பொது செய்தி

தமிழ்நாடு

தியேட்டர்கள் நாளை திறப்பு; ஒரு டிக்கெட் விலை ரூ 196

Updated : ஜூலை 06, 2017 | Added : ஜூலை 06, 2017 | கருத்துகள் (14)
Advertisement
தியேட்டர்கள், நாளை திறப்பு, ஒரு டிக்கெட், விலை, ரூ 196

சென்னை: நாளை திரையங்குகள் திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் புக்கிங் துவங்கியது. ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூ196க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேளிக்கை வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடந்தி வந்த நிலையில் இன்று அந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் தியேட்டரில் நாளை (ஜூலை 7) திரைப்படங்களை பார்க்க ஆன்லைன் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. சென்னை அபிராமி திரையங்கில் 100 ரூபாய் டிக்கெட்டிற்கு 19 ரூபாய் கூடுதலாக 119 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த ரூ119 க்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. சேர்ந்து ரூ 153.50 ம், மற்றும் ஆன்லைன் முன் பதிவு சேவை கட்டணமாக 42.50 யும் சேர்த்து மொத்தம் ஒரு டிக்கெட்டிற்கு ரூ 196 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஜூலை-201715:09:34 IST Report Abuse
எப்போதும் வென்றான் அபிராமி ராமநாதன் பரம யோக்கியன்...
Rate this:
Share this comment
Cancel
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
07-ஜூலை-201706:30:05 IST Report Abuse
வெற்றி வேந்தன் அட இப்படியாவது இளைஞர்களை கெடுக்கும் சினிமா அழிந்து போகட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
07-ஜூலை-201705:45:23 IST Report Abuse
NagarajanRathnakumar தியேட்டரில் பாப்கார்ன் - ரூ.100, பார்க்கிங் - ரூ.120 தண்ணீர் பாட்டில் - ரூ.100 என்று கொள்ளை நடக்கிறதே அதுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் தானே காரணம். GST ஐ டிக்கெட்டில் ஏத்தப்போறே அதுக்கு முன்னால் போராட்ட டிராமா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X