ரஜினிக்கே 'பஞ்ச்' கொடுத்தவன் நான் - பேச்சியப்பன் நெகிழ்ச்சி| Dinamalar

ரஜினிக்கே 'பஞ்ச்' கொடுத்தவன் நான் - பேச்சியப்பன் நெகிழ்ச்சி

Added : ஜூலை 27, 2017
ரஜினிக்கே 'பஞ்ச்' கொடுத்தவன் நான் - பேச்சியப்பன் நெகிழ்ச்சி

ரஜினிகாந்த் நடித்த படங்களில்' ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான் 'போன்ற டயலாக் மற்றவர்களை உச்சரிக்க வைத்தது. அதேபோல் பாடல்களில் 'என்னை ஊட்டி வளர்த்தது தமிழ்பால்...' என்ற பாடல் வரிகளும் ரஜினிக்காகவே அமைக்கப்பட்டு, ஹிட் ஆனது.
ரஜினியின் பஞ்ச் டயலாக்கில் தற்போதைய சூழலிலும் பேசப்படுவது 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்' என்பது தான். 2002ல் பாபா படத்தில் உச்சரித்த ரஜினியின் இந்த டயலாக்கை எழுதியவர் விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த பேச்சியப்பன், 39. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், ஸ்டாண்ட் அப் காமெடி போன்றவற்றில் கலக்கி வருகிறார். ரஜினியிடம் நேரில் சென்று “இந்த டயலாக் எழுதியது நான் தான்” என அறிமுகம் ஆவதும் என் விருப்பம் என்கிறார் இவர்.
இத்துறையில் புகுந்த அனுபவம் பற்றி சொல்கிறார்... ஒரு வாரப்பத்திரிகை 'பஞ்ச் டயலாக்' போட்டி நடத்தியது. இதில் 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்' என்ற எனது டயலாக் முதல் பரிசு பெற்றது. பின்பு தான் தெரிந்தது, இது ரஜினியின் 'பாபா' படத்திற்காக நடத்தப்பட்ட போட்டி என்று. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தான் தேர்வு செய்தார்.
'லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா வருவேன்' என்ற வார்த்தையை ரஜினி உச்சரிக்கும் போது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த டயலாக் மீண்டும் தற்போதைய சூழலில் புத்துணர்வு பெற்று, அனைவரும் உச்சரிப்பதை கேட்கும்போது எனக்கு மகிழ்ச்சி.'திறமைசாலிகள் போராடி ஜெயிக்கிறாங்க, அதிர்ஷ்ட சாலிகள் ஜெயித்து விட்டு போராடுறாங்க 'என்ற டயலாக்கை பார்த்த சுந்தர்.சி, என்னை அழைத்து பாராட்டினார். ரஜினிக்காக தற்போதைய சூழலில் எனது மனதில் எழுந்த பஞ்ச் டயலாக், 'நான் லைட்டா பேசினாலும், இது தாண்டா ஹைலைட்,' என பஞ்ச் உடன் முடித்தார்.வாழ்த்த 99945 32065.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X