பொது செய்தி

தமிழ்நாடு

சபாஷ்... வலைதளத்தில் விரிந்த மனிதநேயம்! கீழே கிடந்த, 14 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் சேர்ப்பு

Added : ஜூலை 12, 2017 | கருத்துகள் (17)
Advertisement
 மனிதநேயம், Humanities, சமூக வலைதளம்,Social Media, Social Network, திருப்பூர்,Tripur, தாராபுரம் ரோடு,Dharapuram Road, கோவில்,Kovil, சுப்ரமணியம்,Subramaniam, விவசாயி , Farmer, கொய்யாப்பழம்,Koiapapalam, வெங்கடேஸ்வரா,Venkateswara, பூர்ணிமா ,Poornima, வாட்ஸ்அப்,Whats app, பேஸ்புக்,Facebook, இளங்கோவன் ,Ilangovan,திருப்பூர் · திருப்பூரில், கீழே கிடந்த, 14 ஆயிரம் ரூபாய் பணம், சமூக வலைதள தகவலால், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது; பணத்தை ஒப்படைத்த நபர்களை, பொதுமக்கள் பாராட்டினர்.
திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழியை சேர்ந்தவர் சுப்ரமணியம், 51; விவசாயி. இவர், கடந்த, 4ல், திருப்பூர் கே.செட்டிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, வியாபாரியிடம் கொய்யாப்பழம் வாங்கினார். அப்போது, அவரது பாக்கெட்டில் இருந்த பணம், தவறுதலாக கீழே விழுந்தது. இதை கவனிக்காமல், பைக்கை எடுத்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
அங்கு பழம் வாங்க வந்த வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த இளங்கோவன், 41, கீழேயிருந்த, 14 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்தார்; புறப்பட ஆயத்தமாக இருந்த சுப்ரமணியத்திடம் கொடுக்க, சத்தம் போட்டு அழைத்தார்; அதற்குள், அவர்
புறப்பட்டு சென்றார். இதையடுத்து, யாராவது பணம் கேட்டு வந்தால், தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டு, இளங்கோவன் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து, நண்பர் சுந்தரபாண்டியனிடம், இளங்கோவன் கூறினார். அவர், இத்தகவலை, "வாட்ஸ்அப்', "பேஸ்புக்'கில் பதி
விட்டார். இது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வளைகுடா நாட்டில், மஸ்கட்டில் வசிக்கும் பூர்ணிமா , அதே தகவலை, அவர் படித்த பள்ளியின் தோழியர் குழுவில் பகிர்ந்தார். அதில், சுப்ரமணியத்தின் மனைவி கீதா, இத்தகவலை பார்த்துள்ளார். அதிலுள்ள, இளங்கோவனை மொபைல் எண்ணுக்கு, தொடர்பு கொண்டு,
நடந்ததை கூறியுள்ளார்.பணத்தின் உரிமையாளர், அவர் தான் என்பதை, இளங்கோவனும், சுந்தரபாண்டியனும் உறுதி செய்தனர். இதனால், கொய்யா வியாபாரியிடம் கொடுத்து வைத்திருந்த, 14 ஆயிரம் ரூபாயை பெற்று, பணத்தை தொலைத்த அதே இடத்தில் வைத்து, சுப்ரமணியத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். கிடைத்த காசை, சத்தம் போடாமல் எடுத்து செல்லும் இக்காலத்தில், 14 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த, இருவரின் செயலை, பலரும் பாராட்டினர்.விவசாயி சுப்ரமணியம் கூறுகையில், "கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணம், எங்கும் போகாது என்பது, இதன் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பணம் இருப்பது குறித்து, எனது மனைவி யின் வாட்ஸ் அப் குழுவில் தகவல் வந்திருந்தது. அதை பார்த்து, தொடர்பு கொண்டு, உரிய அடையாளத்தை கூறி, பணத்தை பெற்றிருக்கிறோம்.அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படும் இந்த காலத்தில், இப்படியும் சிலர் இருப்பது, பாராட்டுக்குரியது; சமூக வலைதளங்களின் வாயிலாக, இத்தகைய பயனுள்ள தகவல்கள் பரிமாறப்படுவது, மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
உரியவரிடம் பணம் சென்றடைய, சமூக வலைதளங்கள் உதவிகரமாக இருந்ததாக, இளங்கோவன், சுந்தரபாண்டியன் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜூலை-201716:26:27 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அதனால்தான் மழையும் பெய்கிறது .
Rate this:
Share this comment
Cancel
Jay - Bhavani,இந்தியா
12-ஜூலை-201715:11:15 IST Report Abuse
Jay திருப்பூரின் பெயருக்கு நல்லதொரு உயரம், வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
unmaiyai solren - chennai,இந்தியா
12-ஜூலை-201713:55:05 IST Report Abuse
unmaiyai solren நேர்மையை பற்றி நன்கு arintha மாமேதை..சைத்தான் வேதம் ஓதுவதுபோல உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X