புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சிக்கு அச்சாரம்

Added : ஜூலை 24, 2017 | கருத்துகள் (71)
Advertisement
புதுச்சேரி, Puducherry,  பா.ஜ., BJP, காங்கிரஸ்,  Congress, நமச்சிவாயம், Namachivayam, நாராயணசாமி, Narayanaswamy, சென்னை, Chennai,சட்டசபை தேர்தல் ,Assembly election, முதல்வர் ,Chief Minister,  ராஜினாமா , Resignation, இடைத்தேர்தல், by-election, ஜான் குமார் , John Kumar,

சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று, அக்கட்சியின் தேசிய தலைவர்கள் விரும்புவதால், விருப்பத்தை நிறைவேற்ற புதுச்சேரி பா.ஜ., தலைவர்கள் வேகமான பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் பரவி இருக்கிறது.

இது குறித்து புதுச்சேரி மாநில பா.ஜ., முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாவது:கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருக்கும் நமச்சிவாயம், மாநிலத்தின் முதல்வராக விருப்பப்பட்டார். ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, தனக்கு மேலிடத்தில் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டு விட்டார்.
அவரே, மேலிடத்தின் ஆசியோடு முதல்வர் ஆகி விட, நமச்சிவாயம் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் அமைச்சராக்கப்பட்ட போதும், முதல்வர் ஆகும் வாய்ப்பை, நாராயணசாமி தட்டிப் பறித்து விட்ட ஆத்திரத்தில் இருந்தார்.இதற்கிடையில், ஜான் குமார் என்ற எம்.எல்.ஏ.,வை ராஜினாமா செய்ய வைத்து, அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, நாராயணசாமி வென்றார். இதன்பின், நமச்சிவாயத்தின் ஆத்திரம் உச்சத்தை அடைந்தது.


டில்லிக்கு தூது:

நான் ஐந்து எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., பக்கம் வர தயாராக இருக்கிறேன்; புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி அமைக்க, தலைமை சம்மதமா என்று கேட்டு, பா.ஜ., தலைமைக்கு சிலர் மூலம் தூது அனுப்பினார். உடனே, இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தத் துவங்கி விட்டார், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா. ஏற்கனவே முதல்வராக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சிலர் மூலம் அணுகி பேச வைத்தார்.அவரும் அதற்கு சம்மதிக்க, அடுத்தடுத்த கட்டங்களில் புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்தும் நகர்வுகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன், அமித் ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, புதுச்சேரி வந்தார். அப்போது, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களை ரகசியமாக சிந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


ரங்கசாமி - பாஜ சந்திப்பு:

தற்போது, அந்த பேச்சுவார்த்தை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வீர சவார்க்கர் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரங்கசாமியை, பா.ஜ., தலைவர்கள் சிலர் சந்தித்து பேசினர். புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை பா.ஜ.,வுடன் இணைக்க பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரங்கசாமி, கட்சியின் மற்றத் தலைவர்களிடம் யோசித்து பதிலளிப்பதாக சொல்லியிருக்கிறார். அதற்கு ரங்கசாமி ஒப்புக் கொண்டால், விரைவில் என்.ஆர்.காங்கிரசை பா.ஜ.,வோடு இணைக்கும் நிகழ்ச்சி நடக்கும்.அதன்பின், காங்கிரசில் இருந்து நமச்சிவாயம் வெளியேறி பா.ஜ.,வில் இணைய, புதுச்சேரியில், நமச்சிவாயம் அல்லது ரங்கசாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைக்கப்படும். இதற்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். இந்த தகவல் அறிந்து ஆடிப் போயிருக்கும் காங்கிரஸ் தரப்பு, அதை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
25-ஜூலை-201713:38:48 IST Report Abuse
Agni Shiva எப்படியாவது புதுசேரியில் ஆட்சி அமையுங்கள். நல்லாட்சி என்பதை புதுச்சேரி மக்கள் கண்டுணரட்டும். தமிழக மக்கள் அருகில் இருந்து நல்லாட்சியின் நலனை பார்க்கட்டும். திராவிட திருட்டு கழகங்கள் அழிவதற்கு புதுசேரியில் பிஜேபி ஆட்சி அமைய வேண்டும்.
Rate this:
Share this comment
Cheran - Kongu seemai,இந்தியா
26-ஜூலை-201702:06:15 IST Report Abuse
Cheranஅதற்க்காக பிஜேபி திருட்டு கட்சியை ஆட்சியில் அமர்த்தலாமா? வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடும்....
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
25-ஜூலை-201707:18:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பூணூல் போட்டவன் எல்லாம் ப்ராம்மணணன் ஆயிடுவானா? ஆயிரம் தர்க்கம் பண்ணலாம்..
Rate this:
Share this comment
Cancel
pachaitamilan - TAMILNADU,இந்தியா
25-ஜூலை-201706:53:27 IST Report Abuse
pachaitamilan ஏம்பா புதுச்சேரி மட்டுமா தமிழ் நாட்டுல கூட ஆட்சி பிடிக்க ஒரு காலில் தவம் கிடக்கிறாங்க. ஆனா குக்கரில் போட்ட பருப்பு என்னமோ வேக மாட்டேன் என்கிறது. என்ன செய்ய. இவங்க மக்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைக்கு மத்தியில் அடுத்த முறை வருவார்களோ இல்லையோ. தெரியவில்லை. இதில் தமிழிசை வேற தேவை இல்லாம கமல் போன்றவர்களை எல்லாம் வசை பாடி கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ப ஜ என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் ஆட்சி பிடிக்க முடியாது. வேணும் என்றால் குரங்காட்டியா இருக்கலாம். இப்போ இருப்பது போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X