இந்தியாவால் வெளிநாட்டு தூதர்கள் அதிர்ச்சி: சொல்கிறது சீனா

Updated : ஜூலை 18, 2017 | Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (14)
Advertisement
டோக்லாம், சீனா,சிக்கிம், இந்தியா

பெய்ஜிங்: இந்தியா சட்டவிரோதமாக எல்லை தாண்டியதை அறிந்த வெளிநாட்டு தூதர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக சீனா கூறியுள்ளது.சிக்கிம் மாநில எல்லையில் பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பகுதியில் சாலை அமைக்க முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகறது. இது தங்களது பகுதி என சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.இந்நிலையில், டில்லி வட்டாரங்கள் கூறுகையில், கடந்த வாரம் பெய்ஜிங்கில் அந்நாட்டு அதிகாரிகள் வெளிநாட்டு தூதர்களை சந்தித்து பேசினர். அப்போது எல்லை பிரச்னையில், சீனாவின் பொறுமையை காலவரையின்றி நீடிக்கும் என கருத வேண்டாம் என கூறியுள்ளனர்.அதேபோல் டில்லியிலும், இந்திய அதிகாரிகள், டோக்லாம் பிரச்னை குறித்து வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கி கூறினர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


கவனம்:

பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லு காங் கூறுகையில், எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தது, சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் இந்த செயல் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, பெய்ஜிங்கில் உள்ள பல நாட்டு தூதரகங்கள் கூறியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
18-ஜூலை-201723:25:21 IST Report Abuse
Agni Shiva தினம் ஒரு அறிக்கை..தினம் ஒரு மிரட்டல்..தினம் ஒரு எச்சரிக்கை..இப்போது எல்லா நாட்டு தூதர்களையும் கூப்பிட்டு கூட்டு ஒப்பாரி. ஆனாலும் இந்தியா இதுவரை அசைந்து கொடுக்க வில்லை...தினம் ஒரு மிரட்டல் கொடுக்கவில்லை...கூட்டு ஒப்பாரி வைக்கவில்லை...இந்த இரு நாடுகளின் செயல்களில் இருந்து எது அதிகம் கவலை படுகிறது என்பது உலகம் கவனித்து கொண்டு தான் இருக்கிறது. சீனியே, உன்னை கண்டு தொடை நடுங்கி திரிந்த இந்தியா மலையேறிவிட்டது. மோடியின் தலைமையில் உள்ள இந்தியாவை கண்டு சீனி தான் தற்போது தொடை நடுங்கி கொண்டு இருக்கிறது. இதை அறிந்து கொள்ள பூத கண்ணாடியா வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
Murugan - Bangalore,இந்தியா
18-ஜூலை-201722:08:28 IST Report Abuse
Murugan என்ன கதை விட்டுட்டு இருக்கானுங்க. இவனுங்க தான் அத்து மீறி பூட்டான் பகுதியில் உள்ளே நுழைந்து ரோடு போடறாங்க அதை தான் இந்தியா தடுத்து நிறுத்தியதுன்னு மொத்த உலகத்துக்கே தெரியுமே.
Rate this:
Share this comment
Cancel
18-ஜூலை-201721:53:31 IST Report Abuse
அப்பாவி நல்லா விசாரிச்சுப் பாருங்க...எல்லாரும் வட கொரியா நாட்டு தூதர்களா இருக்கப் போறாங்க...அவுங்க இவங்களுக்கு ஜால்ரா....இவிங்க அவுங்களுக்கு ஜால்ரா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X