அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மிரட்டல், Threats,தினகரன், Dinakaran, பழனிசாமி,Palanisamy, வியூகம், strategy, அ.தி.மு.க.,AIADMK, தமிழகம், Tamilnadu,சுற்றுப்பயணம், tour, கைது,arrest, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, திஹார் சிறை, Tihar jail, சசிகலா , Sasikala, சென்னை, Chennai,

'அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணையா விட்டால், ஆக., 5ல், முக்கிய முடிவுகள் எடுக் கப்படும்' என, மிரட்டல் விடுத்துள்ள தினகரன், ஆக., 4ல், அ.தி.மு.க., தலைமையகம் செல்ல வும், பின், தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்து, ஆதரவாளர்களை திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.

மிரட்டல், Threats,தினகரன், Dinakaran, பழனிசாமி,Palanisamy, வியூகம், strategy, அ.தி.மு.க.,AIADMK, தமிழகம், Tamilnadu,சுற்றுப்பயணம், tour, கைது,arrest, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, திஹார் சிறை, Tihar jail, சசிகலா , Sasikala, சென்னை, Chennai,

அதற்கு, 'செக்' வைக்கும் வகையில், கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தால், அவரை கைது செய்து, சிறையில் அடைக்க, முதல்வர் பழனிசாமி, வியூகம் வகுத்துள்ளார். இதன் மூலம், ஆட்சி மட்டுமின்றி, கட்சியை யும், தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, அவர்கள் தயாராகி வருகின்றனர்.'பன்னீர் மற்றும் பழனிசாமி என, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும், 60 நாட்களுக்குள் இணைய வில்லை என்றால், ஆக., 5ல், என் தலைமை யில், முக்கிய முடிவு எடுக்கப்படும்' என, திஹார் சிறையில்இருந்து ஜாமினில் வெளியே வந்ததும், சசிகலா அக்கா மகன், தினகரன் அறிவித்தார்.

கட்சியின் துணை பொதுச்செயலராக, சசிகலா வால் அறிவிக்கப்பட்ட அவர், தீவிர அரசியலில் ஈடுபடாமலும், சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு செல்லாமலும், ஊடகங்

களில் மட்டுமே பேட்டியளித்து வருகிறார்.சில நாட்களுக்கு முன், தன் உறவினரும், சசிகலா வின் சகோதரருமான திவாகரனை, தஞ்சாவூ ரில் சந்தித்து, இணைந்து செயல்பட முடிவு செய்தார்.

சசிகலா குடும்பத்தில், இரு துருவங்களாக இருந்த இவர்கள், ஒற்றுமை அடைந்துள்ள தால், எதிரணியினரான, பழனிசாமி தரப்பினர் உஷார் அடைந்துள்ளனர்.பன்னீர் மற்றும் பழனிசாமி என, இரு அணிகளின் இணைப்பு, இன்னமும் நடக்காததால், ஆக., 5 முதல், தீவிர அரசியலில் ஈடுபட, தினகரன் முடிவு செய்துள் ளார்.ஆக., 7ல், மதுரையில் பிரமாண்டபொதுக் கூட்டம் நடத்த, அவர் திட்டமிட்டு உள்ளார். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்து உள்ளார்.

அதற்கு முன், ஆக., 4ல், சென்னை, ராயப் பேட்டை யில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் செல்ல முடிவு செய்துள்ளார். ஆதரவாளர்களாக உள்ள, முன்னாள் அமைச்சர் கள்,எம்.எல்.ஏ.,க்கள்,நிர்வாகிகளை சென்னை க்கு வரவழைத்து, அவர்களுடன் கட்சி தலை மையகத்திற்குள் நுழைந்து, தன் கட்டுப்பாட்டில் எடுப்பது குறித்து, தஞ்சாவூரில், ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த தகவல், முதல்வர் பழனிசாமிக்கு, உளவு துறை போலீசார் மூலம் தெரிய வந்துள்ளது. உடனே அவர், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.அப்போது, முதல் வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகளுடன், ஆக., 4ல், கட்சி தலைமைய கத்திற்கு சென்று,அதை தங்கள் கட்டுப் பாட்டில் எடுப்பது' என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தினகரனும், அவரது ஆதரவா ளர்களும், கட்சி அலுவலகத்திற்குள் நுழைய

Advertisement

முயன்றால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்து, அவரை கைது செய்ய வேண்டும் எனவும்,முதல்வருக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது.

அதை ஏற்றுள்ள முதல்வர், காய்களை நகர்த்தி வருகிறார். தினகரனை கைது செய்ய உள்ள தகவல், அவரது ஆதரவு எம்.எல்.ஏ., மூலம், தினகரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கு தினகரன், 'கைது நடவடிக்கையை கண்டு நான் பயப்பட மாட்டேன்; அ.தி.மு.க.,வை, பா.ஜ.,விடம் அடகு வைப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கட்சியை காப்பாற்ற போராடுவேன்' என, கூறியுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலாவின் அண்ணன் மனைவி, மறைந்த, சந்தானலட்சுமியின், மூன்றாம் நாள் காரியங் கள், நேற்று, தஞ்சாவூரில் நடந்தன. அதில், பங்கேற்க வந்த, சசியின் சகோதரர் திவாகரன் கூறியதாவது:பன்னீர்செல்வம் எங்கள் பங்காளி தான். அந்த அணியில் இருந்து ஒவ்வொருவ ராக, எங்கள் அணியில் இணைந்து வருகின்ற னர். இதை புரிந்து, பன்னீர் எங்களுடன் இணை வார். அனைவரும் இணைந்து, பணியாற்று வோம்.சிறையில் இருந்து, சசிகலா ஜாமினில் வர, விண்ணப்பித்துள்ளோம். அவர் வந்ததும், கலந்து பேசி, நல்ல முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் கூறுகையில், ''இரண்டு அணிகளும், இணைவதற்கு எங்கள் குடும்பம் இடையூறாக இருப்பதாக கூறினர். இதனால், நான் விலகி இருந்தேன். 60 நாட்களாக விலகி இருந்த எனக்கு, நானே விதித்த கெடு, 4ம் தேதி முடி கிறது.அதன் பின்,என் பணியை துவங்குவேன். ''அணிகளை இணைத்து, கட்சியை பலப்படுத் தும் பணிகளில் ஈடுபடுவேன். அமைச்சர்களுக் கும், எங்களுக்கும், எந்த கருத்து வேறுபாடும் இல்லை,'' என்றார். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (67)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Smsundaram Sundaram - chennai,இந்தியா
31-ஜூலை-201721:27:59 IST Report Abuse

Smsundaram Sundaramthere are chances that dina and stalin join together and form govt

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஜூலை-201719:19:46 IST Report Abuse

Pugazh Vஆமா இங்க பெருசா வியாக்கியானம் பேசுறவங்க, ஆனால் ஸ்டாலின் பற்றிய செய்தியில், திமுக ஆட்சிக்கு வராது, இப்போதைய ஆட்சியே பரவாயில்ல என்று எழுதுவார்கள் ஒருத்தர், இன்னும் மேலே போயி, சசிகலா மேல் என்றே எழுதி விட்டார், நிரூபணமான குற்றவாளிகள் பரவாயில்லையாம் நிரூபிக்கப்படாத போலிக் கேசுகளில் இருக்கிறவர்கள் தான் கூடாதாம். விளங்கிடும் போங்க.

Rate this:
B.b.s Maduranthagan - Bangalore ,இந்தியா
31-ஜூலை-201718:57:12 IST Report Abuse

B.b.s MaduranthaganWe feel very sorry Mrs sasikala all taken money gold from you and now cheating Please take care of you

Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X