பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., உணவு சப்ளை : மைசூரு சகாப்தி ரயிலில் ஆக., 1ல் அறிமுகம்

Added : ஜூலை 27, 2017
Advertisement

சென்னை: ரயில் பயணிகளுக்கு, ரயில் நிலையங்களிலேயே, இந்தியன் ரயில்வே உணவு கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் உணவு தயாரித்து வழங்கப்பட உள்ளது. இதனால், எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள சமையலறை பெட்டிகள், படிப்படியாக நீக்கப்படுகின்றன.
ரயில்வே பயணியருக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. பல்வேறு குறைபாடுகள் கூறப்பட்டதால், ரயில்களில், உணவு தயாரித்து வழங்கும் பணி, ஏழு ஆண்டுகளுக்கு முன், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சில நிலையங்களில், ரயில்வே மூலமும், சில நிலையங்களில், ஐ.ஆர்.சி.டி.சி., மூலமும் உணவு தயாரித்து விற்கப்படுகிறது. 'தனியார் மூலம் விற்கப்படும் உணவுகளில் தரமில்லை; விலையும் அதிகம்' என, பயணியர் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இந்த குறைபாடுகளை தவிர்க்க, மத்திய ரயில்வே அமைச்சர், சுரேஷ்பிரபு, புதிய உணவுக் கொள்கையை சமீபத்தில் அறிமுகம் செய்தார்.
இதன்படி, ரயில் பயணிகளுக்கான உணவு தயாரிப்பு பணிகளை, ஐ.ஆர்.சி.டி.சி.,யும், உணவு வினியோக பணியை, தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ள உள்ளன. பயணியருக்கு தேவையான உணவு வகைகள், ரயில் நிலையங்களில் தயாரிக்கப்பட உள்ளதால், விரைவு ரயில்களில் உள்ள, சமையல் அறை பெட்டிகள் நீக்கப்பட உள்ளன.
இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி கூறியதாவது:பயணியருக்கு தரமான உணவு வழங்குவதற்கு, ரயில்வே வாரியம், ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, இட்லி, வடை, சாப்பாடு, புரோட்டா, சப்பாத்தி, முட்டை, பிரட் உள்ளிட்ட உணவுகள், ரயில் நிலையங்களில், தரமாக தயாரிக்கப்பட்டு, பயணியருக்கு வழங்கப்படும். தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் ரயில்களில், முதற்கட்டமாக, சென்னை சென்ட்ரல் - மைசூரு சதாப்தி ரயில் பயணியருக்கு, ஆக., 1 முதல், இந்த சேவை அறிமுகமாகிறது. மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில், படிப்படியாக இவ்வசதி ஏற்படுத்தப்படும். வரும், டிசம்பருக்குள், இந்தியா முழுவதும், அனைத்து ரயில்களிலும் இவ்வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
பயணியர் பாதுகாப்பு கருதி,
ரயில்களில் சமையலறை பெட்டிகள்
படிப்படியாக நீக்கப்பட்டு, பயணியர் பெட்டி இணைக்கபபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X