கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் இந்தியா: சீன நாளிதழ் பொறாமை

Added : ஜூலை 11, 2017 | கருத்துகள் (44)
Share
Advertisement
இந்தியாவில் முதலீடு, சீனா பொறாமை,ஜிஎஸ்டி,மேக் இன் இந்தியா

பீஜிங்: ஜிஎஸ்டி உள்ளிட்ட பல காரணங்களால், அதிக வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியா ஈர்த்து வருவதாக சீன அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை தலையங்கத்தில் வெளியிட்ட செய்தி: குறைந்த விலை கொண்ட உற்பத்தி நிறுவனங்கள் தற்போது சீனாவை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த நிறுவனங்கள் தற்போது இந்தியாவுக்கு முக்கியமாக உள்ளது. ஜிஎஸ்டி அமல் படுத்தப்பட்ட சூழ்நிலையில் பாகஸ்கோன், மிடியா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளன.
புதிய வரி சீரமைப்பானது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கவிக்கும். இந்த வரி மூலம் பல வரிகள் ஒரு வரியாக மாறியுள்ளது. இதன் மூலம், தேசிய அளவில் பொது சந்தைக்கு அடித்தளமிட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தி போட்டி திறனை அதிகரித்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தை இந்திய அரசு அமல்படுத்திய பின்னர், உலகின் உற்பத்தி மையமாக மாற்ற பல நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதேநேரத்தில், இந்தியாவின் இந்த முயற்சி வெற்றி பெறுவது என்பது எளிதானதாக இருக்காது. மோசமான உள்கட்டமைப்பு மற்றும் கலாசார சிக்கல்கள் ஆகியவை இந்தியாவின் திட்டத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AXN PRABHU - Chennai ,இந்தியா
12-ஜூலை-201709:14:18 IST Report Abuse
AXN PRABHU 650 கோடி உள்ள உலக மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் அதாவது சுமார் 125 கோடி மக்கள் வாழும் நாடு இந்தியா. சீன மக்கள் தொகை 150 கோடி . ஆசியா கண்டம் மட்டுமே சுமார் 350 கோடி மக்களை கொண்டது. ஆனால் ஐரோப்பா , வட அமெரிக்கா , தென் அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா எல்லாம் சேர்ந்தாலும் மக்கள் தொகை 300 கோடி தான். இதில் 99 % தொழில் நுட்பங்களும் முதலீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளிடம் உள்ளன. இந்த வர்த்தக தொழில் நிறுவனங்களை ஏற்கனவே தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் வேரூன்றி தங்களது சந்தையை பார்த்து விட்டன. இந்தியா , சீனாவுக்கு அடுத்து சுமார் 25 ஆண்டுகள் கழித்து தாராளமயம் ஆக்கலை 1992 களில் தாமதமாக துவங்கியது. அதன் விளைவாக சீனாவில் வெற்றிகண்ட தொழில் நிறுவனங்கள் இனி இந்தியாவை தான் தங்களது பொருட்களுக்கு சந்தை விரிக்கும். இதில் வியப்பு ஏதும் இல்லை. சீனாவை விட நாம் வெகுவாக பின் தங்கி விட்டோம். இப்போதும் சீனாவிடம் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வில்லை. சீன அரசு நிலங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் தொழில்களை தனது நாட்டில் ஈர்க்க அந்த நாடு தேவையான நிலங்களை தொழில்உ முனைவோருக்கு உடனே மிக மிக குறைந்த விலையில் அளிக்க முடிகிறது. இந்தியாவில் நிலங்கள் ஒருசில செல்வந்தர்களின் வசம் உள்ளது. நிலங்களின் விளையும் பல ஆயிரம் மடங்கு சீனாவை விட அதிகம். இந்தியாவில் முதலீடு செய்ய பல நூறு ஆயிரம் கொடிகள் நிலங்களுக்கு மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும். இந்த நிலங்களை கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்க கோடிக்கணக்கில்னா அரசியல்வி வாதிகளுக்கு லஞ்சம்ல் தர வேண்டும். சீனாவில்முதலீடு செய்ய நிலங்களுக்கு சில லட்சங்கள் சில மணி நேரங்கள் போதும். சீனாவில் தொழில் துவங்க அனுமதி ஒரு சில மணி நேரங்களில் மிக சொற்ப செலவில் கிடைத்துவிடும். இந்தியாவில் தொழில் துவங்க, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், தொழில் துறை, மந்திரி, கட்சி தலைவர், அவன் இவன் என கண்டா பயலுக்கும் கோடி கோடியாக கருப்பு பணமாக லஞ்சம் அழ வேண்டும். ந்த இழி நிலைசீனாவில் இல்லை. இது மிகப்பெரிய அனுகூலம். அதன் பின் அரசின்அணுகு முறை. சீனாவில்பல அரசியல் கட்சிகள் இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசின் அணுகுமுறைகள் மாறுவதில்லை. இந்தியாவில் ஒரே அரசு ஒரே அரசியல்து தலைவர் பல அணுகுமுறைகளை கொண்டுள்ளார். தனது செல்லப்பிள்ளைகளான இந்திய தொழில் அதிபர்களை வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் சேர்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாத அவர்களை பெரும் பணக்காரர்கள் ஆக்க நிர்பந்திக்கிறது இந்திய அரசு. இது அடுத்த காரணம். சீன அரசு பௌத்த மதத்தை தாங்கி பிடித்து , மற்ற மதங்களின் வழிபாட்டுத்தலங்களை இடிப்பது எப்படி , மக்களை மத ரீதியாக , பிளப்பது எப்படி என்று சிந்திப்பது இல்லை. இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி மதங்களையும் ஜாதிகளையும் கட்டிக்கொண்டு அழும் அரசியல் கட்சிகள். சீனாவில் தொழில் துறையை வர்த்தகத்தை நிர்வகிக்க திறமை உள்ளவர்கள் தொழில் அமைத்து வளர முடியும். இந்தியாவில் குஜராத்தியாகவும் , மார்வாடியாகவும், பார்சியாகவும் உள்ளவர்களை மட்டுமே அரசும் , வங்கிகளும், அரசியல் கட்சிகளும் வளர்த்து விட முழு முயற்சி மேற்கொள்ளும். தென் இந்தியர் என்றால் எவ்வளவு குடைச்சல் கொடுக்க முடியுமோ அவ்வளவு குடைச்சலை மத்திய அரசு தரும். இந்த இழி நிலை சீனாவில் இல்லை. சீனாவில் அரசு அதிகாரிகள் , அரசியல்வாதிகள் தொழில் அதிபர்களை பணம் சுரண்ட லஞ்சம் பிடுங்க உபயோகிப்பதில்லை. இங்கு ஒரு வார்டு கவுன்சிலர் துவங்கி , IAS அதிகாரி மந்திரிகளை, வருவாய் துறை அதிகாரி என எல்லோரும் கோடிக்கணக்கில் லஞ்சம் பிடுங்குகிறார்கள். இந்த இழி நிலை சீனாவில் இல்லை. மேற் சொன்ன இழி நிலைகளை தாங்கி பிடித்துக்கொண்டு இந்தியா சீனாவை வெல்லும் என்று சொல்லுவது அபபத்தத்தின் உச்சம்.
Rate this:
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-ஜூலை-201711:53:04 IST Report Abuse
மலரின் மகள்தன சொந்த மாணவர்கள் சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்று டினமான் சதுக்கத்தில் அமைதியாக கூடினால் சீனாவால் எந்த முன்னறிவிப்பு எதுவும் இன்றி சகட்டு மேனிக்கு சுட்டு தள்ளி விட்டு ஹாய்யாக இருக்க முடிகிறது. விஷவூசி போட்டு கருவை கொல்ல தாராளமாக முடிகிறது. பெண்களை சிகரெட்டு பிடிக்க ஆதரிக்கிறது. ஜனநாயகம் இல்லாததால் அராஜகம் செய்வதை தங்கள் சொந்த குடிகளே கூட எதிர்க்க முடியாது. குடிமக்கள் சுதந்திரமாக பேச எழுத வாழ வகையில்லாத தேசத்தை பற்றி பாராட்டுக்கள் எதற்கு. உங்கள் சொந்த வீடு பரம்பரை வீடு உங்களுக்கு எத்துணை நாளைக்கு என்று உங்களுக்கே தெரியாது அது டான் சீனர்களின் ஆட்சி. நமது கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வீட்டை, ஓரிரவில் இடித்து விட்டு அரசு சொல்லும் இடத்தில் அவர்கள் தரும் இடத்தில் நீங்கள் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால் அந்த தேசத்தை நேசிப்போமா? நம் வாழும் நாடு உலகில் சிறந்தது. என் நாடாயினும், தாய் நாடே உயர்ந்தது என்ற சிந்தனை வேண்டும். தாயிற் சிறந்தது யாருளர். நாம் பிறந்த நாட்டை நாம் டா உயர்ந்த வேண்டும். வெளி நாட்டவர்களை அதற்கு பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை, அனால் அவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு அது தான் சிறந்தது, அது தான் சீன என்று பீற்றி கொல்ல கூடாது. சீனாவில் வானளாவிய கோபுரங்கள் மாட மாளிகைகள் இருக்கிறது ஆகையால் அவர்கள் சிறந்தவர்கள் என்று அவர்களை நாம் பீற்றி கொள்கிறோம், அதனால் சராசரி சீனாவின் வாழ்வு வளர்ந்து விட்டதா? ராணுவத்தினர் கூட பெரும் சம்பளம் அங்கு மிக மிக குறைவு. வேறு வழியின்றி வாழ்கிறார்கள். விவசாயி என்ன அங்கு தங்க தட்டிலா சாப்பிடுகிறார். அங்கு இருக்கும் டிஸ்னி லாண்டிற்கு 90 சதவீத குழந்தைகளுக்கு செல்வதற்கு குடும்ப பொருளாதாரம் அனுமதிக்க வில்லை என்று அறிவீர்களா? அங்கிருக்கும் மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் எல்லாம் வெளிநாட்டினருக்கு சொந்தமானது அதில் அங்குள்ள சீனர்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது. அவர்களின் வியாபாரத்திற்காக ஏற்படுத்திய சாலை ரயில் போக்குவரத்தை அனைவரும் பயன் படுத்தி கொள்ளலாம் அது மட்டும் டான் அவர்களுக்கு கிடைத்தது. பத்து ரூபாய்க்கு பொருளை தயாரித்து பதினோரு ரூபாய்க்கு விற்கும் ஒரு சீன உற்பத்தியாளர், தொழிலாளியின் வாழ்வு வளர்ந்து விடுமா? கம்யூனிச தத்துவத்தின் வாய்ப்புகளை மேலை நாட்டவர்கள் நன்கு பயன்படுத்தி கொண்டார்கள் அவ்வளவே?...
Rate this:
Cancel
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
12-ஜூலை-201704:35:14 IST Report Abuse
Jey Kay - jeykay@email.com சீனா எப்பொழுதுமே தனக்கு வேண்டியதை ஈவுஇரக்கமின்றி இரும்புக்கரத்துடன் தான் நினைத்ததை சாதித்துவிடும். ஆனால் இந்தியாவை எதிர்த்து இம்முறை நிச்சயம் வெல்லமுடியாது. அதற்கு கட்சிகளை புரம் தள்ளி இந்திய தேச முன்னேற்றத்திற்கு தன்னாலான காரியங்களை செய்வது, முன்னேற்றத்திரிக்கு அரசு எடுக்கும் எந்த ஒரு காரியத்தையும் எள்ளிநகையாடாமல் இருப்பது ்வசியம்.
Rate this:
Cancel
Mano - Madurai,இந்தியா
12-ஜூலை-201701:16:20 IST Report Abuse
Mano நானும் ஒரு காலத்தில் "Be Indian buy indian " என்று நம்ம நாட்டு ொருளைதான் வாங்குவேன். இப் ோ " Make in India " என்கிற பெயரால மட்டமான சரக்குகளை உற்பத்தி பண்ணுறதால எதையும் வாங்குவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X