ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் அமித்ஷா போட்டி

Added : ஜூலை 27, 2017 | கருத்துகள் (11)
Advertisement
குஜராத், Gujarat,ராஜ்யசபா எம்.பி., Rajya Sabha MP,தேர்தல், Elections,அமித்ஷா,Amit Shah, ஸ்மிருதி இரானி,Smriti Irani, புதுடில்லி, New Delhi, பா.ஜ தேசிய தலைவர் அமித்ஷா  ,BJP National President Amit Shah, காங்கிரஸ் தலைவர் சோனியா, Congress President Sonia, அகமது பட்டேல்,Ahmed Patel,   பல்வந்த்சிங், Balwant Singh,ராஜ்யசபா, Rajya Sabha,

புதுடில்லி : குஜராத்தில் காலியாகி உள்ள 3 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 8 ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஒரு தொகுதியில் தற்போது பா.ஜ., சார்பில் எம்.பி.,யாக உள்ள ஸ்மிருதி இரானியின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.

இருப்பினும் 2வது முறையாக அவரை அதே தொகுதியில் எம்.பி.,யாக்க பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மற்றொரு தொகுதியில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா போட்டியிட உள்ளதாக நேற்று நடந்த பா.ஜ., பார்லி., குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து வேட்புமனு தாக்கல் செய்வதற்காக அமித்ஷா இன்று (ஜூலை 27) குஜராத் செல்ல உள்ளார். இருப்பினும் 3வது தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ., இதுவரை அறிக்விக்கவில்லை. ஆனால் காங்.,ல் இருந்து விலகிய பல்வந்த்சிங் ராஜ்புத்தை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்., தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது பட்டேலுக்கு எதிராக பல்வந்த்சிங்கை நிறுத்தி, மீண்டும் அவர் எம்.பி.,யாவதை தடுக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபாவை போல் ராஜ்யசபாவிலும் தங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்கவே உறுதியாக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை நிறுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
27-ஜூலை-201713:34:06 IST Report Abuse
balakrishnan Congrats Ji .Very good post is awaiting for you in Central government.
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
27-ஜூலை-201713:31:26 IST Report Abuse
A shanmugam எங்கும் எதிலும் பிஜேபி பிரமுகர்களையே நியமித்து வீடுங்க? பிரச்சனையே இருக்காது.
Rate this:
Share this comment
Indian - Bangalore,இந்தியா
27-ஜூலை-201719:00:33 IST Report Abuse
Indianஅறிவாளி ஷண்முகம் குஜராத்தில் பிஜேபிக்கு கிடைக்கும் ராஜ்ய சபா சீட்டை பிஜேபி பிரமுகர்களுக்கு தராமல் உமக்கா தருவார்கள்?...
Rate this:
Share this comment
Cancel
Beatle Bailey - Chennai,இந்தியா
27-ஜூலை-201712:59:17 IST Report Abuse
Beatle Bailey மந்திரி பதவி கண்டிப்பாக உண்டு. ஜெட்லீயிடம் உள்ள ஒன்னு இவருக்கு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X