பொது செய்தி

இந்தியா

நெடுஞ்சாலை பாதுகாப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள்

Updated : ஜூலை 11, 2017 | Added : ஜூலை 11, 2017 | கருத்துகள் (2)
Share
Advertisement
தேசிய நெடுஞ்சாலை, சி.ஆர்.பி.எப்., மத்திய தொழிலக பாதுகாப்பு படை, மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது கொடூர சம்பவங்கள் நடைபெறுவதால், அவற்றை தடுக்க மத்திய தொழிலக பாதுகாப்பு படையான சி.ஆர்.பி.எப்., வீரர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.


அடுத்தடுத்து சம்பவங்கள்

டில்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில், ஏப்., 1ம் தேதி பெக்லு கான், 55 என்பவர் பசு பாதுகாவலர்களால் அடித்து கொல்லப்பட்டார். உ.பி., மாநிலத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையுடன் இணைக்கும் ஜிவார் - புலந்த்சாகர் நெடுஞ்சாலையில், கடந்த மே, 25ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்களை, ஐந்து பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. அந்த குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலை செய்தது. புலந்த்சாகர் நெடுஞ்சாலையில், கடந்த ஆண்டு ஜூலை, 31ம் தேதி ஒரு தாயும், மகளும் கற்பழிக்கப்பட்டனர்.
வட மாநிலங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் கொடூர சம்பவங்கள் அவ்வப்போது நடந்தேறி வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கடந்த, 2000 ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், ' தேசிய நெடுஞ்சாலைகளை பாதுகாக்க, சி.ஆர்.பி.எப்., வீரர்களை பணியமர்த்துவது சரியான செயலாக இருக்கும்.

முதல் கட்டமாக, டில்லியை ஒட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலை - 8 ல், சி.ஆர்.பி.எப்., வீரர்களை நிறுத்தலாம்' என, கூறப்பட்டு இருந்தது. அத்துடன் காஷ்மீர் மாநிலம், ஜம்மு பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு வேண்டும் எனவும் கோரப்பட்டது.

2001ம் ஆண்டில், டில்லி -ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு போடுவது குறித்து ஒரு அறிக்கை தரும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டது. அத்துடன், டில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், 192 இடங்களில் பாதுகாப்பு வீரர்களை நிறுத்தவும் அனுமதி அளித்தது. ஆனால், 2002 அக்., 31ம் தேதி இந்த திட்டம் கை விடப்பட்டது. இதற்கு உ.பி., ராஜஸ்தான், பஞ்சாப் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததே காரணம்.


17 ஆண்டுகளுக்கு பிறகு

தற்போது, வட மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அவ்வப்போது கொடூர சம்பவங்கள் நடந்து வருவது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவலையை ஏற்படுத்தியது. எனவே, 17 ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலை ஆணையம் கேட்ட, சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு தருவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-ஜூலை-201717:04:39 IST Report Abuse
Lion Drsekar முதலில் இரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள், கொள்ளையர்களை அந்த இடத்திலேயே சுட்டு சாகடிக்க சட்டம் கொண்டு வாருங்கள், சமீபத்திய ஷீரடி செல்லும் இரயிலில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்த செய்தி இன்னமும் மனதை விட்டு நீங்கவில்லை,
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
11-ஜூலை-201715:10:36 IST Report Abuse
சுந்தரம் தேசவிரோத சக்திகள் தீவிரவாதிகள் வெடி பொருட்கள் கடத்தல் தங்கம் கடத்தல் போதை பொருட்கள் கடத்தல் ஆகியவற்றை கண்டு பிடிக்கும் பணியில் விமான நிலையங்களில் ஈடுபட்டுள்ள சி ஐ எஸ் ஃஎப் வீரர்களை நீக்கிவிட்டு அங்கு தனியார் பாதுகாப்பு வீரர்களை நிரப்ப போகிறோம் என்று ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. இப்போது நெடுஞ்சாலைகளில் சி ஆர் பி ஃஎப் வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்தப்போவதாக திட்ட அறிக்கை கூறுகிறது. குழப்பத்தின் மறு பெயரில் அரசு இயங்குவது போல தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X