பொது செய்தி

இந்தியா

எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள்: சுஷ்மாவை புகழும் பாக்., பெண்

Updated : ஜூலை 28, 2017 | Added : ஜூலை 28, 2017 | கருத்துகள் (59)
Advertisement
டுவிட்டர்,Twitter, சுஷ்மா,  Sushma,பாகிஸ்தான் பெண், Pakistani woman,பிரதமர் ,Prime Minister, புதுடில்லி,  New Delhi,  உடல்நலக்குறைவு,  Health problem,  ஹிஜாப் ஆசிப் ,Hijab Asif,  இந்தியா,India,  சிகிச்சை,  treatment,  இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, Indian Foreign Minister Sushma, விசா,Visa,

புதுடில்லி: உடல்நலக்குறைவு காரணமாக விசா வழங்க நடவடிக்கை எடுத்த சுஷ்மாவை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.சுஷ்மா பாகிஸ்தான் பிரதமராக இருந்திருக்க வேண்டும். எங்கள் நாடு மாறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.பாகிஸ்தானை சேர்ந்த ஹிஜாப் ஆசிப் என்ற பெண், கல்லீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் சிகிச்சை அளிக்க வேண்டி விண்ணப்பம் செய்தார்.
தொடர்ந்து அவர் டுவிட்டரில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவின் பக்கத்தில், என் உடல்நிலை குறித்து தெரிவித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் துணைத்தூதரை சந்தித்து, இந்தியா செல்ல விசா கேட்டுவிண்ணப்பம் செய்தேன். நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் எனக்கூறினார். உடனடி சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது எனக்கூறியிருந்தார்.
இதனை பார்த்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா, சிகிச்சைபெற உள்ள பெண்ணுக்கு உடனடி விசா வழங்குமாறு, இந்திய தூதர் பாம்பாவாலேவுக்கு உத்தரவிட்டார்.இதனையடுத்து அவரும் விசா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும் டுவிட்டரில் சுஷ்மாவுக்கு பதில் அளித்தார்.
விசா வழங்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து ஆசிப் தனது டுவிட்டரில், சுஷ்மா, நான் உங்களை எப்படி அழைப்பது? சூப்பர் பெண்? கடவுள்? உங்கள் பெருந்தன்மையை விவரிக்க வார்த்தையில்லை. உங்களை புகழ்வதை நிறுத்த மாட்டேன். எனது இதயம் உங்களுக்காக துடிக்கும். உங்கள் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளேன். நீங்கள் எங்கள் நாட்டு பிரதமராக இருந்திருக்க வேண்டும். எங்கள் நாடு மாறியிருக்கும் என புகழ்ந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appaavi - aandipatti,இந்தியா
28-ஜூலை-201723:13:24 IST Report Abuse
appaavi மனித நேயம் மதத்தில் இல்லை மனிதனிடம் தான் இருக்கிறது என்பதற்க்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
Rate this:
Share this comment
Cancel
Tamil Selvan - Chennai,இந்தியா
28-ஜூலை-201721:56:51 IST Report Abuse
Tamil Selvan ஹிஜாப் ஆசிப் அம்மணிக்கு இனி ஒரு நாளும் சுகவனத்தில் இடம் கிடையாது?...
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
28-ஜூலை-201721:40:43 IST Report Abuse
Sivagiri சரி சரி . . . GST -கிடைக்குமல்லவா . . . வசூல் பண்ணாம விட மாட்டாங்க . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X