இன்று ஜனாதிபதி பதவிக்கு தேர்தல்; ராம்நாத்துக்கு வெற்றி வாய்ப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இன்று ஜனாதிபதி பதவிக்கு தேர்தல்
ராம்நாத்துக்கு வெற்றி வாய்ப்பு

புதுடில்லி: ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ள, ராம்நாத் கோவிந்துக்கு, அதிக ஆதரவு உள்ளதால், அவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

 இன்று,ஜனாதிபதி,பதவிக்கு,தேர்தல்ராம்நாத்துக்கு,வெற்றி,வாய்ப்பு


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், வரும், 24ல் முடிவுக்கு வருவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல், இன்று நடக்க உள்ளது.
இதில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமை யிலான, தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்த், 71, வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட, 18 எதிர்க்கட்சிகள் சார்பில், லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார், 72, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

நாட்டின், 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக் கும் தேர்தலுக்காக, பார்லிமென்ட் வளாகம், மாநில சட்டசபைகள் என, 32 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில், 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டளிக்க உள்ளனர். ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு, 708 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, மாநிலத்தின் மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப மாறும்.

ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும். லோக்சபாவில் உள்ள, ஆங்கிலோ - இந்தியன் பிரிவைச் சேர்ந்த இரண்டு நியமன உறுப்பினர் களும், ராஜ்யசபாவின், 12 நியமன, எம்.பி.,க் களும் ஓட்டளிக்க முடியாது. லோக்சபா சபா நாயகர், எம்.பி., என்பதால், அவர் ஓட்டளிக்கலாம்.

தற்போது நடக்க உள்ள தேர்தலில், கூட்டணி கட்சியான சிவசேனாவுடன் சேர்த்து, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, ஐந்து லட்சத்து, 37 ஆயிரத்து, 693 ஓட்டு மதிப்பு உள்ளது. மொத்த ஓட்டு மதிப்பில், 50 சதவீதத்துக்கு அதிகமாக பெறுபவரே வெற்றி பெற முடியும். அதன்படி, மொத்த ஓட்டு

மதிப்பான, 10 லட்சத்து, 98 ஆயிரத்து, 903ல், பா.ஜ., நிறுத்தியுள்ள வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு, மேலும், 12 ஆயிரம் ஓட்டு மதிப்புகள் தேவைப்பட்டது.

இந்நிலையில், பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., போன்ற, தே.ஜ., கூட்டணியில் இல்லாத கட்சிகளும், ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதனால், ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பார்லிமென்ட் மற்றும், மாநில சட்டசபைகளில் இன்று நடக்கும் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், டில்லிக்கு எடுத்து வரப்பட்டு, வரும், 20ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அன்றைய தினமே, புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரும்.

சட்டசபையில் ஓட்டளிக்கும் 55 எம்.பி.,க்கள்


உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் உட்பட, 55 எம்.பி.,க்கள், மாநில சட்டசபைகளில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க உள்ளதாக, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இது குறித்து தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாவது: வழக்கமாக, எம்.பி.,க்கள், பார்லிமென்ட்டிலும், எம்.எல்.ஏ.,க்கள், அந்தந்த மாநில சட்டசபையிலும் ஓட்டளிப்பர். அதே நேரத்தில், தேர்தல் கமிஷனின் முன் அனுமதி பெற்று, வேறொரு பகுதியிலும் ஓட்டளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எம்.பி.,யாக உள்ள, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் உட்பட, 55 எம்.பி.,க்கள் மாநில சட்டசபையில் ஓட்டளிக்க அனுமதி பெற்றுள்ளனர். இதில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், எம்.பி.,க்களே அதிகம்.இதைத் தவிர, ஐந்து, எம்.எல்.ஏ.,க்கள், பார்லிமென்ட் டில் ஓட்டு போடவும், நான்கு, எம்.எல்.ஏ.,க்கள் வேறொரு மாநிலத்தில் ஓட்டளிக்கவும் அனுமதி பெற்றுள்ளனர்.இவ்வாறு தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

பேனாவுக்கு தடை


இன்று நடக்கும் ஜனாதிபதி தேர்தலிலும், ஆக., 5ல் நடக்க உள்ள துணை ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தல் கமிஷன் வழங்கும் சிறப்பு பேனாவை பயன்படுத்தியே, ஓட்டு போட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. சொந்த பேனாவை பயன்படுத்தி ஓட்டளித்தால், அது செல்லாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க உள்ளோர், ஓட்டு மையத்துக்குள், தங்கள் சொந்த

Advertisement

பேனாவைகொண்டு வருவதற்கு, தேர்தல் கமிஷன் தடைவிதித்துள்ளது. எம்.பி.,க்கள் பச்சை நிற ஓட்டு சீட்டிலும், எம்.எல். ஏ.,க்கள், இளஞ்சிவப்பு நிற ஓட்டுச் சீட்டிலும் ஓட்டளிக்க வேண்டும்.இந்த தேர்தலுக்காக, மைசூரு வில் இருந்து சிறப்பு பேனா மற்றும் மையை தேர் தல் கமிஷன் வாங்கியுள்ளது. அனைத்து மாநிலங் களுக்கும், அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க கோட்டையில் சிறப்பு ஏற்பாடு:
ஜனாதிபதி தேர்தலையொட்டி, தமிழகத்தில், தலைமை செயலகத்தில், சட்டசபைக் குழு கூட்டம் நடக்கும் அரங்கில், ஓட்டுப்பதிவு நடக்கிறது.காலை, 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.தமிழக, எம்.எல்.ஏ.,க்கள், 232 பேர் ஓட்டுப் போட உள்ளனர். ஜெயலலிதா மறைவால், ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளன. தி.மு.க., தலைவரும், திருவாரூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வு மான கருணாநிதி உடல் நலக்குறைவால், வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அ.தி.மு.க., அணிகள், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை, ஆதரிக்கின்றன. தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாருக்கு ஓட்டளிக்க முடிவு செய்துள்ள னர். அ.தி.மு.க., அணியைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி, மாட்டிறைச்சி பிரச்னையால், 'பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டு அளிக்க மாட்டேன்' என, ஏற்கனவே அறிவித்துள்ளார்.

கருணாநிதி ஓட்டு அளிக்க வருவாரா


சமீபத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் வீட்டில், எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார், துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினர். எனவே, இன்று நடக்கவுள்ள தேர்தலில்,
கருணாநிதி ஓட்டு அளிக்க வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., செயலர் தலைவர் ஸ்டாலின் நேற்று கூறுகையில், ''ஜனாதிபதி தேர்தலில், கருணாநிதி ஓட்டளிப்பது குறித்து, நாளை தெரியும்,'' என்றார். எனினும், 'டாக்டரின் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை' என, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

பா.ம.க., புறக்கணிப்பு


'ஜனாதிபதி தேர்தலை, பா.ம.க., புறக்கணிக்கும்; அன்புமணி எந்த கட்சிக்கும் ஓட்டு போட மாட் டார். துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரை நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்' என, பா.ம.க., அறிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
17-ஜூலை-201717:10:02 IST Report Abuse

Balajiதெரிந்த முடிவுதான் என்றாலும் போட்டியிடுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..........

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
17-ஜூலை-201714:15:59 IST Report Abuse

Snake Babuவாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
17-ஜூலை-201712:14:27 IST Report Abuse

ganeshaஉங்க ஆயா ஜெயிச்சா எல்லாம் சரியாபோய்டுமா ?.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X