பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஜனாதிபதி,President, ராம்நாத் கோவிந்த், Ramnath Govind,பதவியேற்பு, Inauguration, தலைமை நீதிபதி, Chief Justice, புதுடில்லி,New Delhi, பார்லிமென்ட்,Parliament, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் , Supreme Court Chief Justice JS Kehar, பிரணாப் முகர்ஜி,Pranab Mukherjee, எதிர்க்கட்சிகள், Opposition parties, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், Lok Sabha Former Speaker Meira Kumar,சுப்ரீம் கோர்ட் , Supreme Court,டில்லி ராஜாஜி மார்க், Delhi Rajaji Mark,

புதுடில்லி : இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஜனாதிபதி,President, ராம்நாத் கோவிந்த், Ramnath Govind,பதவியேற்பு, Inauguration, தலைமை நீதிபதி, Chief Justice, புதுடில்லி,New Delhi, பார்லிமென்ட்,Parliament, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் , Supreme Court Chief Justice JS Kehar, பிரணாப் முகர்ஜி,Pranab Mukherjee, எதிர்க்கட்சிகள், Opposition parties, லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், Lok Sabha Former Speaker Meira Kumar,சுப்ரீம் கோர்ட் , Supreme Court,டில்லி ராஜாஜி மார்க், Delhi Rajaji Mark,

விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி, காங்., தலைவர் சோனியா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், தமிழக

முதல்வர் பழனிசாமி உட்பட பல மாநில முதல்வர்கள் மற்றும் மத்தியஅமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர். முன்னதாக ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களால் அழைத்து வரப்பட்டார் . பதவியேற்ற நேரத்தில் 21 குண்டுகள் முழங்கப்பட்டன.ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில்நடந்தது.
இந்த தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் 65 சதவீத ஓட்டுகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து, பார்லிமென்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதி பதவியேற்பு விழா நடந்தது. இன்று மதியம் 12 மணியளவில் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன்

Advertisement

ராஜ்காட் சென்று, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதைசெலுத்தினார். தொடர்ந்து, அவர் ஜனாதிபதி மாளிகை சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.
பின்னர் இருவரும் ஒரே காரில் பார்லிமென்ட் மைய மண்டபத்திற்கு குதிரைப்படை வீரர்கள் அழைத்து சென்றனர். அங்கு, ராம்நாத் கோவிந்தை துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றனர்.
12. 15 மணியளவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு பிரணாப் வாழ்த்து தெரிவித்தார்.
பதவியேற்ற நேரத்தில் 21 குண்டுகள் முழங்கின.


Advertisement

வாசகர் கருத்து (23)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
25-ஜூலை-201717:19:58 IST Report Abuse

narayanan iyerதேவையேற்ற ஆடம்பரம் . காந்தியின் பெயரை சொல்லும்போது நாம் அணிந்திருக்கும் உடையை பார்த்து வெட்கப்பட வேண்டும் . எளிமை , அமைதி , சத்தியம் உண்மை இதை கடைபிடிக்கும் மனிதன் மட்டுமே காந்தி சமாதிக்கு போக வேண்டும் மலர் சார்த்த வேண்டும் . இத்தனை அமளி ஏன்?

Rate this:
Kundalakesi - Coimbatore,இந்தியா
25-ஜூலை-201717:18:13 IST Report Abuse

Kundalakesihe could have avoided the line of cars to reduce tax payers money. he can be a president but its tax payers hard earned money.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
25-ஜூலை-201717:01:16 IST Report Abuse

Endrum Indianகலாம் முஸ்லிமாக இருந்தும் அவர் தான் இந்தியன் என்பதை மட்டும் தான் முன் வைத்தார், அவர் முன்மாதிரி என்பது மிகவும் நல்ல மனிதன் என்ற முறையில் பணியாற்றுவேன் என்பது போல நன்றாக இருக்கின்றது.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X