காமெடி கஷ்டம்...ஆக்ஷன் ஈஸி : கவுதம் கார்த்திக்| Dinamalar

காமெடி கஷ்டம்...ஆக்ஷன் ஈஸி : கவுதம் கார்த்திக்

Added : ஜூலை 02, 2017 | கருத்துகள் (1)
காமெடி கஷ்டம்...ஆக்ஷன் ஈஸி : கவுதம் கார்த்திக்

ஏ... என்ன அழகு! சிரிச்சா நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம்... என்ன கலரு சும்மா பீட்சா மேல வைச்ச சீஸ் மாதிரி... தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு ஆணழகன் ஹீரோவா வந்து ரொம்ப நாள் ஆச்சு... என, இளம் பெண்களின் கண்கள் சுற்றும் 'ஸ்மார்ட்' நடிகர் கவுதம் கார்த்திக் மதுரையில் தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்து பேசிய நிமிடங்கள்...* இவன் தந்திரன் டீம்?இயக்குனர் - கண்ணன், ஹீரோயின்- ஷர்தா ஸ்ரீநாத், காமெடி - ஆர்.ஜெ.பாலஜி, இசை - தமன், டான்ஸ் - பாப்பி மாஸ்டர், சண்டை - சில்வா, இது தான் 'இவன் தந்திரன்' டீம். சில்வா, சூப்பர் சுப்புராயன் மாஸ்டர்களும் நடிச்சிருக்காங்க.* உங்கள் கேரக்டர் ?நான் ஒரு 'ரிவர்ஸ் இன்ஜினியர்'ரா வரேன், ஒரிஜினல் பொருட்களை காப்பி அடிச்சு புதுசா உருவாக்குற கேரக்டர். இன்ஜினியரிங் படித்த இளைஞர்களின் கஷ்டங்களை சொல்லும் படம்.* படத்தின் ஹைலைட்...இந்த படத்துல கிராபிக்ஸ் தான் ஹைலைட். எந்திரன் மாதிரி பெரிய ரோபோ மாதிரி இல்லாம, அடிக்கடி நாம பார்க்கும் பொருட்களை படத்துல நிறையவே பார்க்கலம்.* நீங்கள் உருவாக்கியது ?அது தானே படத்தின் சஸ்பென்ஸ்; எப்படி சொல்வது, அது ஒரு ஸ்மார்ட் போனா கூட இருக்கலாம்...* அப்பா படம் ரீமேக்...அவர் நடித்த கிழக்கு வாசல், பூமணி, கோகுலத்தில் சீதை, மவுன ராகம், அக்னி நட்சத்திரம் படமெல்லாம் ரீமேக் பண்ணினா நடிக்க மாட்டேன். 'உள்ளத்தை அளித்தா','பிஸ்தா' மாதிரி ஜாலியான படங்களில் நடிப்பேன்.*காமெடி - ஆக்ஷன்காமெடி ரொம்ப பிடிக்கும் ஆனால், காமெடி பண்றது கொஞ்சம் கஷ்டம். ஆக்ஷன் எனக்கு ஈஸியா வரும்.* ஆக்ஷன் பயிற்சி...சின்ன வயசில் அப்பா எனக்கு சிலம்பம் சொல்லி கொடுத்தாரு. கல்லுாரி படிக்கும் போது கிக் பாக்ஸிங் கத்துகிட்டேன். இப்போ, சினிமா பைட் நல்லாவே தெரிஞ்சுகிட்டேன்.* அப்பா அட்வைஸ்...அதெல்லாம் சொன்னது இல்லை, 'உன் நடிப்பு என் சாயலில் இருக்கக் கூடாது, உனக்குனு ஒரு ஸ்டைலை உருவாக்குன்னு' சொல்லி இருக்காரு. எனக்கு சுத்தமா அரசியல் தெரியாது. அப்பா அரசியலுக்கு போகும் முன் 'நீ என்ன நினைக்கிறேன்'னு என்கிட்ட கேட்டாரு. எனக்கு பிடிக்கலை! நீங்கள் ஒரு நடிகர், நான் உங்களை நடிகனாக தான் பார்க்க விரும்புறேன், அரசியலுக்கு போனா நடிப்பில் கவனம் செலுத்த முடியாதுன்னு சொன்னேன்.* நெக்ஸ்ட் ரிலீஸ்...'ஹரஹர மகாதேவகி', 'இந்திரஜித்', 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்... இந்த படத்துல விஜய் சேதுபதி என்னுடன் நடிக்கிறார்.* ஹரஹர மகாதேவகிஇந்த பேரு யு டியூப், வாட்ஸ்அப்ல பேமஸ்... இந்த படமும் காதல் கலந்த காமெடி படமாக தான் இருக்கும். இளைஞர்களை தியேட்டர் பக்கம் இழுக்கும்...gautham.karthik2017@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X