அந்த 'பிக்பாஸ்' யார் ? - அனுயா மனந்திறக்கிறார்

Added : ஜூலை 09, 2017 | கருத்துகள் (2)
Share
Advertisement
அந்த 'பிக்பாஸ்' யார் ? - அனுயா மனந்திறக்கிறார்

“ஒரு கல் ஒரு கண்ணாடி....” என “எஸ்.எம்.எஸ்” மூலம் ரசிகர்களின் மனதை தொட்டவர் அனுயா. தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, ஒரே வாரத்திலேயே அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார்.வெளியே வந்த அவர் 'சண்டே ஸ்பெஷல்' வாசகர்களுக்காக நம்மிடம் பேசியது....
* பிக்பாஸில் முதல் ஆளாக வெளியேறியது பற்றி? முதல் வாரத்திலேயே நான் வெளியேறி விடுவேன் என்று எனக்கு தெரியும். வையாபுரி, கஞ்சா கருப்பு போன்றவர்கள் சுத்த தமிழ் பேசக்கூடியவர்கள்; நான் எப்படி 100 நாள், இந்த நிகழ்ச்சியில் இருக்க போகிறேன் என்று நினைத்தார்கள். நான் வெளியேறியது பெரிய விஷயம் கிடையாது.
*வீட்டில் எப்படி உங்களை விட்டு பிரிந்து இருந்தார்கள்?
15 பேர் ஒரே வீட்டில் தங்குவது தான் நிகழ்ச்சியின் சாராம்சம். இந்த வீட்டில் அட்ஜெஸ்ட் செய்து போகாதவர்கள் வேறு எங்கும் அட்ஜெஸ்ட் செய்ய முடியாது. மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வேன். நான் இப்படிப்பட்ட சூழலில் தான் இருந்தவள் என, என் பெற்றோருக்கு தெரியும். ஆகையால் அவர்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும் மொழி பிரச்னையாக இருந்தது. நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் நானும் ஓரளவுக்கு தமிழ் பேச கற்று கொண்டேன்.
* பிக்பாஸில் யார் கடைசி வரை தாக்குப்பிடிப்பார்கள்? நிச்சயம் கணேஷ் வெங்கட்ராம் தான் வெற்றி பெறுவார். அனைவரிடமும் அட்ஜெஸ்ட் செய்து கொள்வார், நன்றாக பழகுவார், அனைவரையும் புரிந்து கொள்பவர், ஆகையால் அவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியானவர்.
* சமூகவலைதளங்களில் பிக்பாஸ் பற்றி விமர்சனம் அதிகமாக வருகிறதே.? பிக்பாஸ் உலகம் முழுக்க பிரபலமான நிகழ்ச்சி. இந்தியிலும் நிறைய ஷோக்கள் போனது. தமிழுக்கு புதிது. தமிழகத்தில், கலாசாரம், பண்பாடு போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. தமிழர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். இந்த நிகழ்ச்சியின் அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லை என்று தான் நினைக்கிறேன். விட்டு கொடுத்தல், சண்டை, அன்பு, புரிதல், சந்தோஷம் எல்லாம் சேர்ந்தது தான் பிக்பாஸ்.
பிக்பாஸ் : இந்தி, - தமிழ் என்ன வித்தியாசம்?
இந்தியில் சர்ச்சைகள் அதிகமாக இருக்கும். தமிழில் அது குறைவு. சண்டை, சச்சரவுகளும் அவ்வளவாக இல்லை.
* இனி தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பீர்களா? புதிய விஷயம், சவால் என்றால் எனக்கு பிடிக்கும்,
* சமூகத்திற்கு இந்த நிகழ்ச்சி தேவையா? கண்டிப்பாக இல்லை. இருந்தாலும் நடிகைகளை மேக்கப் இன்றி பார்க்க நிறைய விரும்புகிறார்கள். புதிய நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்கிற ஆர்வம் அவர்களிடத்தில் இருக்கும். இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான்.
* பிக்பாஸில் பங்கேற்றது பணத்திற்காகவா அல்லது புகழுக்காகவா? பணம் என்பதையும் தாண்டி எனது தனிப்பட்ட விருப்பம் தான் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தது. மக்கள் என்னை மறந்து விட்டார்கள். இந்த நிகழ்ச்சி மூலமாக மீண்டும் மக்களிடத்தில் தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
* அலைபேசி இல்லாமல் எப்படி இருந்தீர்கள்? கொஞ்சம் கஷ்டம் தான். குடும்பத்தோடு தொடர்புடையது போன் தான். போனை விட குடும்பம் தான், என் கவலையாக இருந்தது.
*ஜூலியையும், உங்களையும் வெளியேற்ற நினைத்தது ஏன்? சினிமா பிரபலம் இ ல்லாத பொண்ணு ஜூலி. அதிகம் பேசுவாங்க, நிறைய கருத்து சொல்லுவாங்க. எனக்கு மொழி பிரச்னை இருந்தது. அதனால் வெளியேற்ற நினைத்திருக்கலாம். *கமலிடம் பாட்டு பாடிய அனுபவம்..?கமலின் தீவிர ரசிகை நான். அவரை பார்த்ததும் மகிழ்ச்சியானேன். நான் நடிகையாக இல்லாமல் ஒரு ரசிகையாக எனக்கு பிடித்தமான நடிகரை பார்த்ததால் பாட்டு பாடினேன்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
22-ஜூலை-201719:59:46 IST Report Abuse
Sathish அது போகட்டும் அனுயா அவர்களே. கண்ணாடி முன் நின்று நீங்கள் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் அருமை.
Rate this:
Share this comment
Cancel
valai gnani - muthupettai ramnad,இந்தியா
18-ஜூலை-201707:35:20 IST Report Abuse
valai gnani இது சைத்தான் வீடு நாட் பிக் பாஸ் வீடு இங்கு உள்ள நிறைய பேர் சாத்தானின் குணநலன்களை கொண்டுள்ளனர் இந்த ப்ரோக்ராம் மக்களுக்கு எதை கற்றுகொடுகிறது நல்லதையா கெட்டதையா கள்ளம், கபடம் பொரணி, கோபம், காய்மாரம், நக்கல் .பிறர்ரை புண்படுத்துதல், நான்என்ற அஹங்காரம், விட்டுகொடுக்காத தன்மை, மனிதனின் உயர்த்தும் நல்ல விழுமியங்கள் ஏதும் இ ல்லாத இதை ஒரு விளையாட்டு என்று சும்மா எடுத்துகொள்ள முடியாது .இந்த மாதிரி நிகழ்ச்சிகள் வளரும் தலைமுறைகளை கெடுக்கும் .இதை பார்ப்பதை நிறுத்துங்கள் மக்களே .இந்த ப்ரோக்ராம் வெற்றி பெற்றால் மனிதம் தோற்றுவிட்டது என்று அருத்தம்.இது கற்றுகொடுக்கும் எல்லாம் மேலே சொன்னவை, இதை பார்பதற்கு பதில் பெரிய ஆஸ்பத்திரில லையன்ல நிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X