சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல்

Added : ஜூலை 19, 2017 | கருத்துகள் (6)
Advertisement
சச்சின் அணி, Sachin team,தமிழ் தலைவாஸ்,Tamil Leader, கபடி, Kabaddi, தூதர்,Ambassador, கமல்,  Kamal, சென்னை,Chennai, புரோ கபடி லீக், , Pro Kabaddi League, நடிகர் கமல், actor Kamal,

சென்னை: புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.


கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்:

புரோ கபடி தொடரில் பங்கேற்கும் சச்சின் அணியான ‛தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டார். '' முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனத் தெரிவித்துள்ள நடிகர் கமல், கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழ் தலைவாஸ்:

ஐ.பி.எல்., பாணியில் கடந்த 2014ல் துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கில், டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இத்தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைக்க ஐந்தாவது சீசனில் தமிழகம், அரியானா, குஜராத் மற்றும் உ.பி., என கூடுதலாக 4 அணிகள் சேர்க்கப்பட்டன. இதில் பங்கேற்கும் தமிழகத்தின் சென்னை கபடி அணியின் பங்குகளை வாங்கி சக உரிமையாளர் ஆனார் சச்சின். இந்த அணிக்கு ‛தமிழ் தலைவாஸ்' என பெயர் சூட்டப்பட்டது.

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arjun - Chennai,இந்தியா
19-ஜூலை-201712:20:16 IST Report Abuse
Arjun வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
19-ஜூலை-201709:16:27 IST Report Abuse
vasanthan பெண்கள் கபாடியா? ஏன்னா உலகநாயகன் தூதுவர் ஆக இருக்கிறாரே என்று ஒரு சந்தேகம் ...
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai ,இந்தியா
19-ஜூலை-201708:40:33 IST Report Abuse
Raj அய்யோ பாவம்
Rate this:
Share this comment
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
19-ஜூலை-201717:08:21 IST Report Abuse
Naam thamilarஏன் ரஜினி ISL football பிராண்ட் அம்பாசடோரா இருப்பது உன்னோட மால கண்ணிற்கு தெரிய வில்லையா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X