கதிராமங்கலத்தில் வன்முறை காரணமாகவே தடியடி!: சட்டசபையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கதிராமங்கலத்தில் வன்முறை காரணமாகவே தடியடி!
சட்டசபையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை: ''தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கதிராமங்கலம்,Karamangalam, வன்முறை,Violence, சட்டசபை,Assembly, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, சென்னை, Chennai, தஞ்சாவூர், Thanjavur,காங்கிரஸ், Congress,ராமசாமி,  Ramasamy, ஓ.என்.ஜி.சி., ONGC, போலீஸ்,Police, தி.மு.க.,  DMK, கோவி செழியன், Kovi Chellian,


சட்டசபையில், நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்த, சிறப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:

தி.மு.க., - கோவி செழியன்: கதிராமங்கலம் கிராமத்தில், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி., நிறுவனம், இயற்கை எரிவாயு கொண்டு சென்ற குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது. இயற்கை எரிவாயு எடுப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீதான வழக்குகளை, திரும்பப் பெற வேண்டும்.

காங்கிரஸ் - ராமசாமி: தடியடி நடத்திய போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: கதிராமங்கலம் கிராமத்தில், 2001 ஜூன், 1 முதல் வழங்கப்பட்ட, சுரங்க குத்தகை உரிமத்தின் அடிப்படையில், தனியார் சிலருக்கு சொந்தமான நிலத்தை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு

கழகமான, ஓ.என்.ஜி.சி., குத்தகைக்கு எடுத்து, கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதுநாள் வரை, இந்த இடத்தில், எவ்வித பிரச்னையும் இல்லாமல், பணிகள் நடந்து வந்தன.
இதற்கிடையில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், மே, 18 முதல், ஆழ்துளை கிணற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தேவையான உபகரணங்களை, அங்கு கொண்டு சென்றது. இதை அறிந்த அப்பகுதி மக்கள்,மீத்தேன் எடுப்பதற்கான ஆயத்தப் பணிகள் எனக் கருதி, மே, 19 அன்று மறியலில் ஈடுபட்டனர்.
இப்பிரச்னை தொடர்பாக, கும்பகோணம் சப் - கலெக்டர், மே, 25, 27, 31 ஆகிய நாட்களில், கிராம மக்கள் மற்றும் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தினரிடம் பேச்சு நடத்தினார்; அது, தோல்வியில் முடிந்தது. ஜூன், 2ல், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு, போலீஸ் பாதுகாப்புடன், கிணற்றில் பராமரிப்பு பணிகளை துவக்கியது.
இதை அறிந்த, மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள், பணிகளை தடுக்க முயற்சித்தனர்; போலீசார், அவர்களை கைது செய்தனர்.இதை அறிந்து, கிணற்றின் அருகே கூடிய, 93 பேர் கைது செய்யப்பட்டனர்; அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
ஜூன், 5ல், மீண்டும் கதிராமங்கலம் கிராம மக்கள், 400 பேர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, கலைந்து போகச் செய்தனர்.
ஜூன், 30 அன்று காலை, கதிராமங்கலம் -பந்தநல்லுார் சாலையில், வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே, தனியார் தரிசு நிலத்தில் செல்லும் எரிவாயு குழாயில் கசிவு இருப்பதாக, தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ஓ.என்.ஜி.சி., அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்றனர். அதற்குள், கதிராமங்கலத்தைச் சேர்ந்த, 150 பேர்

Advertisement

அங்கு கூடி, அதிகாரிகளை செல்லவிடாமல் தடுத்தனர்; 'கலெக்டர் வர வேண்டும்' என, வலியுறுத்தினர்.
மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. எரிவாயு குழாய் அருகில், சாலையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த, வைக்கோல் போர் உள்ளிட்ட பொருட்களுக்கு தீ வைத்தனர். சிலர், போலீசார் மீது, கற்களை வீசி தாக்கினர்.
இதில், ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார், கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தனர். போலீஸ் வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. போலீசார் கலைந்து போக அறிவுறுத்தினர். அதை பொருட்படுத்தாமல், வன்முறையில் ஈடுபட்டதால், குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்து, அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
பின், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தினர், எரிவாயு இணைப்பை துண்டித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, 10 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது, கதிராமங்கலம் கிராமத்தில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைமை அமைதியாக உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
04-ஜூலை-201721:24:25 IST Report Abuse

bairava யொவு கொஞ்சமாச்சும் பெயருக்கும் ,பதவிக்கும் பொருத்தமா? சொல்லு ..போ ....போ ...ரெண்டு மாசம் தானே ....

Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
04-ஜூலை-201718:14:05 IST Report Abuse

Rajendra Bupathiஇந்த மாதிரி பொய்யி சொன்னா வாயில புழு புழுத்துதான் சாவனும்?

Rate this:
Balaji - Khaithan,குவைத்
04-ஜூலை-201717:40:18 IST Report Abuse

BalajiONGC க்கும் மீத்தேன் திட்டத்துக்கும் எதிராக எந்தவித பாதகமான கருத்தும் வந்துவிடாமல் நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பதிலுரையை அவையில் வாசித்திருக்கிறார் EPS அவர்கள். எதிர்க்கட்சியான திமுக கேட்ட கேள்வியில் கூட கதிராமங்கலத்தில் வரவிருக்கும் திட்டம் பற்றியதாக இல்லாமல் கேட்கப்பட்டுள்ளது......... மக்களின் குறைகளைப்பற்றி விவாதிக்காத இவர்கள் இருவரையும் தான் நாம் மீண்டும் மீண்டும் தேர்தெடுத்து அரசாள அனுமதித்துக்கொண்டு இருக்கிறோம்

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X