பொது செய்தி

தமிழ்நாடு

சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை: ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியது

Updated : ஜூலை 13, 2017 | Added : ஜூலை 12, 2017 | கருத்துகள் (69)
Advertisement
சசிகலா, சிறப்பு சமையல் அறை, ரூ.2 கோடி லஞ்சம், கைமாறியது

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பும், உணவுகளை செய்து கொடுப்பதற்காக, சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.பி., ரூபா, தன் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.பி.,யாக ரூபா, கடந்த மாதம் 23 ம் தேதி நியமிக்கப்பட்டார். இவர், பொறுப்பேற்றதும், சிறைத்துறையில், பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.இம்மாதம், 10 ம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு நடக்கும் பல மோசடிகளை, தன் அறிக்கை மூலம் வெளி கொண்டு வந்துள்ளார்.சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயணாவுக்கு சமர்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலாவுக்கு தனியாக சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பும் உணவு செய்து கொடுப்பதற்கென சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விஷயத்தில், தாங்கள் பணம் பெறவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைத்துறை டி.ஐ . ஜி.,யான நான், ஆய்வு மேற்கொண்டதை, தங்களுக்கு அறிக்கையாக அனுப்புகிறேன்.இவ்வாறு அவர், அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக, கர்நாடக கன்னட சேனல்களில், நேற்றிரவு பரபரப்பாக செய்திகள் வெளியானது. இது குறித்து ரூபாவிடம் விசாரித்தபோது அவர் ஆய்வு செய்ததையும், அறிக்கை சமர்ப்பித்ததையும் உறுதிபடுத்தினார். இது தொடர்பாக மாநில போலீஸ் டி.ஜி.பி., மற்றும் ஊழல் ஒழிப்பு படையிலும் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூலை-201716:01:15 IST Report Abuse
Pugazh V Demontisation வந்தும் பாதிக்கப்படாத பல்லாயிரம் பணக்காரர்களில் ஐவரும் ஒருவர். கண்டெயினரில் போகி வேண்டியவர்களுக்கு பணம் போயாச்சே அப்புறம் என்ன? இவரது கட்சி எம் எல் ஏ எம் பிக்களின் ஆதரவில் அல்லவா அடுத்த ஜனாதிபதியாக ஒருவரை பிஜேபி வைக்கப் போகிறது. சசியின் ஆதரவு ஏஎல் ஏக்களிடம் வாக்கு கேட்டாரே கோவிந்த. விளங்கிடும் ல?
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
13-ஜூலை-201713:17:35 IST Report Abuse
krishna என்ன கேவலமான நிலைக்கு தமிழ் நாட்டை ஜெயா என்கிற கொள்ளை கூட்ட தலைவி விட்டு சென்று இருக்கிறார்கள்.உயிருடன் இருந்து சிறையில் அவமான படாமல் போய் விட்டது வருத்தமாக உள்ளது.இத்தனைக்கும் அவர்களுக்குத்தான் நான் வோட்டு போட்டேன்.மிக கேவலம்.சசி போன்ற கொள்ளை கும்பலை வளர்த்து விட்டு நம்மக்கு விட்டு சென்றதுதான் இந்த ஜெயாவின் சாதனை.இந்த மன்னார்குடி கொள்ளை கூட்டத்திடமிருந்தும் அநாதிமுக என்ற கொள்ளை கும்பலாகிய EPS OPS போன்ற கொடியவர்களிடம் இருந்து விடுதலை கிடைத்தாலும் ஸ்டாலின் போன்ற அடுத்த கொள்ளை கும்பல்தன நம்மை ஆளும்.கேடு கேட்ட தமிழன் பணமும் சாராயமும் வாங்கி வோட்டு போட்டதற்கு இது போன்ற தலைவர்கள்தான் கிடைப்பார்கள்.அவமானம் தமிழன் எண்று SOLVADHARKKE
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-ஜூலை-201712:37:40 IST Report Abuse
Cheran Perumal குமாரசாமிக்கு கொடுத்த பணமே அம்போன்னு போயிட்டுது. இதுவும் அய்யோன்னு போவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X