குளத்தில் "பணம்' அள்ளும் அதிகாரி லாட்டரியில் "சுருட்டும்' எஸ்.ஐ.,

Added : ஜூலை 14, 2017
Advertisement
திருப்பூரில், பெரிய கடை வீதிக்கு வந்த சித்ராவும், மித்ராவும் லேசாக பெய்த மழையில் நனைந்தவாறே, மொபட்டை கிளப்பி கொண்டு புறப்பட்டனர்.""குளத்துல, மண் அள்ற விஷயத்தில, தண்ணீர் நிரம்புதோ இல்லையோ, பல ஆட்களின் பாக்கெட் ரொம்பிடுச்சு,'' என்று புதிர்போட்டு, "டாபிக்கை' ஆரம்பித்தாள் சித்ரா.""என்ன சொல்ற,'' என, அதிர்ச்சியாக கேட்டாள் மித்ரா.""சாமளாபுரம் குளத்துல மண் அள்ள
குளத்தில் "பணம்' அள்ளும் அதிகாரி லாட்டரியில் "சுருட்டும்' எஸ்.ஐ.,

திருப்பூரில், பெரிய கடை வீதிக்கு வந்த சித்ராவும், மித்ராவும் லேசாக பெய்த மழையில் நனைந்தவாறே, மொபட்டை கிளப்பி கொண்டு புறப்பட்டனர்.
""குளத்துல, மண் அள்ற விஷயத்தில, தண்ணீர் நிரம்புதோ இல்லையோ, பல ஆட்களின் பாக்கெட் ரொம்பிடுச்சு,'' என்று புதிர்போட்டு, "டாபிக்கை' ஆரம்பித்தாள் சித்ரா.
""என்ன சொல்ற,'' என, அதிர்ச்சியாக கேட்டாள் மித்ரா.
""சாமளாபுரம் குளத்துல மண் அள்ள அனுமதிச்சாங்க. குறிப்பிட்ட ஆழத்துக்கு பின், அங்க மணல் கெடைச்சிருக்கு. சந்தோஷப்பட்ட வியாபாரிங்க, ஆயிரக்கணக்கான லோடு மணலை அள்ளிட்டாங்க. சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பால, இப்போ தடை போட்டுட்டாங்க. மண் வியாபாரிகளிடம் லோடுக்கு, 200 ரூபாய் "கட்டிங்' போட்டு, பாக்கெட்டை நிரப்பின சில ஊழியர்கள், இப்போ அதிர்ச்சியாகி, வசூல் போச்சேன்னு புலம்பறாங்க,'' என்றாள் சித்ரா.
""மாவட்டத்துல டெங்கு பரவிக்கிட்டிருக்கே; ஹெல்த் டிபார்ட்மென்ட், செம தூக்கத்துல, இருக்காங்க,'' என்று மித்ரா கேட்டாள்.
""டெங்கே இல்லைன்னு தானே, அவங்க சொல்றாங்க. ஜி.எச்., போனா, நல்ல பார்ப்பாங்களா இல்லையான்னு சந்தேகத்தில, பலரும் தனியார் ஹாஸ்பிடல் போயிடறாங்க. இதை சாக்கா வச்சு, பிரைவேட் ஹாஸ்பிட்டல, பில் போட்டு தீட்டுறாங்க. குணமாகணுங்கிற கவலையில், பாதிக்கப்பட்டவங்களும், வேறு வழியில்லாம, பில்லை கட்டிட்டு வர வேண்டியதா இருக்கு. சுகாதார துறையோ, இருக்கிறதை கூட இல்லைன்னு சொல்லி, ரிப்போர்ட் தர்றதுல மட்டும் தான் குறியா இருக்காங்க,'' என்று சித்ரா கூறினாள்.
ஜி.எச்., டாக்டருங்க சிலருக்கு, தங்களோட பிரைவேட் கிளினிக்ல வருமானம் பார்க்கவே நேரம் போதலை. அப்புறம் அவங்க எப்படி ஸ்பெஷல் கேம்ப் எல்லாம் போட்டு, ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பாங்க. எல்லாம், மக்களோட தலைவிதி,'' என்றாள் மித்ரா.
அதற்குள், பேக்கரி வரவே, இருவரும், டீ சாப்பிட உள்ளே சென்றனர். ""வெளிய பஞ்சாயத்து பாத்துட்டு இருந்தவங்களை, திடீர்னு, நாலு செவுத்துக்குள்ள உட்காருவாங்களா,'' என்று டீ குடித்தபடியே கேட்டாள் சித்ரா.
""யாரு அவரு? எங்க உட்கார வெச்சாங்க,'' என்றாள் மித்ரா ஆர்வமாக.
""போன மாசம் பி.டி.ஓ.,க்களை "டிரான்ஸ்பர்' செஞ்சாங்க தெரியுமா? இதில், ரெண்டு மூணு வருசமா, திருப்பூர்ல "பஞ்சாயத்து' பார்த்துட்டு இருந்தவரை, திடீர்னு கலெக்டர் ஆபீசுக்கு "டிரான்ஸ்பர்' செஞ்சதால, நொந்து போயிட்டாரு. தலைவர் இல்லாத நேரத்துல, பஞ்சாயத்தை நிர்வாகம் செஞ்சவங்க, நாலு செவுத்துக்குள்ள உட்காருவாங்களா? அதனால தான், "பொறுமையா' வேலை செஞ்சிட்டு இருந்தாங்க; இவங்க இந்த வேலைக்கு செட் ஆக மாட்டாங்கன்னு யோசிச்சு பார்த்த மேலதிகாரி, மறுபடியும் பி.டி.ஓ.,வாக "டிரான்ஸ்பர்' செஞ்சுட்டாரு,'' என்றாள் சித்ரா.
""டிரான்ஸ்பர்' விவகாரமே வேறயாம். தலைவர் இல்லாத நேரத்துல, செயலாளர்களோட ஊட்டிக்கு "டூர்' போயிட்டு வந்தாங்க. அந்த விவரம் தெரிஞ்சுதான், உடனே "டிரான்ஸ்பர்' செஞ்சிருக்காங்களாம். "ஒத்துழையாமை இயக்கம்' நடத்தினதால, மறுபடியும் "டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க,''என்றாள் மித்ரா.
""நூற்றாண்டு விழா வேற வந்திருச்சேன்னு, கலெக்டர் ஆபீஸ் அதிகாரிங்க புலம்பறாங்க,'' என்று இழுத்தாள் சித்ரா.
""எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நடத்துறதுல, எல்லோரும் சந்தோஷப்படத்தானே செய்வாங்க,'' என்று மித்ரா கேட்டாள்.
""விழா கொண்டாடுறதில் சந்தோஷம் தான்; செலவு செய்ய வெக்கறாங்களே, அதை நெனைச்சு கவலைப்படறாங்க,'' என்று சித்ரா விளக்கினாள்.
""அரசு நிகழ்ச்சியா இருந்தாலும், செலவை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலை. விழா நடத்தும் செலவு, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தங்கும் செலவு, சாப்பாடு செலவு, அப்படி இப்படினு, பெரிய தொகை தேவைனு கணக்கு போட்டிருக்காங்க. அரசாங்கமே கொடுத்தாலும், செலவு செஞ்சு பிறகு தானே கெடைக்கும்.
""அதனால, ஒவ்வொரு "முக்கிய' அரசுத்துறைகளுக்கு செலவு "லிஸ்ட்' கொடுத்திருக்காங்க. "லிஸ்ட்' விவகாரத்த கேட்ட அதிகாரிங்க, "இப்பவே கண்ண கட்டுதே; பழனியாண்டவா, அமைச்சருங்க, கருணை காட்ட மாட்டாங்களான்னு புலம்பறாங்க,'' என்றாள் சிரித்தபடியே.
""எங்கிட்டயும், அதே டாபிக் நியூஸ் இருக்கு; எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுக்கு, நலத்திட்ட உதவிகள் என்ற பேரில், கூட்டத்தை கூட்ட அமைச்சர் சொன்னதால, கலெக்டரும் முயற்சி செஞ்சுட்டிருக்காரு.
""அதற்காக நடந்த கூட்டத்துல, அரசு துறை அதிகாரிகள், "நம்ம மாவட்டத்துல, நம்ம டிபார்ட்மென்ட்ல, இருக்கற திட்டங்கள், பயனாளிகள்,' அப்படீன்னு பேசியதும், "டென்ஷன்' ஆன கலெக்டர், ""என் டிபார்ட்மென்ட் ரெவின்யூ,' உங்க டிபார்ட்மென்ட்ல என்ன திட்டம், அதப்பத்தி விளக்குங்கனு,' கடுப்பாக கூறினாராம். இதக்கேட்ட அதிகாரிங்க "அப்செட்' ஆகிட்டாங்களாம். அப்ப நம்ம துறைக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லையா என, பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டாங்களாம்,'' என்று விளக்கமாக பேசிய மித்ரா, ""சரி, வாங்க போகலாம்,'' என்று பில் செட்டில் செய்து, இருவரும் பேக்கரியை விட்டு வெளியேறினர்.
சிட்டி டிராபிக்கில், மொபட் மெதுவாக செல்ல, ""சிட்டி லிமிட்டில் உள்ள ரூரல், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம் ஏரியாவில், ஒரு நம்பர் லாட்டரி ஜோரா விக்குதாம். இதுக்கு, சில போலீஸ்காரங்க சப்போர்ட் பண்றாங்களாம். இந்த விஷயம் இன்ஸ்பெக்டர் காதுக்கு போயிரக்கூடாதுன்னு, பேருக்கு, ஏதோ ரெண்டு அல்லக்கையை, பிடிச்சு கணக்கு காட்டறாங்களாம்,'' என்று போலீஸ் மேட்டருக்குள் நுழைந்தாள் சித்ரா.
""அப்போ, புதுசா வந்திருக்கிற கமிஷனருக்கு, இதெல்லாம் தெரியாதா,'' என்று மித்ரா கேட்கவும், ""இல்லப்பா, அவரு இப்பதான், சாட்டையை எடுத்து சுத்த ஆரம்பிச்சிருக்காரு. இன்னும் கொஞ்ச நாளில் எல்லாருக்கும் "டங்குவாரு' கழட்டிடுவாரு,'' என்று சித்ரா பதிலளித்தாள்.
""அதே போல், வீரபாண்டி ஸ்டேஷனில், பெரிய பொட்டு என்ற, பட்டப்பெயரோடு உலா வரும் எஸ்.ஐ., ஒருவர், நல்லவர் மாதிரி நடிச்சு, டூ வீலரை புடிச்ச, "கட்டிங்' போடறதிலயே குறியா இருக்கிறாராம்.
அதிகமா, முருகம்பாளையம், வீரபாண்டி பிரிவில் மட்டும் நிப்பாராம். ஏதோ, கொடுப்பதை வாங்கிட்டு, போக சொல்றாராம்,'' என்று மித்ரா, கூறவும், ""ஏன், இப்படி, அசிங்கம் புடிச்ச மாதிரி பண்றாராம். இவரையும், கமிஷனர் கொஞ்சம், கவனிச்சா பரவாயில்லை,'' என்று சித்ரா, கோபத்தில் பொங்கினாள்.
""ஆமாக்கா, நீங்க சொல்றது கரெக்ட்தான். புது கமிஷனர் வந்த பின்னாடி, ஸ்டேஷனில் முடங்கி கிடந்த போலீஸ்காரங்க பலரும், ரோட்டுக்கு வந்து டிராபிக் சரி செய்யறது, ரோந்து போவது, இப்படி பல வேலை செய்யறாங்க. "ஐ.எஸ்., போலீஸ்காரங்க யாரும் ஸ்டேஷனில் இருக்கக் கூடாது. வெளியே போய் வேலை செய்யணும்,' கமிஷனர் ஸ்டிரிட்டா சொல்லிட்டாராம். "சிட்டி'க்குள்ள டிரான்ஸ்பர் போட்டதான், வேலை நடக்கும். போலீசுக்கே, தெரியாமா, கமிஷனர் சஸ்பென்ஸ் விசிட் அடிச்சாதான், திருப்பூருக்கு பேர் கெடைக்கும்,'' என்று மித்ரா கூறவும், வீடு வந்தது. ""ஓ.கே., பை பை'' என்று சொல்லியபடி, சித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X