சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்து: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (10)
Advertisement
கொடுங்கையூர், Kodungaiyur, பேக்கரி, Bakery,தீவிபத்து,Fire,சென்னை, Chennai, தீயணைப்பு வீரர்கள்,Firefighters,கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, Kilpakkam Government Hospital,சிகிச்சை, Treatment,

சென்னை: கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்தில் காயமடைந்த இளையராஜா என்ற நபர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில் உள்ள இரண்டு மாடி வணிக வளாகம் ஒன்றில், இயங்கி வந்த 'ஹாட் சிப்ஸ்' என்ற பேக்கரி கடையில், கடந்த, 15ம் தேதி இரவு, 11:30 மணிக்கு, தீப்பற்றியது. பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி, தீயணைப்பு வீரர்கள், 30க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க முயன்றனர். அப்போது கடை ஷட்டர் உடைத்து, உள்ளே செல்ல முயன்ற போது, சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், தீயணைப்பு வீரர் ஏகராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 48 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒன்றன்பின் ஒருவராக இறந்து வருகின்றனர். நேற்று(ஜூலை 24) பார்த்திபன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்த நிலையில் இன்று (ஜூலை 25) காலை, இளையராஜா என்பவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து பலியானோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஜூலை-201715:00:58 IST Report Abuse
Pasupathi Subbian இறந்தவர்களில் அநேகர் வேடிக்கை பார்க்கவந்தவர்கள். பலர் படம் பிடித்து வாட்சாப் பண்ண முயன்றவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
srisubram - Chrompet,இந்தியா
25-ஜூலை-201714:06:13 IST Report Abuse
srisubram கடைகளுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன , உணவகங்களுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன , சாலைகளில் பயணிப்பவர்களுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன, இவற்றை அரசு இயந்திரங்கள், கண்காணிக்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளன. ஒருவரும் விதிகளை பின்பற்றுவதில்லை, இதற்கான தர்மத்தையும் பின்பற்றுவதே அறவே இல்லை. எல்லா மக்களுக்கும் பணவெறியும், புகழ் வெறியும் திராவிட ஆட்சில் வந்தது. இப்ப இந்த வெறியல்லாம் போய் செலஃபீ வெறி பிடிச்சுண்டு அலையோ அலையோன்னு அலையறது. மக்களே நீங்கள் தர்மத்தை பின்பற்றியவரை சுமாராகவாவது இருந்தீர்கள், இப்ப அதுவும் இல்லை. தயவு செஞ்சு விதிமுறைகளை பின்பற்றுங்கள். விதிமீறல்களை பின்பற்றாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
25-ஜூலை-201711:09:13 IST Report Abuse
g.s,rajan பல் வேறு துரித உணவகங்களில், ஓட்டல்களில் சாலை ஓர உணவுக்கடைகளில் பேக்கரிகளில் டீ ,காபி கடைகளில் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியே பொது இடங்களில் சிலிண்டர் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும் அதிகாரிகள் லஞ்சம் ஊழல் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் .அரசாங்கம் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்ய வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X