பதிவு செய்த நாள் :
ஜி.எஸ்.டி.,யால் நாடு வளர்ச்சி அடையும்
அருண் ஜெட்லி நம்பிக்கை

சென்னை:''ஜி.எஸ்.டி., அமல்படுத்தியதால், மாநிலங்களின் வளர்ச்சியில் பாதிப்பு வராது. ஊழல் ஒழிந்து, நாடு அதிவேக வளர்ச்சி பெறும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி.,GST, நாடு வளர்ச்சி, Country Development,அருண்ஜெட்லி,Arun Jaitley, நம்பிக்கை,Trust,Confident,  சென்னை, Chennai,  ஊழல் , Corruption, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, Union Finance Minister Arun Jaitley,சரக்கு மற்றும் சேவை வரி, Goods and Service Tax, பிரதமர் மோடி, Prime Minister Modi, தமிழகம்,  Tamil Nadu,மஹாராஷ்டிரா, Maharashtra, குஜராத், Gujarat, கர்நாடகா , Karnataka, மத்திய அரசு , Central Government,மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் , Ministry of Commerce Nirmala Sitaraman ,  தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார், Tamilnadu Finance Minister Jayakumar,

சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., குறித்த மாநாடு, சென்னை பல்கலையில், நேற்று நடந்தது. இதில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி பேசியதாவது:நாடு முன்னேற, சில கடின முடிவுகளை எடுப்பது கட்டாயம். பிரதமர் மோடியின் துணிச்சலான முடிவால்,

தற்போது,'ஒரேநாடு, ஒரே வரி' என்ற இலக்கை எட்ட முடிந்துள்ளது. அதனால், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நாடு ஒன்றுபட்டு உள்ளது.

முந்தைய அரசுகளும், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்த முயன்றன. தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஆகிய உற்பத்தி மாநிலங்களின் முதல்வர் கள், 'வருவாய் இழப்பால் பாதிக்கப்படுவோம்' என, எதிர்த்தனர்.

தற்போது, அம்மாநிலங்களுக்கு ஏற்படும்,ஐந்தாண்டு கால இழப்பை, மத்திய அரசு ஏற்கும் என, உறுதி அளிக்கப் பட்டு உள்ளது. ஜி.எஸ். டி.,யால், மாநிலங்களின் வளர்ச்சியில் பாதிப்பு வராது. ஊழல் ஒழிந்து, நாடு அதிவேக வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர்பேசினார்.

மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் பேசுகையில், ''இதுவரை, 19 முறை, ஜி.எஸ்.டி., குழு கூடி, விவாதித்து, முடிவுகளை எடுத்துள்ளது. தமிழக வர்த்தகர்களின் கோரிக்கை

Advertisement

களை, ஜி.எஸ்.டி., குழுவிற்கு எடுத்துச் செல் வேன்; பரிசீலித்து,நல்ல முடிவு எடுக்கப் படும்,''என்றார்.

'நல்ல தீர்வு கிடைக்கும்'


தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:

தீப்பெட்டி, பட்டாசு, நெசவு, மீன்வலை உள் ளிட்ட தொழில்களுக்கு, அதிக வரி விதிக்கப் பட்டு உள்ளது. இந்த தொழில்கள், தமிழகத்தில் தான் அதிகம் நடக்கின்றன. அதில் ஈடுபட்டுள்ள வர்கள், ஏழைகள். இந்த வரி விதிப்பால், அத் தொழில்கள் நலியும்; தொழிலாளர்கள் வேலை இழப்பர். இதை, மத்திய அரசிடமும், ஜி.எஸ். டி., குழுவிடமும் தெரிவித்து உள்ளோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சென்னை - கன்னியாகுமரி, தொழில் பெருவழி திட்டம், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம் மற்றும் சமூக வளர்ச்சி திட்டங்களுக் காக, 17 ஆயிரத்து, 74 கோடி ரூபாய் நிதி உத வியை, மத்திய அரசிடம் கேட்டு உள்ளோம்; கிடைக் கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நரி - Chennai,இந்தியா
02-ஆக-201717:27:55 IST Report Abuse

நரிவரப்பையே புடுங்கிடீங்க,,, குடி எங்க இருந்து உயர ...... இருக்கிற மெட்ரோ ரயில் ல போகுறதுக்கு ஆள் இல்ல ..இதுல இரண்டாம் திட்டம் வேற ...எவ்வளவு அடிக்க போறிங்களா ....M T C பஸ் ல ..பிளாஸ்டிக் சீட் உடைஞ்சிருச்சின்னு மெட்டல் சீட் வச்சி பேட்ச் போட்டு இருக்காங்க ..சட்டையை கிழிக்குது .... மோடி புண்ணியவான் துணிக்கு 5 % வரி போட்டு இருக்கார் ...கொள்ளையை கொறச்சிகிட்டு பஸ் ல நல்ல சீட் podunga

Rate this:
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
31-ஜூலை-201720:20:57 IST Report Abuse

Vasanth Saminathanநாடு என்றால் அமைச்சர்கள் அரசு ஊழியர்கள் தானே?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஜூலை-201719:14:28 IST Report Abuse

Pugazh Vஅதெப்படி மாமு கொஞ்சங்கூட வெக்கமே இல்லாம மைக் கைல கிடைச்சதும் அள்ளி விடுறே, ஆமா நீ என்ன பண்ணுவே, எது சொன்னாலும் கை தட்ட ஒரு பெரிய கும்பலே இருக்குதே, நீ கலக்கு மாமு. சாதாரண காபி டீ கூட விலை ஏறிடுச்சு, நீ சர்வ சாதாரணமா நாடு வளந்துடுச்சு அடிச்சு விடு..

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
31-ஜூலை-201719:43:55 IST Report Abuse

சுந்தரம் அவரு மேல தப்பு என்ன இருக்கு? ...

Rate this:
Vignesh Kandasamy - Muscat,ஓமன்
31-ஜூலை-201720:53:56 IST Report Abuse

Vignesh Kandasamyமூலப் பொருள்களின் விலை முன்பைவிட இப்போது குறைவே ...

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X