3 நாடுகள் பங்கேற்கும் பிரமாண்ட போர் ஒத்திகை! 21 கப்பல்கள், 95 போர் விமானங்கள் பங்கேற்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பிரமாண்ட போர் ஒத்திகை!
3 நாடுகள் பங்கேற்கும் 21 கப்பல்கள்-
95 போர் விமானங்கள் பங்கேற்பு

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய, மூன்று நாடுகள் கூட்டாக நடத்தும், 'மலபார் எக்சர்சைஸ்' எனும் பிரமாண்ட போர் ஒத்திகை, சென்னை அருகே, வங்கக் கடலில் துவங்கியுள்ளது.

கடந்த, 1992 முதல், இந்திய மற்றும் அமெரிக்க போர்க் கப்பல்கள், மலபார் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா, அணுகுண்டு சோதனை நடத்திய காரணத்தால், 1998 முதல், 2001 வரை, அது நிறுத்தப்பட்டது. பின், 2002 முதல், தொடர்ந்து நடந்து
வருகிறது.

கூட்டு போர் ஒத்திகை


ஒரு முறை ஜப்பானும், ஒரு முறை ஆஸ்திரேலியாவும், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றன.இந்நிலையில், 2016 முதல், மலபார் போர் ஒத்திகையில், ஜப்பான் நிரந்தர உறுப்பினராக சேர்ந்தது. அப்போது, மூன்று நாடுகளின் ஒத்திகை, முதன்முதலாக துவங்கியது. 2017ம் ஆண்டுக்கான மலபார் ஒத்திகை, சென்னை கடற்கரை அருகே, வங்கக் கடலில், நேற்று துவங்கியது. இது, 21வது மலபார் கூட்டு போர் ஒத்திகை நிகழ்வு.
இந்த பிரமாண்ட நிகழ்வில், 19 போர்க் கப்பல்கள், இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும், 95 போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. இதில், அமெரிக்காவின், 'நிமிட்ஸ்' கப்பலில், 75 விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது, சில ஆண்டுகளுக்கு முன், சென்னை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியில் பங்கேற்றுள்ள, ஐ.என்.எஸ்., ஜலஷ்வா, ஜப்பானின் சசாநானி, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் உள்ளிட்ட, ஐந்துக்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள், சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஜலஷ்வா கப்பலில், மூன்று நாடுகளின் கடற்படை அதிகாரிகள் பங்கேற்ற துவக்க விழா, நேற்று நடந்தது.

மூன்று நாடுகளுக்கு இடையில் நல்லுறவு


இந்திய - ஆசிய - பசிபிக் பெருங்கடல் பிராந்தியம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்து வருகிறது. இந்தசூழலில், இத்தகைய கூட்டு போர் ஒத்திகை நிகழ்ச்சி, அவசியமானதாக ஆகியுள்ளது.இத்தகைய கூட்டு போர் ஒத்திகை, மூன்று நாடுகளுக்கு இடையில் நல்லுறவை, தனிப்பட்ட முறையில் அதிகரிக்க பெரிதும் உதவும்.
மூன்று நாடுகள் பயன்படுத்தும் கப்பல் பொறியியல் நுட்பம், விமானங்கள், பல்வேறு ரக ஏவுகணைகளின் தொழில்நுட்பம், படைக்கலன்கள், துப்பாக்கிகள் போன்றவை, வலுவானவை. அந்த நுட்பங்களை, இப்போது பகிர்ந்து கொள்வோம்.
தடைகள் அற்ற கடல் பயணம் மற்றும் சீரான சர்வதேச கடல் வர்த்தகத்திற்கு, கடல் சார் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு, அமைதியை விரும்பும், இந்த மூன்று நாடுகள் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியம்.
-வில்லியம் பைர்ன், அமெரிக்க கடற்படை கமாண்டர்

ராணுவ உறவை, மேலும் வலுப்படுத்தும்


கடந்த, 2016 ஜூலையில் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஜப்பான் அதிகாரப்பூர்வமாக பங்கேற்கும் முதல், மலபார் போர் ஒத்திகை நிகழ்ச்சி இது. இதில், 'இசுமோ, சசனாமி' ஆகிய இரு போர்க் கப்பல்கள் பங்கேற்றுள்ளன.இந்திய பிரதமர் மோடி, 2016 நவம்பரில், ஜப்பான் வந்தார். அப்போது, இரு நாட்டு ராணுவ உறவை, மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்த

Advertisement

நடவடிக்கையில், ஜப்பான் தொடர்ந்து பங்கேற்க வழிகோலப்பட்டது.
கடல் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு, பொதுவாகவே, சர்வதேச சமுதாயம் அமைதியாக வாழ வழிவகுக்கும். எங்கள், இசுமோ போர்க் கப்பல், ஜப்பான் கடற்படையில் சேர்க்கப்பட்ட பின், நாங்கள் பங்கேற்கும் மிகப் பெரிய போர் ஒத்திகை இதுவே ஆகும். இந்த போர்ப் பயிற்சி பெருவெற்றி பெறும்.
-ஹிரோஷி யமமுரா, ஜப்பானிய கடற்படை தளபதி

கடந்த, 7ல் துவங்கி, 17 வரை, இந்த ஒத்திகை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக, கடற்படை தொழில்நுட்பம் குறித்து நேரடி விவாதங்கள், போர் முறை பற்றிய கருத்து பரிமாற்றங்கள், சென்னை துறைமுகத்தில், 13ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மலபார் ஒத்திகையில், 19 கப்பல்கள், இரண்டு நீர்மூழ்கி கப்பல்கள், 95 விமானங்கள் பங்கேற்கின்றன. மூன்று நாடுகளின் கூட்டு ஒத்திகை, வருங்கால சவால்களை எதிர்கொள்ள பெரிதும் உதவும்.
-விஸ்வஜித் தாஸ் குப்தா, இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய தளபதி

கரையிலும் நடக்கிறது


கடந்த, 2016ல், ஜப்பான் கடல் பகுதியில், மலபார் போர் ஒத்திகை நடந்தது. இந்த ஒத்திகையால், எங்களது நட்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும். இதில், விமானந்தாங்கி கப்பல்கள், கடல் பகுதி வான் எல்லை பாதுகாப்பு, நீர்மூழ்கிக் கப்பல் பயன்பாடு, தேடுதல் வேட்டை போன்ற அம்சங்கள் பற்றிய முக்கிய பயிற்சிகள் நடக்க உள்ளன. கடலில் மட்டுமின்றி, கரையிலும் இது நடக்கிறது. இது, இம்முறை விமானம் தாங்கி கப்பல்கள் பங்கேற்கின்றன. கூட்டு ஒத்திகை வரலாற்றில், இது முக்கியமான மைல் கல்.
-பிஷ்ட், இந்திய கிழக்கு கடலோர பிராந்திய துணை தளபதி

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
YesJay - Chennai,இந்தியா
11-ஜூலை-201719:38:46 IST Report Abuse

YesJayஅப்படியே நாலு குண்டை கொலோம்போ துறைமுகத்தில் வீசவும் . அப்புறம் எங்க இருந்து வந்து மீனவர்களை கைது செய்யறான்னு பார்க்கலாம்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-ஜூலை-201719:01:59 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தீபாவளி இல்லாதவங்க, அன்னிக்கி வெடி வெடிக்காதவங்க கார்த்திகை மாசம் பெரிய கார்த்திகை அன்னிக்கி வெடிச்சு வெடியை காலி பண்ணுவாங்க. அது மாதிரி தான்.. பட்டாசு வெடிச்சு கொண்டாடுறான் வெள்ளைக்காரன். அப்புறம் இந்தியா கிட்டே 10 லட்சம் கோடிக்கு புதுசா பட்டாசு விப்பாங்க.. நாம் தான் ஆஹா நம்மாளுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கிறாங்கன்னு பெருமிதப்பட்டுக்குவோம்.. கொடுமை..

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
11-ஜூலை-201715:17:46 IST Report Abuse

Pasupathi Subbianசீனா தனது நாடு பிடிக்கும் ஆசையை நன்கு வெளிப்பட காண்பித்து விட்டது. தென்சீனக்கடலில் அது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. வியட்நாம் , மற்றும் சுற்றி இருக்கும் நாடுகளை அது தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சி செய்யும் இந்த நேரத்தில் , இந்த மூன்று நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, ஒரு மறைமுக எதிர்ப்பு என்றே கூறலாம். இதெல்லாம் புரிந்துகொள்ள சிறிது யோசனை அவசியம். எடுத்தோமா , கவிழ்த்தோமா என்று தடாலடி வேலை உதவாது. முள்ளின் மேல் பட்ட சேலை. கிழியாமல் எடுப்பதே அவசியம் . அதற்காக பாதுகாப்பை விட்டுக்கொடுத்து சமாதானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நமது படைகள் சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து எல்லையில் நிரந்தர நிலைப்பாட்டை எடுத்து இருப்பது மிக சமயோஜிதமான விஷயம். எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்களுக்கு நமது புதிய கட்டமைப்புகள் உணவு மற்றும் சகல வசதிகளும் செய்துதர சுலபமாக உள்ளன என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சீனாவுக்கு தனது வியாபார எல்லையை விஸ்தரிக்க இந்தியா பெரும் தடையாக உள்ளது. காலப்போக்கில் இந்தியா சீனாவின் வியாபாரத்தை அதன் வியாபார தந்திரத்தை முறியடித்து, மோடி அவர்கள் கூறியபடி இந்திய தயாரிப்புகள் விற்பனையில் உலகை கலக்க வரும் காலம் விரைவில் வருகிறது. அப்போது அவை சீன தயாரிப்புகளுக்கு போட்டியாக இருக்கும் , இதை எண்ணியே சீனா இந்தியாவை மிரட்டி பார்க்கிறது. இதே மிரட்டல் சென்ற ஆட்சியாளர்கள் காலத்தில் வந்தபொழுது இந்தியா மௌனம் காத்தது, விட்டும் கொடுத்தது. ஆனால் தற்பொழுதைய அரசு பிடிவாதமாக நிலை maaramal இருப்பது , சீனாவுக்கு எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது. ஏற்கனவே சீனா இலங்கை பகுதியில் தனது கடல் படையை நிலைநிறுத்தும் முயற்சியில் , இந்திய தலையீட்டினால் தோல்வியுற்ற நிலையில் , பாகிஸ்தான் , ஆப்கனிஸ்தான் மூலம் கடல் எல்லைக்கு செல்லும் முயற்சியிலும், ஆப்கானிஸ்தான் ஊடுருவலுக்கு இந்திய மறைமுக எதிர்ப்பினால் தோல்வியுற்று உள்ளது. உலக வியாபார ஒப்பந்தத்தில் மன்மோகன் அரசு கையெழுத்து இட்டு இந்தியாவை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் , இந்தியா சீனா பொருட்களை பகிஸ்கரிக்க முடியாமல் தத்தளிக்கிறது. அதே போன்று அன்று இந்திராகாந்தி பங்களாதேஷ் , பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்திய படையை உபயோக படுத்தியது போல இன்று பாகிஸ்தான் மீது படையெடுக்க முடியாது காரணம் , இந்தியா பல்வேறு இடங்களில் செய்துகொண்டு இருக்கும் ஒப்பந்தங்கள் ( காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடபட்டவை) இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவை கட்டுப்படுத்துகின்றன. பொருளாதார விசயத்தில் முன் காங்கிரஸ் , உலகநாடுகள் தத்தளிக்கும் காலத்தில் , இந்தியர்களின் சேமிப்பும், இந்தியர்களின் வெளிநாட்டு வருமானங்களை வைத்து சமாளிக்க முடிந்தது, ஆனால் அந்த ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளால் இன்று பொருளாதாரத்தில் பின்தங்கி, முதலீட்டுக்கு வெளிநாடுகளின் ஆதரவு தேவைப்படுகிற நிலை. இன்று உலகம் சுற்றும் வாலிபன் என்று நம்மால் கேலிசெய்யப்படும் மோடி அவர்களின் வெளிநாட்டு பிரயாணங்களினால் இந்தியாவுக்கு அந்நிய ஆதரவும், முதலீடுகளும், அதிகரித்துக் கொண்டு உள்ளன என்பதை பல புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. சீன பிரச்சனையில். இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களையும், முந்தய பாதுகாப்பு அதிகாரிகளையும், முந்திய ஆட்சி செய்த காங்கிரசின் தலைமையையும் சீனா தற்பொழுது கலந்துகொண்டு , தங்களுக்கு ஆதரவு தேடிக்கொண்டுள்ளது. இதற்க்கு ஊடங்களில் சிலவும் உடந்தையாக உள்ளன. இந்த ஊடங்களை கட்டுப்படுத்தும் இந்திய அரசின் முயற்சி, ஏறத்தாழ வெற்றிபெறும் நிலை. இப்படி அந்நிய ஊடுருவல், மத வன்முறை, பொருளாதார சிக்கல்கள், அந்நிய ஆதரவு என்று உள்ள இந்திய மக்கள். என்று பலதரப்பட்ட பிரச்சனைகளை சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு , இவற்றை சமாளித்து வெளிவர , மோடியின் சாதுர்யத்தை , அவரின் நற்பெயரை , அவரின் யுக்தியை உபயோக படுத்தவேண்டியது அவசியம். தீர்வு இன்றே இல்லை நாளை உண்டு. பொறுமையினால் வெற்றிபெற முடியும்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X