காஷ்மீருக்கு தனி அமைப்பு துவங்கியது அல் குவைதா| Dinamalar

காஷ்மீருக்கு தனி அமைப்பு துவங்கியது அல் குவைதா

Added : ஜூலை 29, 2017 | கருத்துகள் (23)
Advertisement
பயங்கரவாத அமைப்பு, Terrorist organisation, அல் குவைதா, Al Qaeda, காஷ்மீர்,Kashmir,  புதுடில்லி, New Delhi,ஜம்மு-காஷ்மீர், Jammu and Kashmir, பயங்கரவாதம்,Terrorism, முதல்வர் மெஹபூபா முப்தி, Chief Minister Mehbooba Mufti,  பி.டி.பி.,PTP, பா.ஜ.,  BJP, அன்சர் கஸ்வத் உல் ஹிந்த், Ansar Khaswat ul-Hind,முஸ்லிம், Muslim, இந்திய அரசு,  Indian Government, ஜாகிர் ரஷீத் பட், Jagrish Rashid Bhat, இன்டர்நெட், Internet,

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக, தனி பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சர்வதேச பயங்கரவாத அமைப்பான, அல் குவைதா, பல நாடுகளில், பல்வேறு பெயர்களில் இயங்கி வருகிறது.


அவசியம்:

ஜம்மு காஷ்மீரில், 'அன்சர் கஸ்வத் உல் ஹிந்த்' என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது. அல் குவைதா பயங்கரவாத அமைப்பின், ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை:
முஸ்லிம் நாடான காஷ்மீரில், இந்திய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டிஅடிக்க, புனித போரான, ஜிகாத்தை துவக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது. இந்திய முஸ்லிம்கள், கோழைகளாக உள்ளனர். இந்திய அரசுக்கு எதிராக அவர்கள், ஜிகாத் துவக்க வேண்டும். இதற்காக, காஷ்மீரில், அன்சர் கஸ்வத் உல் ஹிந்த் என்ற அமைப்பு துவக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் கமாண்டராக, ஜாகிர் ரஷீத் பட் நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


முயற்சி :

புதிய பயங்கரவாத அமைப்பின், கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ள பட், காஷ்மீரைச் சேர்ந்தவன். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் கல்லுாரியில் படித்து கொண்டிருந்தவன், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தான். பின், ஹிஸ்புல் அமைப்பிலிருந்து பிரிந்து, தனி பயங்கரவாத அமைப்பை துவக்கினான். இப்போது, அல் குவைதா துவக்கியுள்ள அமைப்பில், கமாண்டராக நியமிக்கப்பட்டு உள்ளான்.


கால் பதிக்க முடியாது:

காஷ்மீரில், புதிய பயங்கரவாத அமைப்பை, அல் குவைதா துவக்கி உள்ளது பற்றி, உளவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'காஷ்மீர் உட்பட இந்தியாவின் எந்த பகுதியிலும், அல் குவைதாவால் கால் பதிக்க முடியாது. 'சர்வதேச பயங்கரவாதத்தில், முஸ்லிம் இளைஞர்களை ஈர்ப்பதற்காக, இன்டர்நெட் மூலம் நடத்தப்படும் முயற்சி இது' என்றனர்.

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
29-ஜூலை-201715:12:32 IST Report Abuse
Sridhar Rengarajan உளவுத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'காஷ்மீர் உட்பட இந்தியாவின் எந்த பகுதியிலும், இஸ்லாமிய பயங்கரவாத அல் குவைதாவால் கால் பதிக்க முடியாது என்கிறார்கள். இதை அலட்சியப்படுத்த கூடாது. எங்கேயோ இருக்குற சிரியாவுக்கு இராக் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு இங்கு கேரளாவில் பெங்காலில் ஆதரவாளர்கள் இருக்கும் போது அலட்சியப்படுத்தாமல் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சந்தேகப்படும் நபர்களை, அமைப்புகளை கண்காணிக்க வேண்டும். மதத்தின் மார்க்கத்தின் பெயரால் மத தலைவர்களால் உசுப்பிவிடப்பட்டு இஸ்லாமிய பயங்கரவாதியாக மாற்ற மூளைச்சலவை செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாத தற்குறிகள், தெருப்பொறுக்கிகள்தான். லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் மூலம் சந்தேகப்படும் நபர்கள்மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Raman - kottambatti,இந்தியா
29-ஜூலை-201714:46:05 IST Report Abuse
Raman இவ்வளவு விஷயம் தெரிந்த நம்ம அரசாங்கம் , என்ன ஆணி புடுங்குதா? நேரா அங்கே போயி அவனுகள புடிச்சி போட்டு தள்ளவேண்டியதுதானே? பயமா அல்லது வெறும் கதையா? சீமான் சொல்லுறமாதிரி, பாகிஸ்தான் இல்லைனா நம்ம பிஜேபிக்கு அரசியல் நஹி ஹை ..........
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
29-ஜூலை-201713:53:04 IST Report Abuse
Pasupathi Subbian காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது. அங்கே பூர்வீக குடிகள் பண்டிட்டுகள். அவர்களை விரட்டிவிட்டு, அவர்களின் சொத்துக்களையும், உடமைகளையும் திருட்டுத்தனமாக கையாடல் செய்துவிட்டு , உரிமை கூறும் இந்த திருடர்களை , ஷரியத் சட்டப்படி தண்டிக்கவேண்டும். வலுக்கட்டாய மத மாற்றம் செய்ததால், அங்கே இருக்கும் இந்திய முஸ்லிம்கள் என்று சொல்லப்படுபவர்கள் , வெறுப்படைந்து உள்ளது நன்கு புலப்படுகிறது. இனி எக்காலத்திலும் இவர்கள் காஷ்மீரை முஸ்லீம் நாடாக மாற்றவே முடியாது. தங்களுடைய திருவிளையாடல்களை அவர்கள் பாகிஸ்தானுடன் நிறுத்திக்கொள்ளட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X