புதுச்சேரியில் முட்டல் மோதல்; மதுரையில் கெஞ்சல் கொஞ்சல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
புதுச்சேரியில் முட்டல் மோதல்
மதுரையில் கெஞ்சல் கொஞ்சல்

மதுரை: மதுரையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சந்தித்து, புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து ஜாலியாக பேசினர்.

 புதுச்சேரி, Puducherry,   மோதல், Conflict,மதுரை,Madurai, முதல்வர் நாராயணசாமி, Chief Minister Narayanasamy,அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,Minister Pon Radhakrishnan, கவர்னர் கிரண்பேடி, Governor Kiranpadi,  சட்டசபை, Assembly,  எம்.எல்.ஏ.,MLA,சபாநாயகர் வைத்தியலிங்கம் ,Speaker Vaithyalingam,  பா.ஜ.,BJP,விமான நிலையம், Airport,

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. 'கவர்னரின் செயல்பாடுகளுக்கு பா.ஜ., பின்னணியில் உள்ளது' என காங்., குற்றம்சாட்டுகிறது.

சட்டசபைக்கு பா.ஜ.,வை சேர்ந்த மூவர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டனர். இதை சபாநாயகர் வைத்தியலிங்கம் நிராகரித்தார்.

இதனால், மோதல் உச்சத்தில் உள்ளது. இந்நிலை யில் விருது நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாராயணசாமி, புதுச்சேரி செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். அதேநேரம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா அங்கு வந்தார். நாராயணசாமி வருகை குறித்து தகவல் அறிந்து அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று சந்தித்து இருவரும் 20 நிமிடங்கள் பேசினர்.

இச்சந்திப்பு குறித்து காங்., நிர்வாகிகள் கூறியதாவது:
புதுச்சேரி அரசியலில் இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக உள்ள நிலையில், அதன் தாக்கமே இல்லாத வகையில் இவர்கள் இருவரின் பேச்சும் எதார்த்தமாக இருந்தது.''வாங்க தலைவரே...'' என அமைச்சர் வரவேற்று பேச்சை துவங்க, ''எங்களுக் குணு நல்ல... அம்மா...வை அனுப்பி வச்சிருக்கீங் களே... எம்.எல்.ஏ.,க்கள் நியமனத் தில் இப்படி பண்ணலாமா, பிரதர்,'' என நாராயணசாமி எதார்த் தமாக பேசினார்.

அதற்கு, ''எல்லாம் சட்டப்படி தான் நடக்குது. நீங்க உங்க முடிவை முன் கூட்டியே சொல்லலையா,''

Advertisement

என்றார். அதற்கு, ''நாங்க லிஸ்ட் அனுப்பிட் டோம் அதையும் மீறி நீங்க போட்டுருக்கீங்க இது தவறு இல்லையா,'' என நாராயணசாமி பதில் அளித்து, ''நிதி ஒதுக்கீட்டிலாவது நம்ம மாநிலத்தை கொஞ்சம் கவனிங்க பிரதர்,'' என்றார்.

இதற்கு அமைச்சர், ''நிதியெல்லாம் நீங்க சாமர்த்தியமா வாங்கி விடுகிறீர்களே...'' என ஜாலியாக பேசினர். இதன் பின் சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினர்.இவ்வாறு கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan - Kanyakumari,இந்தியா
18-ஜூலை-201703:09:48 IST Report Abuse

Balakrishnanஆக நாட்டு முன்னேற்றத்தைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை, மோடி நாட்டுல நல்ல பெயர் எடுத்திட கூடாதுனு ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்குது. போய் புள்ளைகளை ஒழுங்கா படிக்க வைங்க, அப்புறமா வரலாற பேசுங்க...........

Rate this:
Balaji - Khaithan,குவைத்
17-ஜூலை-201717:39:52 IST Report Abuse

Balajiஇதுபோன்ற சாதாரண சந்திப்புகளை இப்படி செய்தியாக போட்டு போட்டுத்தான் தமிழகத்தில் அரசியல் நாகரீகம் என்பது இல்லாமல் செய்யப்பட்டு விட்டது....... இன்னும் இதேபோன்று தான் அனைத்து பத்திரிகைகளும் செயல்படுகின்றன ......... இது வடஇந்தியாவில் நம் தமிழகத்தில் இருப்பது போன்று இல்லை...........

Rate this:
Marimuthu Govindaraj - chennai,இந்தியா
17-ஜூலை-201713:49:50 IST Report Abuse

Marimuthu Govindarajஇரண்டு வன்னிய தலைவர்கள் சந்தித்தால் சாதி என்பார்கள்? இரண்டு தேவர் தலைவர்கள் சந்தித்தால் சாதி? அனால் பிராமணர்கள், பிள்ளைமார்கள், நாடார்கள், நாயுடுகள், முதலியார்கள், கொங்கு கவுண்டர்கள், தலித்துக்கள்& சிறுபான்மை இனத்தவர்கள் சந்தித்தால் அது நட்பு என்பார்கள்? வேறு எதற்கு சந்திப்பார்கள் உறவுமுறை சந்திப்பு .எல்லா சாதிக்கும் சாதி பாசம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,திருமணம் ,கடன் வசதி சாதி பாசத்தில் நடக்கிறது. இது மக்கள் எல்லாருக்கும் தெரியும்.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X