலம் ஈடாக கொடுக்கலாமே. அவங்க சந்ததிக்கு பயன் தருமே. நல்ல எண்ணம் உள்ளவங்களுக்கு நஷ்டம் ஏற்பட கூடாதுப்பா ...
Rate this:
Share this comment
Cancel
mamallan -  ( Posted via: Dinamalar Android App )
30-ஜூன்-201711:27:00 IST Report Abuse
mamallan you are the best man.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X