பொது செய்தி

இந்தியா

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம்: அமெரிக்க நிறுவனம் ஒப்புதல்

Added : ஜூலை 11, 2017 | கருத்துகள் (25)
Share
Advertisement
அமெரிக்கா,பாஸ்டன், சி.டி.எம்., ஸ்மித், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நகாய், லஞ்சம் நீதித்துறை, கருவூலம்

புதுடில்லி: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான, 'நகாய்' அதிகாரிகளுக்கு, 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததை, அமெரிக்க நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும் என நகாய் அறிவித்துள்ளது.


கோவா மாநில பணிகள்

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில், சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கோவா மாநிலத்தில், 2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை, நெடுஞ்சாலை அமைப்பு, ஆய்வு பணி மேற்கொள்வது, குடிநீர் திட்டம் மேற்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெற, நகாய் அதிகாரிக்கு 6.7 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு விசாரித்தது. அப்போது லஞ்சம் கொடுத்ததை சி.டி.எம்., ஸ்மித் நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும், இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளில் முறைகேடாக ஒப்பந்தங்கள் பெற்று லாபம் ஈட்டியதில், 25 கோடி ரூபாயை அமெரிக்க கருவூலத்தில் செலுத்தவும் அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க நிதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை குறித்து விசாரித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகாய் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நண்பா - kudamook,இந்தியா
12-ஜூலை-201701:22:21 IST Report Abuse
 நண்பா வெயில் காலத்தில் எப்படி கொசுக்கள் வெளியே வருவதில்லையோ அதுபோல பாஜகவின் ஆட்சி காலத்தில் ஊழல் வெளியே வருவதில்லை
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-ஜூலை-201722:31:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இது அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்து கொடுத்ததால் தெரிந்த கொள்ளை.. யாரும் சொல்லாமல் அடிக்கப்படும் கொள்ளை இதை போல ஆயிரம் மடங்கு.. ஒரு லோடு ஜல்லிக்கே 2000 ரூவா கமிஷன் கேட்டுச்சு அப்போலோ அம்ம்மா.. ரெட்டிகளின் ராஜ்ஜியம். கிலோமீட்டருக்கு ஒரு சில கோடியாவது கமிஷன்.. காட்காரி காட்டில் கமிஷன் மழை..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
11-ஜூலை-201722:27:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //2011ம் ஆண்டு முதல், 2015ம் ஆண்டு வரை// கட்சி பாகுபாடின்றி .. ஆட்சி பாகுபாடின்றி.. ஊழலில் ஒற்றுமை.. அப்புறம் எப்படி உலகத்திலேயே ஊழலில் நெம்பர் ஒண் ஆகமுடியும்.. இந்தியாடா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X