| அழகிகளின் குத்தாட்டத்தில் ரகளை: போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு: 46 பேர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அழகிகளின் குத்தாட்டத்தில் ரகளை: போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு: 46 பேர் கைது

Updated : பிப் 05, 2011 | Added : பிப் 04, 2011 | கருத்துகள் (1)
Advertisement

சேலம்: சேலத்தில், இருவேறு இடங்களில் நடந்த அழகிகள் குத்தாட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட ரகளையில், போலீஸ் ஜீப் கண்ணாடி உடைக்கப்பட்டது. அழகிகள் உட்பட 46 பேரை, போலீசார் கைது செய்தனர்.சேலம், கொண்டலாம்பட்டி அருகே குமரன் காடு உள்ளது. இங்கு மாரியம்மன் பண்டிகை நடப்பதால், நேற்று முன் தினம், விழா குழுவினர், "குத்தாட்ட' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நள்ளிரவில், அரைகுறை ஆடையுடன் அழகிகள் நடனமாடினர். வாலிபர்கள் உற்சாக மிகுதியில், கத்தி கூச்சலிட்டு அழகிகளின் நடனத்தை ரசித்தனர்.
இதுகுறித்து, கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜகீரா தலைமையில், பெண் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். "குத்தாட்டத்தை' ரசித்து கொண்டு இருந்தவர்கள், போலீசாரை கண்டதும், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்ற, அம்மு (24) மற்றும் நடன கலைஞர்கள் ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். போலீசார் வருகையால் எரிச்சல் அடைந்த வாலிபர்கள் சிலர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் மீது, கல் வீசி தாக்கினர். இதில், ஜீப் கண்ணாடி உடைந்து, பெண் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். போலீஸ் ஜீப் மீது கல் வீசி தாக்கிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில், மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, விழா குழுவினர், "குத்தாட்ட' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, "குத்தாட்ட' நிகழ்ச்சி நடந்தது. சில வாலிபர்கள் மேடைக்கு கீழே, ஆடி கொண்டு இருந்தனர். இவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, ரகளையில் ஈடுபட்டனர். இதனால், குத்தாட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.தகவலறிந்த ஓமலூர் போலீசார், அனுமதியின்றி நடன நிகழ்ச்சி நடத்திய 13 பேர் மற்றும், ரகளையில் ஈடுபட்ட 23 பேர் என, 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appu - madurai,இந்தியா
05-பிப்-201109:49:06 IST Report Abuse
appu அந்த காலத்துல சாமி கும்பிடு திருவிழாவுக்கு நாடகம் மற்றும் பாட்டு கச்சேரி மாறும் சினிமா காட்சி என்று பட்டய கிளப்பினது போய் இன்று எங்கு பாத்தாலும் அரைகுறை உடையுடன் குத்தாடமே நடக்கிறது.இதில் இது போன்ற வம்பு சண்டைகள் வேறு. இனிமேல ஆண்டவனே வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாதப்பா. எக்கேடோ கேட்டு போங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X