பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

Updated : ஜூலை 26, 2017 | Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (21)
Advertisement
ஜனாதிபதி,President,  ராம்நாத் கோவிந்த், Ramnath Govind, புதுடில்லி, New Delhi, இந்தியா,  India,சுப்ரீம் கோர்ட், Supreme Court, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் , Supreme Court Chief Justice Kahar, முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, former President Pranab Mukherjee, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, Vice President Amid Ansari, பிரதமர் மோடி,Prime Minister Modi , மத்திய அமைச்சர்கள், Union Ministers,எம்.பி.,MP, தேர்தல், Election, ராஜ்காட் , Rajkot,மகாத்மா காந்தி,Mahatma Gandhi,  பார்லிமென்ட், Parliamentary

புதுடில்லி : இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர். முன்னதாக ராம்நாத் கோவிந்த் குதிரைப்படை வீரர்களால் அழைத்து வரப்பட்டார் .

ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.

இந்த தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் 65 சதவீத ஓட்டுகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, பார்லிமென்ட் மைய மண்டபத்தில் ஜனாதிபதி பதவியேற்பு விழா நடந்தது.இன்று மதியம் 12 மணியளவில் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் ராஜ்காட் சென்று, மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர் ஜனாதிபதி மாளிகை சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.

பின்னர் இருவரும் ஒரே காரில் பார்லிமென்ட் மைய மண்டபத்திற்கு குதிரைப்படை வீரர்கள் அழைத்து சென்றனர். அங்கு, ராம்நாத் கோவிந்தை துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றனர்.

12. 15 மணியளவில் ராம்நாத் கோவிந்திற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு பிரணாப் வாழ்த்து தெரிவித்தார்.பதவியேற்ற நேரத்தில் 21 குண்டுகள் முழங்கின.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
25-ஜூலை-201719:10:37 IST Report Abuse
Rafi வாழ்த்துக்கள் ராம்நாத்ஜி, அணைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து நாட்டை வளமாக்க உறுதுணையாக இருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
25-ஜூலை-201717:54:52 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) நாட்டின் முதல் குடிமகனுக்கு வாழ்த்துக்கள். இந்திய நாட்டின் பிரதமர், அணைத்து மந்திரிகள், அணைத்து முதல்வர்கள், அணைத்து மேல்மட்ட அதிகாரிகள் நீங்கள் விரும்பும்போது உங்களை சந்திக்க கடமைப்படும் அளவுக்கு பெரிய பதவியை பெற்றுள்ளீர்கள். அதை பயன்படுத்தி ஊழலை ஒழியுங்கள், வேலை வாய்ப்பை பெருக்குங்கள், பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்.. ஒரு 10 % செய்தாலும் சந்தோசப்படலாம். நன்றி .
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
25-ஜூலை-201717:01:10 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM பதவியும் வாய்ப்பும் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம்... ஆனால் அந்த வாய்ப்பால் பதவிக்கு என்ன பெருமை ??... தற்போது பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகிய இருவரால், இந்த நாட்டிற்கு என்ன கிடைத்தது அல்லது கிடைக்கப்போகிறது என்பது தான் முக்கியமே தவிர தனிமனித துதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கில்லை ...நமது பாரத பிரதமரின் 3 வருட செயல்பட்டால், சிலர் மகிழலாம்... ஆனால் பலர் தவிக்கின்றனர்.... மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல்... விடியாமல், விடிந்தும் இருளில் சிக்கி கிடக்கின்றனர்.... நமது விவசாயிகள் ஒரு நாள் கூட , சந்தோஷமாக காலை கண் முழிப்பானா என்பது சந்தேகம் தான்... உழவனுக்கு உயர்வு வாரா நாட்டில், சம்பிரதாய உயர் பதவிகளை யார் பெற்றால் என்ன?.... பெறாவிட்டால் என்ன?.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X