கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு

Updated : ஜூலை 11, 2017 | Added : ஜூலை 11, 2017 | கருத்துகள் (9)
Advertisement
மாணவர் சேர்க்கை, எம்.பி.பி.எஸ்., மருத்துவம், இட ஒதுக்கீடு, சென்னை ஐகோர்ட்

சென்னை: ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan SA - Thni,இந்தியா
12-ஜூலை-201715:09:57 IST Report Abuse
Saravanan SA இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? இப்படியே எல்லோரும் கோர்ட்டுக்கு போய்க்கொண்டிருந்தால் காத்திருக்கும் மாணவர்களின் கதி என்ன?
Rate this:
Share this comment
Cancel
Edwin - Tirunelveli, Tamil Nadu,இந்தியா
12-ஜூலை-201707:42:07 IST Report Abuse
Edwin சமீப காலமாக நீதிமன்ற செயல்பாடுகள் மக்களிடையே அதன் நம்பகத் தன்மையில் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. ஒரே பிரச்சினைக்கு இரண்டு முற்றிலும் மாறுபட்ட தீர்ப்புகள் என்பது மறைந்த முதல்வர் வழக்கில் தெரிய வந்தது. அது போல் தான் இந்த தீர்ப்பும் என்று கருதுகிறேன். இனி ஒருவர் இந்த தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் இதற்கு மாறுபட்ட தீர்ப்பு கிடைக்கும். நமது நாட்டை ஜனநாயக நாடு என்று கூறுவதற்கு பதிலாக பணநாயக நாடு என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
karthikeyan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஜூலை-201723:13:27 IST Report Abuse
karthikeyan நீதிபெருமான்களே,அரசியல் பெருமான்களே நீட்தேர்வு CBSE அடிப்படையில் தான் நடந்தது . எனவே இந்த தேர்வில் எளிமையாக அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் CBSE மாணவர்களே! தமிழக பாடதிட்ட மாணவர்களுக்கு கடைசிவரை இந்த தேர்வினைப்பற்றி விழிப்புணர்வே இல்லை. எனவே இவர்கள் குறைவான மதிப்பெண்தான் கிடைத்தது, இதையெல்லாம் மனதில் வைத்துதான் தீர்ப்பை எழுதவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X