மக்களிடம் மாட்டி கொண்ட எம்.எல்.ஏ., மாமூல் மழையில் நனையும் "இன்ஸ்.,'

Added : ஜூலை 04, 2017
Advertisement
தோழி வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டு, மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். நெருக்கடியான வாகன டிராபிக்குள் புகுந்த மொபட், திக்கி திணறி நகர்ந்தது. ""சிட்டியில் எல்லா ரோடும், டிராபிக் அதிகமாகத்தானே இருக்கு,'' என்றபடியே மொபட்டை ஓட்டினாள் சித்ரா.""ஆமா, முகூர்த்த நாளில், டவுனுக்குள் டிராபிக், அதிகமாயிட்டே போகுது,'' என்றாள்
மக்களிடம் மாட்டி கொண்ட எம்.எல்.ஏ., மாமூல் மழையில் நனையும் "இன்ஸ்.,'

தோழி வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டு, மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். நெருக்கடியான வாகன டிராபிக்குள் புகுந்த மொபட், திக்கி திணறி நகர்ந்தது. ""சிட்டியில் எல்லா ரோடும், டிராபிக் அதிகமாகத்தானே இருக்கு,'' என்றபடியே மொபட்டை ஓட்டினாள் சித்ரா.
""ஆமா, முகூர்த்த நாளில், டவுனுக்குள் டிராபிக், அதிகமாயிட்டே போகுது,'' என்றாள் மித்ரா.
""போன வாரம் கணக்கம்பாளையத்தில நடந்த மேரேஜூக்கு வந்த வாகனங்கள், பி.என். ரோடு பூராவுமே, டிராபிக்கில் திணறிடுச்சு தெரியுமா,'' என்று சித்ரா கூறினாள்.
""திருப்பூர்ல, சினிமா செட்டிங் மாதிரி போட்டு, கல்யாணம் நடந்துச்சே, அது தானே ''என்றாள் மித்ரா.
""செட்டிங் போட்டு நடந்துச்சா,''என்று, வியப்புடன் கேட்டாள் சித்ரா.
""ஆமாம். வி.ஐ.பி., வீட்டு கல்யாணம். பல ஏக்கர் பரப்புல, கல்யாண மண்டபம், டைனிங் ஹால் எல்லாம் அப்படியே, "செட்டிங்' போட்டு, நடத்திட்டாங்க' என்றாள் மித்ரா.
""இந்த மேரேஜூக்கு, வொய்ப்போடு ஸ்டாலின் வந்தாருன்னும், நிருபர்களை கண்டுக்கலைன்னு பேசிக்கிட்டாங்களே,'' என்றாள் சித்ரா.
""அசெம்பிளியில் சட்டை கிழிஞ்சா "பிரஸ்'சை கூப்பிட்டு நியாயம் கேட்கலாம். சட்டை கசங்காமல் வந்துட்டு போற கல்யாணத்துல, "பிரஸ்'சை மீட் பண்ணி, அதுல அரசியலாகிட கூடாதில்ல. அதான் ஓட்டம் பிடிச்சிருப்பாரு,'' என்றாள் மித்ரா.
""மதுக்கடை எதிர்ப்பு போராட்டம் நடந்த நாளிலே, "தடியடி' போலீஸ் ஆபீசருக்கு வழியனுப்பு நடத்தி னாங்க,'' என்று, சித்ரா கேட்டாள்.
""என்ன சொல்றே. இது எங்க நடந்தது'' என்று மித்ரா கேட்டாள்.
""சாமளாபுரம் மதுக்கடை போராட்ட, பெண்ணுக்கு "பளார்' விட்ட அதிகாரிதான். அவருக்கு, கூடுதல் எஸ்.பி.,யில் இருந்து எஸ்.பி.,யாக புரமோசன் போட்டாங்க. அதே மங்கலம் லிமிட்டில இருக்கற ஒரு மண்டபத்துல, அவருக்கு மாவட்ட போலீஸ் எல்லாம் சேர்ந்து, "செண்ட் ஆப் பார்ட்டி' கொடுத்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""முன்னால இருந்த லேடி கலெக்டர் மாற்றலாகி போனதில, லேடி போலீஸ் ஆபீசர் தான் ரொம்ப அப்செட்டா இருக்காங்களாம்,'' என்று, கலெக்டர் மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""ஏன்? என்னாச்சு,'' என்று ஆச்சரியப்பட்டாள் சித்ரா.
""மாவட்டத்திலே ஏதும் பிரச்னைன்னா, லேடி ஆபீசர் உடனே, கலெக்டரை மொபைலில் கூப்பிட்டு, சொல்லிடுவாராம். புதுசா வந்திருக்கற கலெக்டர் எப்படின்னு தெரியலையே; அதான் இந்த அப்செட்டாம்,'' என்றாள் மித்ரா.
""திருப்பூர்ல போலீஸ் எண்ணிக்கை பத்தலன்னு, சட்டசபையில் பேசுங்கன்னு,' "ஏசி' ஒருத்தரு, எம்.எல்.ஏ., கிட்ட ரகசியமா கோரிக்கை வச்சாரு தெரியுமா?'' என்றாள் சித்ரா.
""அட, அப்படியா? யாரு, யார்கிட்ட, எந்த கோரிக்கையை வெச்சாங்க?'' மித்ரா கேட்டாள்.
""ரயில்வே சுரங்க பாலத்தை, வேலையே முடியாம எம்.எல்.ஏ., திறந்து வெச்சாரில்ல. அப்ப, பாதுகாப்புக்கு போலீசும் வந்திருந்தது. சுரங்கப்பாலம் வழியாக எம்.எல்.ஏ., நடந்து போய் பார்த்திட்டு இருக்கும் போது, வேகமாக வந்து "சல்யூட்' அடிச்ச "ஏசி' ஒருத்தர், "ஸ்டேஷன் ஒன்னுக்கு, 40 பேர் "சார்ட்டேஜ்' வருதுங்க. இதை கொஞ்சம் பேசி, ஆட்கள் வாங்கி கொடுங்க,'ன்னு, கோரிக்கையா வச்சாரு,'' என முடித்தாள் சித்ரா.
""நானும் ஒரு போலீஸ் மேட்டர் வெச்சிருக்கேன். செய்தி போட்டு, எங்களுக்கு வேலையை வெச்சுடறாங்க'ன்னு, போலீஸ்காரங்க சிலர் புலம்பியிருக்காங்க,'' என்று மித்ரா கூற, ""தப்பை தடுக்கனும்னா, வேலை செஞ்சுதானே ஆகோணும்?'' என்றாள் சித்ரா.
""திருப்பூர் சிட்டி குற்ற சம்பவம் குறித்து, பேப்பர்ல செய்தி வந்தா, அடுத்த வாரம் நடக்கும்
"எல் அண்ட் ஓ' மீட்டிங்ல, "கொஞ்சம் பார்த்துக்கோங்க'னு கலெக்டர் சொல்லி வைப்பாங்க. இப்ப வந்த கலெக்டர், பேப்பர்ல செய்தி வந்ததும், அதை நகலெடுத்து<, சீக்கிரம் நடவடிக்கை எடுத்து "ரிப்போர்ட்' கொடுக்கணுமுன்னு, போலீசுக்கு லெட்டர் அனுப்பிடறாரு,'' என்றாள் மித்ரா.
""அவர், செய்யறது சரிதானே,'' என்று ஆமோதித்தாள் சித்ரா.
அதற்குள், பழமுதிர் நிலையம் தென்படவே, இருவரும், திராட்சை ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு, பேச்சை தொடர்ந்தனர். ""செல்லம் நகரில் ரேஷன் கடைய திறக்க சென்ற சவுத் எம்.எல்.ஏ.,வை, மக்கள் ரவுண்ட் கட்டி, "டாஸ்மாக்' மதுக்கடையை மூட வேண்டுமுன்னு, வாக்குவாதம் செய்தனர்.
எம்.எல்.ஏ.,வுடன் வந்த "எடுபுடி' ஒருவர், ""ஏம்மா. சும்மா பேசமா இரு,'' என்று, பெண் ஒருவரை ஒருமையில் திட்டியதால், மற்றவர்கள், ""நாங்க, எம்.எல்.ஏ., விடம் பேசறோம். நீ, யார் குறுக்க வர்ற,'' என, அவரை தாளித்து எடுத்து விட்டனர். இதைப்பார்த்த சவுத், ""என்னால, ஒண்ணும் செய்ய முடியாது, போய் கடை முன்னாடி உட்கார்ந்து போராட்டம் பண்ணு, போ,'' என, அவரும், ஒருமையில் பேசிவிட்டு காரில் ஏறி பறந்தாராம்,'' என்று மூச்சு விடாமல் பேசிய சித்ரா, ""பதவி இருக்குன்னு, ஆட்டம் போட்டா, மறுபடியும் மக்களை பாத்து கும்பிட்டுதானே ஆகோணும். அப்ப பார்த்துக்கிறோம்,' என்று பெண்கள் பொறிந்து தள்ளினராம்,'' என்று கூறி முடித்தாள்.
""அட, இந்த இன்ஸ்பெக்டர் பண்ற அலப்பறையை கேளு,'' என்று மித்ரா கூறவும், ""அப்படியா, யாரு? எந்த இன்ஸ்பெக்டரு? என்ன மேட்டரு?'' என்று கேள்விக்கணையை தொடுத்தாள் சித்ரா.
""மாநகர எல்லையில், மூடப்பட்ட "சரக்கு' கடைக்கு பக்கத்துலயே, "பார்' நடத்தி வந்த ஆசாமிகள், கனஜோராக "சரக்கு' விக்கிறாங்களாம். குறிப்பா, வீரபாண்டி ஸ்டேஷன் லிமிட்டில் இன்ஸ்பெக்டர்களுக்கு தெரிந்தே விக்கின்றனராம். இதுக்காக, இன்ஸ்பெக்டர் பாக்கெட்டுக்கு, மாதம், 25 ஆயிரம் ரூபாய், மாமூல் போகுதாம்,'' என்று மித்ரா ரகசியத்தை வெளியிட்டாள்.
""புது கமிஷனர், நேத்துதான் பதவி ஏத்திருக்கிறார். இதுக்கு முன்னாடி, கோவை, சேலத்துல, பல அதிரடிகளை பண்ணியிருக்கிறாராம். அதனால, திருப்பூரிலும், கண்டிப்பாக "சாட்டையை' சுத்துவார். இது தெரிஞ்ச, போலீஸ்காரங்களே வெலவெலத்து போயிருக்காங்களாம்,'' என்று சித்ரா சொல்லி, சிரித்தாள்.
""இன்னொரு போலீஸ் மேட்டரையும் கேளு. வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர். "புட்செல்'லுக்க போக, டிரை பண்றாரு. ஆர்டர் கிடைச்சதும், இப்ப அவர் "ரூமில்' இருக்கிற, ஏ.சி., டேபிள், இப்படி எல்லாத்தையும் எடுத்துட்டு போயிருவாரானு கிண்டலாக பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஏன்னா, அதெல்லாம், அவரோட, சொந்த முயற்சியில, "ஸ்பான்ஸர்' புடுச்சு வாங்கினதாம்,'' என்று விளக்கவும், மித்ரா சிரித்தாள்.
""சரி, நான் கௌம்பறேன். நாளைக்கு காலைல, ஏழு மணிக்கு வர்றேன். ரெடியா இரு. ஊத்துக்குளி கோவில் கும்பாபிஷேகத்துக்கு போகணும்,'' என்று கூறி, பரபரவென, வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X