அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீயா? நானா?: விடாத கமல்; விளாசும் அரசியல் தலைவர்கள்

Updated : ஜூலை 20, 2017 | Added : ஜூலை 20, 2017 | கருத்துகள் (123)
Advertisement
கமல்,Kamal, ஹெ.ராஜா,H. Raja, அமைச்சர் ஜெயக்குமார், Minister Jayakumar, சென்னை ,Chennai, நடிகர் கமலஹாசன், actor Kamal Haasan,ஸ்டாலின், Stalin, பன்னீர்செல்வம், Panneerselvam, காவிரி, Cauvery, முல்லைப் பெரியாறு, Mullai Periyar, ஊழல், Corruption,

சென்னை : நடிகர் கமலஹாசனுக்கும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் இடையே நடக்கும் வார்த்தை போர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
முடிவெடுத்து விட்டால் முதல்வர் ஆகிவிடுவேன் என கமல் கூறிய கருத்திற்கு பா.ஜ., தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்ற கமலின் கருத்திற்கு அமைச்சர் ஜெயக்குமாரும், கமலை கடுமையாக சாடி உள்ளனர்.
அமைச்சர்களுடனான மோதல் ஒருபுறம் இருந்தாலும், பா.ஜ., ஹெச்.ராஜா, கமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். முதுகெலும்பற்ற கோழை கமல் என அவர் கூறிய கருத்திற்கு பதிலளித்துள்ள கமல், எலும்பு வல்லுநர் ஹெச்.ராஜா என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, கமல்ஹாசன் ஒரு இந்து விரோதி என்பதால் எதிர்க்கிறேன், வக்கிரமாக பேசக் கூடியவர்; ஒழுக்கமே இல்லாத வாழ்க்கையை ஆதரிப்பவர்; தலைவருக்கான தகுதியே இல்லாதவர் கமல்ஹாசன் என தெரிவித்துள்ளார்.


அமைச்சர் ஜெயக்குமார்:

அமைச்சர் ஜெயக்குமார், கமலின் கருத்து பற்றி கூறுகையில், யாருடைய ஊதுகுழலாக இருந்து நடிகர் கமல், தமிழக அரசின் மீது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். ஸ்டாலின், பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் கமல் ஆகியோர் கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வேண்டுகோள் விடுப்பதன் மூலம் ரசிகர்களை தூண்டி விடுகிறார். அரசியலுக்கு வந்துவிட்டேன் என கூறும் கமல், காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட எந்த பிரச்சனைக்காவது குரல் கொடுத்திருக்கிறாரா?. ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு கமல் நிரூபித்தால் நடவடிக்கை எடுப்போம். வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திக்க தயார் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (123)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஜூலை-201722:28:47 IST Report Abuse
Rafi வாருங்கள் கமல்ஜி, உங்களை போன்ற நேர்மையாக அரசுக்கு முறையாக வரி செலுத்துபவர்கள் கொஞ்சம்மே, மனதில் பட்டதை சுட்டிக்காட்டுவது கூட ஆண்மையின் அழகே. இந்த ஆட்சியின் அலங்கோலத்தை ஒவ்வொரு தமிழனின் உள் வேட்கையை சுட்டி காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
20-ஜூலை-201721:55:00 IST Report Abuse
Ramachandran CV Ramachandran இவ்வளவு கொள்ளைக்காரர்களுக்கு தலைவியாக இருந்த ஜே அவர்கள் எப்படி நல்லவராக இருந்திருக்க முடியும். கடவுளுக்கே வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel
Ramachandran CV Ramachandran - thanjavur,இந்தியா
20-ஜூலை-201721:52:34 IST Report Abuse
Ramachandran CV Ramachandran ஒரு சதவிகித மக்கள் ஆதரவுகூட இல்லாமல் வெட்கம்கெட்டு பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்கும் இவர்கள் மானம்கெட்டவர்கள். இவர்களெல்லாம் சேர்ந்து கமலை விமர்சனம் செய்வதுதான் வேடிக்கை. ஜெயக்குமார் அவர்கள் முன்னாள் முதல்வரால் ஓரம்கட்டப்பட்டவர். வேலுமணி போன்ற ஜால்ராக்களுக்கு அவர்கள் துகுதியில்கூட வரவேற்பு இல்லை. திண்டுக்கல் சீனிவாசன் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எவ்வளவு உத்தமர்கள் என்பதை தமிழ்நாடறியும் செல்லூர் ராஜு தெர்மோகோலை வைத்து சம்பாதிக்க பார்த்தார் கற்று வீசியதால் இன்று உலகப்புகழ் பெற்றார். விஜயபாஸ்கர் என்ற போதைமருந்து கள்ளவியாபாரி கம்பிஎண்ணவேண்டிய நிலையை மீறி தற்போதும் நமக்கு அமைச்சராக அதுவும் சுகாதாரத்துறை அமைச்சராக நீடிக்கிறார். மந்திரிகள் இப்படியென்றால் மக்கள் பிரதிநிதிகளை பற்றி சொல்லவேண்டியதில்லை. மந்திரிகளிடம் கட்டிங் வாங்கிக்கொண்டு மிரட்டிக்கொண்டு காலம் கழிக்கிறார்கள். தங்களுக்கு இவர்களது ஆதரவு வேண்டும் என்பதற்காக மத்திய உத்தமர்கள் இவர்களை கண்டுகொள்வதில்லை. தப்பித்தவறி வருமானவரித்துறை ஒன்றிரண்டு குற்றங்களை கண்டுபிடித்தாலும் அதனையும் ஆறப்போட்டுவிடுகிறார்கள். இதுதான் இன்றைய தமிழக நிலை. இனி கடவுள்தான் இந்த ஆட்சியை கலைத்து மக்களை காப்பற்றவேண்டும். ஏனென்றால் தெய்வம் நின்றுக்கொல்லும் என்பதை நாங்கள் இன்னும் நம்புகிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X