அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., அறிவித்த அபராத வட்டி குறைப்பு என்னாச்சு?
கிடப்பில் போட்டது வீட்டு வசதி வாரியம்

'வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கு, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்' என்ற, ஜெயலலிதாவின் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஜெ., அறிவித்த, அபராத,வட்டி,குறைப்பு,என்னாச்சு?,கிடப்பில் போட்டது,வீட்டு,வசதி,வாரியம்


தள்ளுபடி திட்டம்


வீட்டு வசதி வாரியத்தில், வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்களில், தவணை செலுத்த தவறியவர்கள், பயன் பெறும் வகையில், அபராத வட்டி தள்ளுபடி திட்டம், 2011 முதல் மூன்று முறை செயல்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2016 செப்., 17ல், வெளியிட்ட அறிவிப்பு: வீட்டு வசதி வாரியத்தில், ஒதுக்கீடு பெற்றவர்களின் நலன் கருதி, அவர்களின் வட்டி சுமையை குறைக்க, வட்டிச் சலுகை திட்டம் செயல் படுத்தப்படும்.
நிலுவை தொகையை, முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு, மாத தவணை செலுத்த தவறிய தற்கான, அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியும், ஆண்டுக்கு ஐந்து மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு ஜெ., அறிவித்தார்.

அரசாணை இல்லை


இதன்பின்,உடல்நலக்குறைவு காரணமாக, மருத் துவமனையில் ஜெ., அனுமதிக்கப்பட்டதால், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட வில்லை. ஜெ., இறந்த பின் முதல்வராக பன்னீர்செல்வம், அடுத்து பழனிசாமி வந்த போதும், ஜெ., யின்

Advertisement

அறிவிப்பை செயல்படுத்த, அரசாணை பிறப்பிக்கப் படவில்லை.இதனால், தவணை தவறிய, 40 ஆயிரம் ஒதுக்கீட்டாளர்கள் நிலுவை தொகையை செலுத்தி, விற்பனை பத்திரம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
சட்டசபையில், வீட்டு வசதி துறை மானிய கோரிக்கை மீது, இன்று விவாதம் நடைபெற உள்ள நிலையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஜூலை-201716:27:59 IST Report Abuse

Pugazh Vஅந்தம்மா உயிரோட பதவியில் இருந்தப்பவே செய்த பல அறிவிப்புகள் கிடப்பில் அவங்களே போட்டிருந்தாங்க. இதெல்லாம் பேசிக்கிட்டு. இப்போ புதுசு புதுசா மேலும் மேலும் அறிவிப்புகள் வந்து பழசெல்லாம்கா புதுசு கூடவே காணாம போயிடும்.

Rate this:
guru - BANGALORE,இந்தியா
03-ஜூலை-201713:09:00 IST Report Abuse

guruafter long back seeing her photo soooo sad lots of thinking coming around in my mind, if she is alive...???

Rate this:
rmr - chennai,இந்தியா
03-ஜூலை-201711:58:57 IST Report Abuse

rmrஅவுங்க இறக்கும் பொது விட்ட அறிக்கை எல்லாம் என்ன ஆச்சோ அது தான் இப்போவும் ஆச்சு

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X