பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி : அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்ற கழக தலைவர் தகவல்

Added : பிப் 05, 2011
Share
Advertisement
திருச்சி: ""வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்,'' என்று அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழக தலைவர் விசு சிவக்குமார் தெரிவித்தார்.திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாது: திருச்சி பொன்மலை ஜி கார்னரில் அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் நடத்தும் விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் வாழ்வுரிமை மாநாடு வரும் 20ம்

திருச்சி: ""வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்,'' என்று அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழக தலைவர் விசு சிவக்குமார் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாது: திருச்சி பொன்மலை ஜி கார்னரில் அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் நடத்தும் விஸ்வகர்ம ஐந்தொழிலாளர்கள் வாழ்வுரிமை மாநாடு வரும் 20ம் நடக்கிறது. இதில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தில் 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட விஸ்வகர்ம சமூக மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.,) பட்டியலில் சேர்க்கவேண்டும்.


விஸ்வகர்ம சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும். ஐந்தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். கூட்டணி குறித்து கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகத்தின் பக்கம் அரசியல் கட்சிகளின் கவனத்தை திருப்பும் வகையிலேயே திருச்சியில் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துகிறோம். மேலும், 20ம் தேதி மாலை தியாகராஜ பாகவதரின் முழு உருவ வெண்கலச்சிலை திருச்சி சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் அருகே கலையரங்கம் வளாகத்தில் திறக்கப்படுகிறது. சிலையை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் திறந்து வைக்கிறார்.


நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகள், இயக்குனர் சங்க நிர்வாகிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். கடந்த ஆண்டு கரூரில் ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் மேகநாதன், மாவட்ட செயலாளர் மோகன்குமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X