பதிவு செய்த நாள் :
மகிழ்ச்சி!
ஜி.எஸ்.டி.,யால் அத்தியாவசிய பொருள் விலை
குறைந்ததாக மோடி...ஒரே மாதத்தில்
பொருளாதார மாற்றம் ஏற்பட்டதாகவும் பெருமிதம்

புதுடில்லி:''அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, பொருளா தாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது; இதன் மூலம், அத்தியா வசியப் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஜி.எஸ்.டி.,யால்,அத்தியாவசிய,பொருள்,விலை,குறைவு,மோடி

'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம், பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். நேற்று, ஒலிபரப்பான நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கூறியதாவது:

வரி விதிப்பு முறை


ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, மிகவும் குறுகிய காலத் தில் அமலுக்கு வந்தது. ஒரு மாதத்துக் குள், அது பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற் றத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து மாநிலங் களுடனும் ஆலோசித்து, அனைவருடன் இணைந்து கொண்டு வரப்பட்ட இந்த வரி

விதிப்பு முறை, கூட்டாட்சி தத்துவத்துக்கு மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது.

இதை அமல்படுத்தியதில், செயல்படுத்தியதில், மாநிலங்களுக்கும் மிகப் பெரிய பங்கு,பொறுப்பு உள்ளது. மக்களிடையே, நேர்மை என்ற புதிய கலாசாரத்தையும், ஜி.எஸ்.டி., ஏற்படுத்தி உள்ளது. வியாபாரிகள், வர்த்தகர்கள் மீது, மக்க ளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

காலம் குறைவு


பொருள்களை ஒரு இடத்தில்இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற் கான காலம் குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. வாகனங்கள் விரைவாக செல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துள் ளது.இவ்வாறு அவர் கூறினார். '

மதவாதம், ஊழலை வெளியேற்றுவோம்'


ரேடியோ உரையில், பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:

கடந்த, 1942ல், மஹாத்மா காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலமே, 1947ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்தின், 70வது ஆண்டை, நாம் கொண்டாட உள்ளோம். அடுத்த, ஐந்து ஆண்டு களுக்குள், மதப் பிரச்னை, ஜாதிப் பிரிவினை, ஊழல், பயங்கரவாதம், வறுமை, அசுத்தம் போன்றவற்றை, நாம் வெளியேற்ற வேண்டும்.

ரக் ஷா பந்தன், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி,

Advertisement

கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகள் அடுத் தடுத்து வர உள்ளன. இந்த நாட்களில், ஏழை, எளிய மக்கள்தயாரிக்கும் பொருட்களை பயன் படுத்துவ தன் மூலம், அவர்களது பொருளாதார நிலை உயரும்.

குஜராத், ராஜஸ்தான், அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகளில், ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன. வெள்ளத்தால், மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்; விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிக்க பட்டு உள்ளனர். அவர்களுக்கு பயிர் காப்பீடு போன்றவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தர விடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வீராங்கனைகளுக்கு அறிவுரை


சமீபத்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்திய, நம் வீராங் கனைகளை சந்தித்தேன்.கோப்பையை வெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம், சோகம் அவர் களிடம் இருந்தது.வழக்கமாக எந்த போட்டி என்றாலும், அதில் ஊடகங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

தோல்வி யடைந்தால், அவர்களுக்கு எதிராக அதிகளவு விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், முதல் முறையாக, கோப்பையை வெல்ல முடியாத போதும், நம் வீராங்கனை களுக்கு, 125 கோடி மக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

நீங்கள் கோப்பையை வெல்லாவிட்டாலும், 125 கோடி மக்களின் இதயத்தை வென்றிருக்கிறீர் கள் என்று, அவர்களிடம் கூறினேன்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanjilaan - Bangalore,இந்தியா
03-ஆக-201713:39:53 IST Report Abuse

NanjilaanMr வாயால வடைக்கும் அவரின் பக்தாள்ஸ்க்கும் சினிமால ஒரே பாட்டுல பணக்காரன் ஆகிற மாதிரி எல்லாமே நிஜ வாழ்க்கையிலயும் நடக்குது போல ...என்ன கற்பனை சக்தி..ஒரு மாசத்துக்கு முன்னால இருந்த விலைய இப்போ இருக்கிற விலைக்கு ஒப்பிட்டு ஒரு லிஸ்ட் போட துப்பு இருக்கா? சும்மா இவரு வந்த பிறகு சூப்பர் மேன் மாதிரி எல்லாத்தையும் சாதிச்சிட்ட மாதிரி என்ன ஒரு buildup ...இவங்களுக்கு எல்லாம் சோசியல் மீடியா தான் லாயக்கு வாய் சவடால் விட...nothing concrete on தி ground ..

Rate this:
A shanmugam - VELLORE,இந்தியா
03-ஆக-201709:29:51 IST Report Abuse

A shanmugamமோடிஜி சொல்வதை யாரும் நம்பாதீங்க GST வரியால் எந்த அத்தியாவசிய பொருள்கள் விலையெல்லாம் குறையவில்லை. அரிசி, பருப்பு, எண்ணை வித்துக்கள், தானியங்கள், பால், பழங்கள், எல்லாம் ஏழை எளிய மக்கள் எட்டிப்பார்க்காத அளவுக்கு விஷம் போல் ஏறி உள்ளது. முன்ன பின்ன மோடிஜியும், அருண்ஜெட்லீயும் கடைத்தெருவுக்கு போய் வீட்டுக்கு வேண்டிய உணவு பொருள்களை வாங்கி பார்த்தால் உண்மை நிலவரம் புரியும். உடனே GST என்ற "பகல் கொள்ளை வரியை" ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய வரியே செயல்படுத்துவார்கள். GST வரியால் ஹோட்டலுக்கு செல்லும் வாடிக்கையாளரும் குறைந்துவிட்டனர். வசதி படைத்தவர்களே ஹோட்டலுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். ஏழை எளிய மக்களை பற்றி சொல்லவேண்டுமா.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
01-ஆக-201723:41:26 IST Report Abuse

g.s,rajanபொதுவா வெள்ளையா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க ,ஆனா சொல்றாரே

Rate this:
மேலும் 86 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X