பொது செய்தி

இந்தியா

சசிக்கு சலுகை: 2வது அறிக்கை தாக்கல் செய்தார் டிஐஜி ரூபா

Added : ஜூலை 15, 2017 | கருத்துகள் (39)
Advertisement
சசிகலா சலுகை,Sasikala offer, டி.ஐ.ஜி ரூபா, DIG Rupa, அறிக்கை, report, பெங்களூரு,Bengaluru,  Bangalore, பெங்களூரு சிறை,Bengaluru jail,  சிறைத்துறை,  prisons,பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை, Bangalore Prakashana Agrahar jail,சிறப்பு சமையல் அறை, Special Kitchen Room, சிறைத் துறை டி.ஜி.பி, Prison Department DGP,ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ,Corruption and Vigilance, டி.ஜி.பி சத்தியநாராயணராவ்,  DGP Sathyanarayana Rao,

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா 2வது அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.


அறிக்கை:

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை கட்டிக் கொடுப்பதற்கு, 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத் துறை, டி.ஜி.பி., மீது குற்றஞ்சாட்டி, டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்ட அறிக்கை, மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு உள்ளது. மீடியாக்களில் பேசியதற்காக, விளக்கம் அளிக்கும்படி, ரூபாவுக்கு நோட்டீஸ் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் டி.ஐ.ஜி., ரூபா, சிறப்பு சலுகை குறித்து 2வது அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநில உள்துறை முதன்மை செயலாளர், தலைமை செயலர், சிறைத்துறை டி.ஜி.பி.,, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குநருக்கு ரூபா அனுப்பியுள்ள அறிக்கையில், சசிகலாவை சந்திக்க வருபவர்களுக்காக 4 சேர் மற்றும் ஒரு டேபிள் வசதி செய்து கொடுக்கப்பட்டது. சசிகலாவை சந்திக்க வந்தவர்கள் குறித்து சிறையில் இருந்த கேமராவில் இருந்த காட்சிகள் மற்றும் விதிமீறல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


ஆலோசனை:

இந்நிலையில் ரூபாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இந்த குழு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சிறைத்துறை டி.ஜி.பி., சத்தியநாராயணராவ், சிறைக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் என்ன ஆலோசனை நடத்தப்பட்டது என தெரியவில்லை.விசாரணை குழு ஆய்வை தொடர்ந்து, இதுவரை சாதாரண சேலையில் இருந்த சசிகலாவுக்கு சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் சீருடை அணிய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.சிறையில் டி.ஐ.ஜி., ரூபா ஆய்வு செய்தது மற்றும் சிறையில் விதிகளை மீ றி கைதிகள் சீட்டு விளையாடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
16-ஜூலை-201713:21:28 IST Report Abuse
அம்பி ஐயர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய சூழலில் அவற்றை ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் மீண்டும் பெறலாம்....
Rate this:
Share this comment
Cancel
V Nath - PCMC,இந்தியா
15-ஜூலை-201723:14:25 IST Report Abuse
V Nath சசிகலா & கோ வை டில்லி திஹார் சிறைக்கு மாற்றிவிட்டால் போதுமே?
Rate this:
Share this comment
Cancel
varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-201723:04:48 IST Report Abuse
varagur swaminathan only government officials are corrupt - Do not blame politicians - Officers teach how to make money example 2G scam - please buy and read my book corruption and its control - Himalayan publishers Bombay - My aim is not to make money -I am going to donate the royalty to my village temple running Vedic patsala - E governace is best
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X