சபாஷ்! ஜி.எஸ்.டி., நடைமுறையை கண்காணிக்க குழு Dinamalar
பதிவு செய்த நாள் :
சபாஷ்!
ஜி.எஸ்.டி., நடைமுறையை கண்காணிக்க குழு
200 அதிகாரிகளை நியமித்தது மத்திய அரசு

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அது முறையாக செயல்படுத்தப்படு கிறதா என்பது உள்ளிட்டவற்றை, மாவட்ட அளவில் கண்காணிக்க, நாடு முழுவதும், 200 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது.

ஜி.எஸ்.டி., நடைமுறை,கண்காணிக்க,குழு,சபாஷ்!

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, இம்மாதம், 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதை அமல்படுத் துவதில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், வணிகர் களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதேபோல், வரி தொடர்பாக பொதுமக்களுக் கும் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், மாவட்ட அளவில் இதை கண்காணிக்க, உயர் அதிகாரிகளை நியமித்துள்ளது மத்திய அரசு.

இது குறித்து, மத்திய அரசு நேற்று வெளி யிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங் கள், 166 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுப்புக்கும்,ஒரு அதிகாரி வீதம், கண்காணிப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனர். இதற்காக, 200 அதிகாரிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின்

பல்வேறு துறைகளில் பணி யாற்றும் இணைச் செயலர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள அதிகாரிகள், தங்க ளுக்கு ஒதுக்கபட்டுள்ள மாவட்டங்களில், ஜி.எஸ்.டி., தொடர்பான தகவல்களைசேகரித்து, மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு துறைக் கும், வருவாய் துறைக்கும் தொடர்ந்து தகவல்களை அளிப்பர்.

வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி.,யின் கீழ் பதிவு செய்துள்ள னரா; கடைகளில் வரி விபரங்கள் குறிப்பிடப்பட்டுள் ளனவா; முறையாக கணக்குகள் பராமரிக்கப்படு கிறதா எனகண்காணிப்பர்.அதேபோல், ஒவ்வொரு பொருளுக் கும், அரசு நிர்ணயித்துள்ளபடி வரி வசூலிக்கப்படு கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு வரிச் சலுகை கிடைக் கிறதா, அவர்களுடைய குறைகள், சந்தேகங்கள் தீர்க்கப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

இது தொடர்பாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக வர்த்தக அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவர். விலைவாசி கட்டுக்குள் இருப்பதையும், நுகர் வோருக்கு போதிய அளவில் பொருட்கள் கிடைப் பதையும் உறுதி செய்வர். இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை:வருவாய் துறை செயலர் பெருமிதம்


ஜி.எஸ்.டி., குறித்து, மத்திய அரசின் வருவாய் துறைச் செயலர் ஹஸ்முக் ஆதியா கூறியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகமானதைத் தொடர்ந்து,பொருட்களின்

Advertisement

விலை நிலவரம் மற்றும் அதன் வினியோ கத்தில், பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதை, மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கட்டாயம் இல்லை
இதற்காக, முக்கிய துறைகளின், 15 செயலர் களை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை யும் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண வணிகர்கள், தாங்கள் விற்கும் பொருளுக்கு ரசீது தருவது கட்டாய மில்லை. அதேபோல், ஆண்டுக்கு, 75 லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்பவர்கள், கம்ப்யூட்டர் ரசீது அளிக்க வேண்டியதும் கட்டா யமில்லை. கை யினால் எழுதப்பட்ட ரசீதை யும் அளிக்கலாம்.

பொருட்களின் மீது, புதிய விலைக்கான, 'ஸ்டிக் கர்' ஒட்டுவதற்கு, மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. 'பேக்கிங்' செய்யப்பட்ட பொருட்களுக்கான விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, இரண்டு பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.

ஒருங்கிணைப்பு


ஒரு பொருளுக்காக, இதுவரை இருந்த பல் வேறு வரிகளை ஒருங்கிணைத்து, புதிய வரி விதிப்பு முறை வந்துள்ளது. அதே நேரத்தில், 'டோல்' எனப்படும் சுங்கசாவடி கட்டணம், மண்டி எனப்படும் சந்தைக்கானகட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், பொருட்களுக் கான தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.பொருட்களின் வினி யோகம், விலை குறித்து,தொடர்ந்து கண் காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Ma-subhu - Chennai,இந்தியா
07-ஜூலை-201716:49:53 IST Report Abuse

Ravi Ma-subhuஒரே பொருளுக்கு பல முனை வரி வராது என்றார்கள் , நிலைமெய் எப்படி என்று செக் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 12 % வரி என்றல் இடையில் இருக்கும் அணைத்து வியாபாரிகளும் 12 % வரி போட்டால் , மொத்தமாக எல்லா வரிகளும் வாங்குபபவரின் தலையில் சென்று விழுகிறது. அதிகபட்ச வரி GST 8 % க்கு மிகாமல் இருக்க வேண்டும். நம் நாடு ஏழைகள் நிரம்பிய நாடு . வாங்கும் திறம் மிகவும் பாதிக்கப்படும். GST கவுன்சில் தயவு செய்து ஒர்கவுட் பண்ணி பாருங்க வரிய குறைங்க.nandri

Rate this:
Giridharan S - Kancheepuram,இந்தியா
05-ஜூலை-201718:18:43 IST Report Abuse

Giridharan Sநானே சொல்றேன் இன்னைக்கு தமிழ்நாட்டுலே சென்னைலே ஒரு tea 8 ரூபாய்க்கும் coffee 10 ரூபாய்க்கும் விதித்துட்டு இருந்தது இப்போ tea 10 ரூபாய்க்கும் coffee 12 ரூபாய்க்கும் விகாரங்க கேட்டா GST யாம். குழுவை முதலில் எங்க ஊர்ல வந்து tea coffee சாப்பிட சொல்லுங்க. இதுலே என்ன விசேஷம்னா கேரளா விலே லிஸ்ட் போட்டுடங்கா அதே கேரளாகாரங்க தான் இங்கே டி கடை நடத்திட்டு இப்படி தமிழக மக்களை ஏமாற்றிகொண்டு இருக்கிறார்கள்.

Rate this:
wellington - thoothukudi,இந்தியா
05-ஜூலை-201713:55:23 IST Report Abuse

wellingtonGSTN என்பது தனியாரால் உருவாக்கப்பட்ட அமைப்பு , gst என்னும் கொடூரமான வரியை மக்கள் மேல் போட்டு இந்தியாவில் பொருளாதார சீரழிவை உண்டாக்க அந்நிய சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட திட்டம் தான் இது ,பணமதிப்பிழப்பு ,ஜீ எஸ் டி என்னும் கொடுரவரி ,தங்கமுதலீட்டு திட்டம் என்னும் மக்களிடம் இருந்து தங்கத்தை பிடுங்கும் திட்டம் இவை எல்லாம் மக்களை நிலைகுலையச்செய்யும் ,இன்னும் சில வருடங்களில் இந்திய மக்கள் சாப்பாட்டிட்க்கே கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்படும் ,மோடி வந்ததிலிருந்தே மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை ,ஒவொரு இரவிலும் மக்களை வாட்டிவதைக்கும் அறிவிப்புகள் ,எல்லா அறிவிப்புகளும் இரவிலே நடந்தேறுகின்றன ,ஒவொரு அறிவிப்பிற்கு பின்னரும் அடுத்தநாள் வெளிநாட்டில் இருப்பார் மோடி ,என்ன தந்திரம் இதெல்லாம் ,தற்போது இந்தியாவில் நடக்கும் ஒவொரு சம்பவங்களும் மர்மமாகவே இருக்கிறது ,மொத்தத்தில் இருண்டகாலத்தை நோக்கி இந்தியா ......

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X