பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ சத்யசாய் அமைப்பின் வி.சீனிவாசன் காலமானார்

Updated : ஜூலை 27, 2017 | Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (11)
Advertisement
சத்யசாய் அமைப்பு, Sathya Sai Organization, வி.சீனிவாசன்,V.srinivasan, காலமானார்,Died, சென்னை, Chennai, ஸ்ரீ சத்யசாய் ,Sri Sathyasai, ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை,Shri Sathyasai Central Foundation,

சென்னை: ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர், வி.சீனிவாசன், 78, சென்னையில் நேற்று காலமானார்.எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான, சீனிவாசன், டபிள்யூ.எஸ்.இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார்; புகழ்பெற்ற தொழிலதிபராக திகழ்ந்தார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய தலைவராகவும் பதவி வகித்தார்.
சென்னைக்கு, 1970ல், சத்ய சாய் வந்த போது, சீனிவாசன் முதல் முறையாக, அவரை தரிசித்தார். சத்ய சாய் கூட்டமைப்பில் பல்வேறு பதவிகளை, சீனிவாசன் வகித்துள்ளார். சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர், சத்ய சாய் சேவா கூட்டமைப்பின், அகில இந்திய தலைவராக சிறப்பாக பணியாற்றினார்.உடல் நிலை காரணமாக, அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றார். சீனிவாசனின் மனைவி, வித்யா சீனிவாசன், மே, 8ல், வயது முதிர்வால் காலமானார்.இருப்பினும், சீனிவாசன், சத்ய சாய் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
இம்மாதம், 22ல், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த மாநில அளவிலான மாநாட்டிலும், சென்னை சுந்தரம் மையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கேற்றார்.

இந்நிலையில் அவர், நேற்று காலமானார். அவரின், அர்ப்பணிப்பு மிகுந்த சேவைகள், சத்ய சாய் வரலாற்றில், முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
27-ஜூலை-201705:40:20 IST Report Abuse
p.manimaran ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் .
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
26-ஜூலை-201711:14:11 IST Report Abuse
makkal neethi ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் ...
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
26-ஜூலை-201710:16:36 IST Report Abuse
P. SIV GOWRI ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X