பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.100 கோடி புழங்கும் மொய் விருந்து: புதுக்கோட்டையில் களை கட்டுது

Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (20)
Advertisement
மொய் விருந்து  , FEAST, புதுக்கோட்டை,  Pudukottai,தஞ்சாவூர்  , Thanjavur, வங்கி, bank,மேலாளர்கள், managers, தற்கொலை, suicide,குடும்பங்கள் , families,

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும்தஞ்சை மாவட்டத்தில், 100 கோடி ரூபாய் புழங்கும், 'மொய்' விருந்து விழாக்கள், களை கட்டத் துவங்கியுள்ளன.
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை, கை தூக்கி விடும் விதமாக, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் நடக்கும், 'மொய்'விருந்து விழாக்கள்பிரச்சித்தமானவை.கூடுதல் தொகைகஷ்டப்படும் குடும்பத்தினர் நடத்தும், மொய் விருந்துக்கு வருவோர், தங்களால் இயன்ற உதவியை, 'மொய்' பணமாக வழங்கிச் செல்வர்.
மொய் வழங்குபவர்கள் வீட்டு சுபகாரியங்களின் போது, இவ்வாறு பெறப்படும், மொய் பணத்தை விடகூடுதல் தொகையாக, அதைத் திரும்பசெலுத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மொய் விருந்து விழாக்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில், களைகட்டத் துவங்கியுள்ளது.
முன்பெல்லாம், ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் மொய் விருந்து நடத்துவர்.ஆனால், தற்போது, செலவுகளை குறைக்கும் வகையில், பலரும் ஒரே இடத்தில் கறி விருந்து அளித்து, மொய் பணம் பெறுகின்றனர். ஒவ்வொருவிருந்திலும், பலலட்சங்கள் வசூலாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது களை கட்டத் துவங்கியுள்ள மொய் விருந்தில், நூறு கோடி ரூபாய் வரை பணம் புழங்கும் என்றுகருதப்படுகிறது.


வணிகமயம்:


கஷ்டப்படுபவரை தூக்கி விடுவதற்காக நடத்தப்பட்ட மொய் விருந்து, தற்போது வணிகமயமாகி விட்டதாகவும், வரி ஏய்ப்புக்கு சிலர் பயன்படுத்துவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மொய் விருந்து பிரச்னைகளால், அவமானத்துக்கு பயந்து, பலர் ஊரை விட்டு ஓடி விடுவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் இப்பகுதியில் சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன.
இன்னொருபுறம், மொய்விருந்தில் வசூலித்த பணத்தை, தங்களின்வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டும் எனக் கேட்டு, பல வங்கியின் மேலாளர்களும் மொய் விருந்து வைத்தவர்களை முற்றுகையிடும் காட்சிகளையும் இங்கு பார்க்க முடியும்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
26-ஜூலை-201717:42:28 IST Report Abuse
g.s,rajan போற போக்கிலே இந்தியா முழுக்க மக்கள் மொய் விருந்துதான் வைக்கணும் போல இருக்கு சாமானிய மக்களின் நிலைமை அப்படி மோசமாய் போய்கிட்டு இருக்கு ,என்னத்தைச் சொல்ல ??சோதனை மேல் சோதனை போதுமடா சாமி ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
30-ஜூலை-201715:05:42 IST Report Abuse
TamilArasanஎன்ன ராசா அப்படி மோசம் ஆகிட்டு?? எதோ 2014 ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும் முன்பு நாம் எல்லாம் செல்வத்தில் திளைத்தோம் எல்லோருக்கும் கொட்டோ கொட்டு என்று கொட்டியது ஆனால் தற்போது மோடி வந்ததும் உமக்கு சோதனை மேல் சோதனை வந்து விட்டது - நீ இப்படியே பொலம்பிகிட்டு இரு 2019 காங்கிரஸ் கட்சிக்கு தற்போது இருக்கும் 40 MP தொகுதியும் தேறாது......
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
26-ஜூலை-201716:48:43 IST Report Abuse
A.George Alphonse This is one type of earning money by making the people fools by providing Karry Soru to all the people.This is like a get together and I have seen in one old Tamil movie "Chinna Gounder". Mr.Gowndamani gives meaning for this MOI Soru as"Instead of going to beg outside individually inviting the people to our house by arranging such Virundhu and begging."Now I came to know the real meaning of his dialogue. Very good.
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
26-ஜூலை-201714:42:52 IST Report Abuse
A.Gomathinayagam 100 கோடி அளவிற்கு மொய் விருந்தில் பணம் கையாள படுகிறதென்றால் வருமான வரி துறை நிச்சயம் கண்காணிக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X