அடுத்தடுத்து எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; குஜராத்தில் காங்.,க்கு பின்னடைவு

Updated : ஜூலை 28, 2017 | Added : ஜூலை 28, 2017 | கருத்துகள் (32)
Advertisement
காங்கிரஸ், Congress, எம்.எல்.ஏ., MLA,  ராஜினாமா, Resignation, குஜராத், Gujarat,ராஜ்யசபா, Rajya Sabha, ஆமதாபாத், Ahmedabad,ஜனாதிபதி தேர்தல், Presidential election, ராம்நாத் கோவிந்த், Ramnath Govind, சங்கர்சிங் வகேலா,Shankersingh Vaghela, பா.ஜ தேசிய தலைவர் அமித்ஷா ,  BJP national president Amit Shah,மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி , Union Minister Smriti Irani, ஸ்மிருதி இரானி,Smriti Irani,  அமித்ஷா , Amit Shah,

ஆமதாபாத்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மேலும் 3 பேர் எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குஜராத்தை சேர்ந்த, 11 காங்., - எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ., சார்பில் போட்டியிட்ட, ராம்நாத் கோவிந்திற்கு ஓட்டு போட்டனர். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான, சங்கர்சிங் வகேலாவும், அந்த கட்சியில் இருந்து விலகினார். விரைவில், ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது. இதில், பா.ஜ., சார்பில், அந்த கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானி ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், சங்கர்சிங் வகேலாவின் உறவினர், பால்வாந்த் சிங் ராஜ்புத் மற்றும் தேஷ்ஸ்ரீ படேல், பி.ஐ.படேல் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தனர்.


மேலும் 3 பேர்:


இந்நிலையில், இன்று, மன்சிங் சவுகான் மற்றும் சன்னபாய் சவுத்ரி உள்ளிட்ட 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தனர். இதனை சபாநாயகர் ராமன்லால் வோராவும் உறுதி செய்துள்ளார். 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாகவும், தற்போது 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வந்துள்ளதாகவும் கூறினார்.


எதிரொலித்தது:

தங்களது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடத்தப்படுவதாகவும், போலீசார் மூலம் மிரடப்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது. இந்த விவகாரம் ராஜ்யசபாவில் எதிரொலித்தது. அங்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் பா.ஜ., மீது புகார் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
29-ஜூலை-201703:38:39 IST Report Abuse
m.viswanathan நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு இதிலே மக்கள் பணியாவது , மண்ணாங்கட்டி
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-201702:34:08 IST Report Abuse
Mani . V "காங்கிரஸுக்கு பின்னடைவு" என்பதைக் காட்டிலும் "மோடியின் (பாஜக) பிரித்தாளும் திறமைக்கு கிடைத்த வெற்றி" என்று தலைப்பு கொடுத்திருந்தால் சரியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
29-ஜூலை-201700:09:02 IST Report Abuse
தேச நேசன் ஆமாமா நாங்க அணில் போல அடி எடுத்து வைக்கணும் , நீங்க வானத்தில் பறந்து கொண்டு இருப்பீர்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X