பொது செய்தி

இந்தியா

சசியை சிக்க வைத்த ரூபா யார்?

Added : ஜூலை 13, 2017 | கருத்துகள் (63)
Advertisement
சசிகலா,sasikala, பெங்களூரு,Bangalore, பரப்பன அக்ரஹாரா சிறை, Parapana Agrahar Jail,சிறைத்துறை, Prisons, டி.ஐ.ஜி ரூபா,DIG Rupa, சிவில் சர்வீஸ் தேர்வு,Service Exam, உமாபாரதி, Umabharathi, கைது, Arrest, தனி சமையலறை , Individual Kitchen,லஞ்சம், Bribery, மத்திய அமைச்சர் உமாபாரதி,Union Minister Uma Bharati, சிவில் சர்வீஸ் தேர்வு , Civil Service Exam, ஐ.பி.எஸ்,IPS, தேசிய போலீஸ் அகாடமி,National Police Academy , ஜனாதிபதி விருது,Presidential Award,

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, இதற்கு முன் தற்போதைய மத்திய அமைச்சர் உமாபாரதியை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


குறி பார்த்து சுடுவதில் வல்லவர்

கர்நாடக மாநிலம், தேவங்கரே பகுதியை சேர்ந்தவர் ரூபா. இவர் சிவில் சர்வீஸ் தேர்வில், 2000ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்; தேர்ச்சி அடைந்தவர்கள் பட்டியிலில், 43வது இடம் பிடித்தவர். ஐதராபாத்தில் ஐ.பி.எஸ்., பயிற்சி பெற்ற போது, ஐந்தாவது இடத்தை பிடித்தவர். குறி பார்த்து சுடுவதில் திறன் மிகுந்தவர். தேசிய போலீஸ் அகாடமியில் பல விருதுகளை பெற்றவர். 2016ம் ஆண்டு ஜன., 26ம் தேதி ஜனாதிபதி விருது பெற்றவர்.


பரத நாட்டியம் பயின்றவர்

ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, முறையாக பரத நாட்டியம் பயின்றவர். அதே போல், இந்துஸ்தானி இசையையும் பயின்றவர். மத்திய பிரதேச முதல்வராக இருந்த உமாபாரதியை, நீதிமன்ற உத்தரவின் பேரில்கைது செய்தவர். பெங்களூருவில், துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய போது, வி.வி.ஐ.பி.,க்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தேவையில்லாமல் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றவர். அதே போல் ஆயுதப்படை டி.சி.பி.,யாக பணியாற்றி போது, அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா வாகன அணிவகுப்பில், அனுமதி பெறாமல் இடம் பெற்று வந்த வாகனங்களை திரும்ப பெற்று அசத்தியவர். சமீபத்தில், நான்கு சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு சென்ற போது மைசூரு குடகு எம்.பி., பிரதாப் சிம்ஹாவுடன் டுவிட்டர் இணைய தளத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (63)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Gunasekaran K T - chennai,இந்தியா
14-ஜூலை-201706:43:09 IST Report Abuse
Gunasekaran K T நேர்மையும் உண்மையும் உள்ள இடத்தில் ஆண்டவன் துணை இருப்பான். தொடரட்டும் உங்கள் பனி. வாழ்த்துக்கள் ரூபா.
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
14-ஜூலை-201703:12:41 IST Report Abuse
SANKAR இதுபோல் சிறை கம்பிகளுக்கு பின்னால் நடக்கும் MURKY DEALS... நாட்டில் வெளியில் மட்டுமல்ல ஏற்ற தாழ்வு சிறைக்கு உள்ளும் அதுவே இருப்பதை காட்டுகிறது... முன்பு போயஸ் கார்டனில் ஏ சி சுக போகத்தில் இருந்தவர்கள் தற்சமயம் பெங்களூர் மிதமான குளிரில் வாய்க்கு ருசியாக வகைவகையாக சாப்பிட்டு வருகிறார்கள்... இதில் என்ன தண்டனை அவர்களுக்கு... ? கடவுள் பார்த்து தண்டனை கொடுத்தால்தான்...
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-201722:21:03 IST Report Abuse
Matt P ரூபா இடத்தில் கனிமொழி இருப்பாரானால் ,கனிமொழி பேசி முடிந்த அளவு பணம் சேர்ந்திருப்பார் தவறு செய்பவர்கள் பேசி கொள்வார்கள் ........."பொழைக்க தெரியாத பொண்ணு ..,திறமை குறைவு என்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X