பொது செய்தி

இந்தியா

கோர்ட்டில் நானே வாதிடுவேன் : ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா உறுதி

Added : ஜூலை 30, 2017 | கருத்துகள் (37)
Advertisement
கோர்ட்டில் நானே வாதிடுவேன் : ரூபா உறுதி

பெங்களூரு : ''மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்பாக, கோர்ட்டில் பதிலளிப்பேன்; நானே நேரடியாக சென்று வாதாடுவேன்,'' என, கர்நாடக மாநில, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா தெரிவித்தார்.


மான நஷ்ட ஈடு வழக்கு



கர்நாடகா மாநிலம், பெங்களூரு சிறையில், அ.தி.மு.க., சசிகலாவுக்கு வழங்கிய வசதிகள் குறித்த முறைகேடுகளை கண்டுபிடித்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா மீது, சிறைத்துறை, டி.ஜி.பி.,யாக இருந்த, சத்ய நாராயண ராவ் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சத்ய நாராயண ராவ், சசிகலா தரப்பிடமிருந்து, இரண்டு கோடி ரூபாய் வாங்கியதற்கான ஆதாரம், சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வசதிகள், சிறையில் கைதிகள் சூதாடுவது, கஞ்சா பயன்படுத்துவது போன்ற முறைகேடுகள் சம்பந்தமான வீடியோ மற்றும் படங்களை, கோர்ட்டில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில், ரூபா, மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து ரூபா கூறியதாவது:அரசு ஊழியராக, நேர்மையாகவும், பொறுப்புள்ள அதிகாரியாகவும், பணியாற்ற வேண்டியது என் கடமை. சிறையிலிருந்த முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, டி.ஜி.பி., சத்ய நாராயணாராவுக்கு அறிக்கை சமர்ப்பித்தேன்.


'நோட்டீஸ்'



அறிக்கை கிடைத்ததும், முறைகேடுகளை தடுக்க, அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எனக்கு, 'நோட்டீஸ்' கொடுத்தார். இதன்மூலம், அவர், யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.எனக்கு எதிரான, மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்பாக, கோர்ட்டில், தகுந்த பதில் அளிப்பேன். கோர்ட்டிற்கு, நானே நேரடியாக சென்று வாதாடுவேன். விசாரணையின் முடிவில், உண்மை, வெளிச்சத்துக்கு வரும்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
30-ஜூலை-201717:58:31 IST Report Abuse
LAX அரசியல் வியாதிகளுக்கு A - Z பாதுகாப்பு குடுக்கறாங்களே அதுபோல இவருக்கும் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும்.. கூட இருந்தே குழிபறிச்சு, புரட்சித்தலைவியையே போட்டுத்தள்ளிட்டு நாடகமாடுபவர்கள், எது வேண்டுமானாலும் செய்வார்கள்..
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
30-ஜூலை-201717:55:57 IST Report Abuse
LAX Royal Salute Mam.. ALL THE BEST.. வெற்றி உமதேயாகட்டும்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Varadhaiyah - PUDHUCHERRY,இந்தியா
30-ஜூலை-201713:57:00 IST Report Abuse
Srinivasan Varadhaiyah எல்லாவற்றையும் மறைத்து விட்டிருப்பார்கள் ரூபா மேடம் எச்சிரிக்கையாக இருக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X