பேய் என்றால் எனக்கு பயம் : நடிகை சாய் தன்ஷிகா| Dinamalar

பேய் என்றால் எனக்கு பயம் : நடிகை சாய் தன்ஷிகா

Added : ஜூலை 02, 2017
பேய் என்றால் எனக்கு பயம் : நடிகை சாய் தன்ஷிகா

மின்னலே பொறாமைப்படும் மெல்லிய தேகம்... நிலவே வியந்து பார்க்கும் 'பளிச்' முகம்... நடக்கும் நதியாய் திரைக்களத்தில் தன் அழகால் அதகளம் செய்யும் நடிகை சாய் தன்ஷிகா பேசுகிறார்...* உரு படம் ?ஒரு எழுத்தாளரின் மனைவியாக நடித்து இருக்கிறேன். திரில்லர் படமாக இருந்தாலும் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் படம். அதுவும் கொடைக்கானல் குளிரில் நடித்தது புதிய அனுபவம்.* சண்டை காட்சி ?நிறைய காட்சிகள் டூப் போடாமல் நானே, ரியலா பைட் பண்ணி இருக்கேன். கார் கண்ணாடியில் நான் மோதி விழும் காட்சிக்கு தியேட்டரில் பலத்த கைதட்டல் கிடைத்தது.* கபாலிக்கு முன், பின் ?தனிப்பட்ட முறையில் தன்ஷிகாவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் படங்களின் தேர்வை கொஞ்சம் மாற்றி இருக்கிறேன்.* ரஜினி ?எந்த காட்சியாக இருந்தாலும் ஒரே டேக்கில் நடிப்பார். பெரிய வசனங்களை கூட ஒரே டேக்கில் பேசி அசத்துவார். இதெல்லாம் ரஜினிக்கு சொல்லிக் கொடுத்ததே சிவாஜி தானாம். இவரை போல நானும் ஒரே டேக் நடிகையாக வருவேன்.* 'ராணி' அம்மா?'ராணி' படத்தின் கதை என்னை மிகவும் பாதித்தது. தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள அன்பை வெளிப்படுத்தக் கூடிய கதை. பெண்கள் எல்லாம் கண்ணீர்விடும் அளவிற்கு கதையில் சென்டிமென்ட் இருந்தது.* போட்டி, பொறாமை...அனுபவம் தான் ஒருவரை மாற்றுகிறது. 'பேராண்மை' படம் நடிக்கும் போது 5 பெண்கள், ஒரு நாள் கூட எங்களுக்குள் போட்டி, பொறாமை வந்தது இல்லை. கோபத்தை கொஞ்சம் குறைத்து நல்ல விஷயங்கள் மேல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளேன்.* பயம் இருக்கா...பேய் என்றால் எனக்கு பயம். இருட்டினால் வெளியே தலைகாட்ட மாட்டேன்.* உணவு விஷயத்தில்...இஷ்டத்திற்கு சாப்பிட மாட்டேன். கட்டுப்பாடு உண்டு. ஆறு ஆண்டுகளாக 'டயட்' உணவு தான்.* திருமணம் ?திருமணமா... ஐடியா இல்லை, என் முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கிறது.* அடுத்து வருவது...குடிசை வாழ் பெண்ணாக 'விழித்திரு' படத்தில் நடிக்கிறேன். துல்கர் சல்மானுடன் 'சோலோ', படத்தில் நடனம் ஆடும் கண் தெரியாத பெண்ணாக வருகிறேன்.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X