பீஹார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்| Dinamalar

பீஹார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்

Added : ஜூலை 27, 2017 | கருத்துகள் (51)
Raj Bhawan, பீஹார் முதல்வர், Bihar Chief Minister , நிதிஷ்குமார், Nitish Kumar, சுஷில்குமார் மோடி, Sushilkumar Modi,பா.ஜ.,BJP, ஐக்கிய ஜனதா தளம்,United Janata Dal ,பாட்னா, Patna, பீஹார் ,Bihar, லாலு பிரசாத், Lalu Prasad, தேஜஸ்வி, Tejasvi, கவர்னர் கேசரிநாத் திரிபாதி, Governor Kesarinath Tripathi,

பாட்னா: பீஹார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்று கொண்டார்.
சமீபத்தில் மோசடி வழக்கு தொடரப் பட்டுள்ள, லாலு பிரசாத்தின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வியுடன் இணைந்து ஆட்சியை செயல்படுத்த விரும்பாததால், பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்தார். கவர்னர் கேசரிநாத் திரிபாதியை நேற்று மாலை சந்தித்து, பதவி விலகல் கடிதத்தை கொடுத்து, ஆட்சியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து நிதிஷ் ஆட்சியமைக்க நிதிசுக்கு பா.ஜ., ஆதரவு அளித்தது. இதனையடுத்து நிதிஷ், கவர்னர் திரிபாதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். கவர்னரும் நிதிசை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததுடன், 2 நாளில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
காலை 10 மணியளவில் நிதிஷ்குமார் மீண்டும் பீஹார் முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் திரிபாதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிதிசுடன் பா.ஜ.,வின் சுஷில்குமார் மோடி துணை முதல்வராக பதவியேற்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X