தவறவிடக்கூடாத ஒவியக்கண்காட்சி| Dinamalar

தவறவிடக்கூடாத ஒவியக்கண்காட்சி

Updated : ஜூலை 05, 2017 | Added : ஜூலை 05, 2017 | கருத்துகள் (4)
Advertisement


தவறவிடக்கூடாத ஒவியக்கண்காட்சி

இப்படி ஒரு ஒவிய கண்காட்சி இனியும் நடக்குமா என்று வியக்கும் வகையில் 63 கலைஞர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 300க்கும் அதிகமான ஒவியங்கள் கொண்ட கண்காட்சி சென்னையில் நடந்து வருகிறது.
தமிழ்நாடு கலை,கைத்தொழில் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 42வது ஒவிய கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில் நடந்துவருகிறது.கடந்த 3ந்தேதி துவங்கிய இந்த கண்காட்சி வருகின்ற 9ந்தேதி நிறைவு பெறுகிறது.

வளர்ந்த ஒவியர்களும் வளர்ந்துவரும் ஒவியர்களும் இணைந்து தங்களது திறமையை வௌிப்படுத்தி உள்ளனர்.ஒவ்வொரு ஒவியமும் கண்ணையம் கருத்தையும் கவர்கிறது.உற்றம் சுற்றம் நட்பு குடும்பம் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய ஒவிய கண்காட்சி இது.
இலக்கியத்தில் படித்து மனதில் கற்பனையாக ஒடவிட்டுக்கொண்டிருக்கும் பல பழந்தமிழர் வாழ்வியல் முறைகள் இங்கே வண்ணங்களில் உயிர்பெற்று காணப்படுகிறது.

ஒவியமா?புகைப்படமா? என வியக்கவைக்கிறது எம்.எஸ்.அம்மாவின் ஒவியம்.குட்டி புள்ளிமான் நேரில் பார்த்தால் கூட இவ்வளவு அழகாக இருக்குமா?ஒகேனேக்கல்லை இப்படியும் பார்க்கலாமா?மண்ணுக்கு கூட இவ்வளவு அழகா?குண்டூசியும் நுாலும் இப்படி ஒரு அற்புதத்தை தருமா?பலகையா?உலோகமா? என வியக்கவைக்கிறது ஒவியங்கள். ஒவியங்கள் மட்டுமில்லாமல் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன அதிலும் அலுமினியதகடில் உருவாக்கப்பட்டுள்ள குளவி அருமையோ அருமை.
மகத்தான கலைஞர்களால் மகத்தான முறையில் உருவாக்கப்பட்ட ஒவியகண்காட்சிக்கு செல்லலாம், அங்குள்ள கலைஞர்களின் படைப்புகளை பாராட்டலாம், முடிந்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஒவியங்களை விலைக்கு வாங்கி கலைஞர்களை ஊக்கப்படுத்தலாம்.இந்த மூன்றில் நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் மூன்றையுமே செய்யத் தீர்மானித்துவிட்டால் தாமதிக்காதீர்கள்.

கண்காட்சி திறந்து இருக்கும் நேரம்:பகல் 11 மணி முதல் இரவு 7 மணிவரை)
தொடர்புக்கு :9941322175


-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naran - chennai,இந்தியா
15-செப்-201709:51:08 IST Report Abuse
naran arumai
Rate this:
Share this comment
Cancel
naran - chennai,இந்தியா
15-செப்-201709:49:54 IST Report Abuse
naran ஆல் ஆர் நைஸ் picture
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
26-ஜூலை-201711:32:02 IST Report Abuse
A shanmugam இந்தியாவில் இன்னும் எவ்வளவு குடும்பங்கள் மேலே குறிப்பிட்ட ஓவியம் போல் குடும்பம் நடத்தி வருகின்றனர். பாரத பிரதமர் கனவு இந்தியாவில் என்றுமே பலிக்காது. இந்திய ஸ்மார்ட் சிட்டி ஆகலாம், digitisation , globalisation , என்று அதிவேகமாக மாறலாம். ஆனால், மேலே ஓவியர் வரைந்த குடும்பசித்திர படம் நடைமுறையில் விட்டு விலகாது. ஆகவே, இந்தியாவில் ஏழை ஏழைதான் பணக்காரன் பணக்காரன்தான் படிச்சவன் படிச்சவன்தான் இதில் எந்த மாற்றமும் எந்த காலத்திலும் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X