பேச்சுவார்த்தை நடத்துங்க: இந்தியா, சீனாவுக்கு பென்டகன் அறிவுரை

Added : ஜூலை 22, 2017 | கருத்துகள் (7)
Advertisement
இந்தியா, India,சீனா,  China,பெட்னகன்,  Petagan, பதற்றம், Tension, அறிவுரை, Advice, டோகோலாம், Tokolam, பேச்சுவார்த்தை, Talk, வாஷிங்டன்,Washington, சிக்கிம் எல்லை, Sikkim border,பென்டகன் செய்தி தொடர்பாளர் கேரி ராஸ் , Pentagon spokesman Gary Ross,

வாஷிங்டன்: டோகோலாம் விவகாரத்தில் இந்தியா, சீனா நாடுகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பென்டகன் கூறியுள்ளது.இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லை, சீனா மற்றும் பூடானுக்கு இடையே உள்ள, டோகோலாம் பகுதியில், சாலை அமைக்கும் பணிகளை, சீனா துவங்கியது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பணிகளை, நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. இரண்டு நாட்டு ராணுவமும், அங்கு குவிக்கப்பட்டுள்ளதால், எல்லையில், ஒரு மாதத்துக்கும் மேலாக, பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.இது குறித்து பென்டகன் செய்தி தொடர்பாளர் கேரி ராஸ் அளித்த பேட்டி: இந்தியா சீனா நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தை குறைக்க இரு நாடுகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் மேலும் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட இரு நாடுகளை தான் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் ஊக்குவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
22-ஜூலை-201722:01:17 IST Report Abuse
K.Sugavanam அட யாருப்பா அறிவுரை சொல்லறது....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Varadhaiyah - PUDHUCHERRY,இந்தியா
22-ஜூலை-201720:08:33 IST Report Abuse
Srinivasan Varadhaiyah சீனா நடவடிக்கை பேச்சு வார்த்தை நடத்தும்படியா உள்ளது. நாடு பிடிக்கும் வெறி உள்ளது
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
22-ஜூலை-201717:10:37 IST Report Abuse
vasanthan அமெரிக்கா இந்த கருத்தை சொல்வதற்கு முன்பே நம்ம காங்கிரஸ் கைப்புள்ள சீனாவுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சிடுச்சு.... உலக நாடுகள் நினைப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு செயல் படும் ஒப்பற்ற தலைவர் ...நமது கைப்புள்ளை தான் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X