பொது செய்தி

தமிழ்நாடு

புழல் சிறையில் சேகர் ரெட்டி ‛குஜால்'?

Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (27)
Advertisement
புழல் சிறை, Puzhal Jail,சேகர் ரெட்டி,Shekhar Reddy, சென்னை,Chennai, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா,Bengaluru Parapana Agrahar, மத்திய சிறை, Central Prison, சசிகலா,Sasikala,  வி.வி.ஐ.பி.,VVIP, வரவேற்பறை,Reception, மாடுலர் கிச்சன்,Modular Kitchen, பிரிட்ஜ்,refrigerator, வாசிங் மெஷின், Washing Machine,ஏ.சி., AC, மின் விசிறி, electric fan, சிறைத் துறை டி.ஐ.ஜி  ரூபா, Prison Department DIG Rupa,

சென்னை:பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சிறை விதிகளை மீறி வெளியே சென்றார். சிறைக்குள் அவருக்கு வி.வி.ஐ.பி.,க்குரிய சலுகைகளைத் தாண்டி, கூடுதல் சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டன.

ஐந்து சொகுசு அறைகள், வரவேற்பறை, மாடுலர் கிச்சன், பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏ.சி., மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டன. இது சிறை விதிகளுக்கு முரணானது என சொல்லி, கர்நாடக மாநில சிறைத் துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா டி மவுட்கில், துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.


சென்னை புழல்

இந்நிலையில், சென்னை புழல் சிறையிலும், இப்படிப்பட்ட விதிமீறல்கள் இருப்பதை சுட்டிக்காட்டி, தமிழக உள்துறைக்கு, பலரும் புகார் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மணல் மன்னன் சேகர் ரெட்டி, அவரது தொழில் பார்ட்னர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர், புழல் சிறையில் இருந்த போது, அவர்களுக்கும் சிறை விதிகளை மீறி பல்வேறு வகையிலான சலுகைகள் அளிக்கப்பட்டன.

இன்றும், புழலில் இருக்கும் பலருக்கும் அப்படிப்பட்ட சலுகைகள் காட்டப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளான கடலூர், வேலூர், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல சிறைகளிலும், இப்படிப்பட்ட விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவை மீது நடவடிக்கை எப்போது என்று கேட்டும், அரசுக்கு புகார்கள் அனுப்பப்பட்டு வருவதாக தெரிகிறது.

தமிழக உள்துறை அதிகாரிகள், சிறைத் துறை உயரதிகாரிகளிடம் இந்தத் தகவல்களை கூறி, சிறை நிர்வாகத்தினரை கவனமாகவும்; எச்சரிக்கையாகவும் செயல்பட கேட்டுக் கொண்டுள்ளதாக, கோட்டை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar - Trivandrum,இந்தியா
26-ஜூலை-201708:58:36 IST Report Abuse
Rajasekar "தமிழக உள்துறை அதிகாரிகள், சிறைத் துறை உயரதிகாரிகளிடம் இந்தத் தகவல்களை கூறி, சிறை நிர்வாகத்தினரை கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட கேட்டுக் கொண்டுள்ளதாக, கோட்டை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன." - அப்பவும் நிறுத்த சொல்லமாடீங்க, கவனமா செயல்பட சொல்லுறீங்க..... உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஜூலை-201708:37:34 IST Report Abuse
Srinivasan Kannaiya சசிக்கு பெங்களூரில் குஜால்... சேகர் ரெட்டி புழலில் குஜால்...
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
26-ஜூலை-201708:05:33 IST Report Abuse
sam இந்த உதவாக்கரைகளுக்கு தான் அரசாங்கங்கள் உள்ளது. நம் நாட்டில் திருடர்களுக்கு தான் காலம். வாழ்க பணநாயகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X